Advertisment

இலங்கையில் இம்ரான்கான்: இந்தியா கவனிக்கும் அம்சங்கள் என்ன?

PM Imran Khan Sri Lanka Visit : கொவிட் தொற்றுக்கு பிந்தைய உலகில், இலங்கை நாட்டுக்கும் அரசு முறை பயணம் செய்யும் முதல் தலைவர் இவரே ஆவார்

author-image
WebDesk
New Update
இலங்கையில் இம்ரான்கான்: இந்தியா கவனிக்கும் அம்சங்கள் என்ன?

இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக  கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை வந்தடைந்தார்  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்ற இம்ரான் கானுக்கு விடுத்த அழைப்பை இலங்கை அரசு கடைசியாக ரத்து செய்தது. இருநாடுகளுக்கு இடையேயான நிலைத்த உறவில் இது பெரிய மனக்கசப்பை எற்படுத்தாதது. ஏனெனில், இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மிகவும் உறுதியான நிலையில் உள்ளது.

Advertisment

பிரதமராக பதவியேற்ற பின்னர், இம்ரான் கானின் இந்த கொழும்பு பயணம் அண்டை நாடுகளுக்கு செல்லும் இரண்டாவது பயணமாகும். கடந்த 2018ல் பாகிஸ்தானின் 22 வது பிரதமராக பதவியேற்ற இம்ராம் கான், 2020    நவம்பரில் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 2016 ல் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடைசியாக,  இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட் தொற்றுக்கு பிந்தைய உலகில், இலங்கை நாட்டுக்கும் அரசு முறை பயணம் செய்யும் முதல் தலைவர் இவரே ஆவார். கொழும்பைப் பொறுத்தவரை, இந்த விஜயம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு மனித உரிமைகள் தீர்மானம் அனுசரணை வழங்கிய தீர்மானத்தில் இருந்து விலகுவதாக இலங்கை அரசு அறிவித்த நிலையில் இமரானின் கான் இந்த சுற்றுப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கையில் புனர்வாழ்வு, பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் தொடர்பான இந்த இந்த தீர்மானத்திற்கு முன்னதாக இலங்கை அரசு அனுசரணை வழங்கியது.

இஸ்லாமிய மத நம்பிக்கைக்கு எதிராக, இறந்தவர்களின் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கொரோனா பாதிப்பால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடல்கள், இலங்கை அதிகாரிகள் தகனம் செய்த சம்பவம் இஸ்லாமிய நாடுகளிடையே கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இறந்தவர்களை தகனம் செய்யும் முறை இஸ்லாம் மற்றும் யூத மதத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மதங்களை சேர்ந்தவர்களை அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால், கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்வது தொற்றுநோய் பரவுவதற்கு வழிவகுக்கும் என்று இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது, இஸ்லாமியர்கள் மீதான அடக்குமுறை என்று சமூகப் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

இலங்கையின் மக்கள்தொகையில் சுமார் 11 விழுக்காடு கொண்ட இஸ்லாமிய சமூகம், கடந்த பத்தாண்டுகளாக சிங்கள பவுத்த பெரும்பான்மை சமூகத்துடனும், அரசுடனும் ஒரு பதட்டமான உறவைக் கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை அவ்வப்போது நடைபெறும் கலவரங்கள் அமைதியைக் குலைக்கும். ஆனால், கடந்த 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் அன்று இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு (Sri Lanka Easter bombings) சம்பவத்திற்குப் பிறகு பதட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கின.

இதற்கிடையே, கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடல் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்று பிரதமர் ராஜபக்ஷ சமீபத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பைப் பாராட்டி தனது சுட்டுரையில் கருத்தை பதிவிட்ட இம்ரான் கான், " இலங்கை பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அளித்த உறுதிமொழியை நாங்கள் வரவேற்கிறோம்" என்று தெரிவித்தார். இருப்பினும், பிரதமரின் உத்தரவாதம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. அரசு அதிகாரிகளின் நடவடிக்கை முன்னுக்குப் பின் முரணாகவே இருந்து வருகிறது.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவான அம்னஸ்டி இன்டர்நேஷனல், தனது பயணத்தின் போது இலங்கையுடன் பிரச்சினையை எடுத்துறைக்குமாறு இம்ரான் கானை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்ற இம்ரான் கானுக்கு விடுத்த அழைப்பை இலங்கை அரசு கடைசியாக ரத்து செய்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று இலங்கை ஊடகங்கள் சந்தேகிக்கின்றன. மேலும், இம்ரான் கானின் உரையில் காஷ்மீர் பற்றிய குறிப்புகள் இருந்தால் அது இந்தியாவுடனான நட்பை பாதிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இம்ரான் கானின் இந்த வருகையின் போது, இஸ்லாமியர்களின் உடல் அடக்கம் தொடர்பான கோரிக்கைகளை முறையாக அறிவிப்பதன் மூலம், இரு தரப்பினரும் வெற்றி அடைவதற்கு உதவும். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான மனித உரிமை தீர்மானங்கள் மீதான விவாதங்களின் போது, இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு கொழும்புக்கு தேவைப்படுகிறது. இலங்கை இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம், தனது நாட்டிலும், இஸ்லாமிய நாடுகளிலும் கான் தன்னை முன்னிலை படுத்திக் கொள்ளலாம். மேலும், யுஏஇ, சவுதி அரேபியா போன்ற நாடுகளுடன் கடினமான சூழலை எதிர்கொண்டு வரும் இம்ரான் கானுக்கு இது திருப்பமாக அமையும்.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவுக்குப் பிறகு இலங்கையுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளில் 2-வது பெரிய வர்த்தக நாடாக பாகிஸ்தான் விளங்குகிறது. பிப்ரவரி 18 ம் தேதி பாகிஸ்தான் - இலங்கை வர்த்தகத்துறை செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தைகளின் போது, வர்த்தகம் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்களை விவாதித்திட கூட்டு செயற்குழுவை (Joint Working Group) மீண்டும் செயல்முறை படுத்த முடிவு செய்ததாக டான் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

2005 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜவுளி சிமென்ட் போன்ற பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கும், தேயிலை, ரப்பர் ஆயத்த ஆடைகள் போன்ற பொருட்களை இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் இவ்வொப்பந்தம் சாதகமாக அமைந்தது.

இலங்கையுடனான கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அதன் பண்டைய பவுத்த தொடர்புகளையும் பாகிஸ்தான் கடந்த 10 ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறது.

அனைத்திற்கும் மேலாக, இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு உறவுகள் வலுவான நிலையில் உள்ளது. 1990 ல் இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் இருந்து பின்வாங்கிய பின்னர், இலங்கை இராணுவத்திற்கு எந்தவிதமான பாதுகாப்பு ஆதரவையும் இந்தியா வழங்கவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது சில குறிப்பிட்ட உளவுத் தகவல்களை இந்தியா பகிர்ந்து கொண்டாலும், ஆயுதங்கள், வெடிமருந்துகள், போர் விமானங்கள் உள்ளிட்ட உதவிகளை பாகிஸ்தான் இலங்கையுடன் பகிர்ந்து கொண்டது.

2008ல் இலங்கை உள்நாட்டுப் போரின் போது, பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டபயா ராஜபக்ஷ , பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து அவசர ராணுவ உதவி கோரினார். பாகிஸ்தான் விமானப்படை வீரர்கள் இலங்கையின் வடக்குப் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியாதாக பாகிஸ்தான் ஊடகங்களில் ஆதாரமற்ற செய்திகள் வெளியாகின.

இராணுவத் தலைமையகமான இந்திய இராணுவப் போர்க் கல்லூரியில் இலங்கை இராணுவ அதிகாரிகள் பயிற்சி பெறுவது போல், பாகிஸ்தான் இராணுவ கல்விக்கூடங்களுக்கு பயிற்சிக்கு செல்கின்றனர். இந்த மாத தொடக்கத்தில், பாகிஸ்தான்  கடற்படை சார்பாக நடைபெற்ற கடற்படை  கூட்டு பயிற்சியில் இலங்கை பங்கேற்றது.

இலங்கையுடன் உணர்வு ரீதியாகவும் நெருங்கிய அண்டை நாடாகவும் விளங்கும் இந்தியா, இலங்கை - பாகிஸ்தான்    நட்புறவை ஒரு பெரிய சவாலாக இதுவரை உணரவில்லை.

இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள இஸ்லாமியர்களை தீவிரமயமாக்குவதில் பாகிஸ்தானின் பங்கு குறித்தும், சில மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து வரும் நன்கொடைகள் குறித்தும் இந்திய பாதுகாப்புத்துறை அவ்வப்போது தனது கவலையை பகிர்ந்து கொண்டது.

இலங்கை, சீனா, பாகிஸ்தான் இடையேயான முக்கோண பாதுக்காப்பு உறவுகள் குறித்த கவலையும் இந்தியாவிடம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆனால், அதை  பகிரங்கமாக இந்தியா வெளிப்படுத்தப்படவில்லை.

Imran Khan in Sri Lanka: Multiple facets of a relationship India is watching

India Srilanka Imran Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment