Advertisment

Explained : பாகிஸ்தான் ராணுவத் தளபதி தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கு, புரிந்துக் கொள்வது எப்படி ?

பாகிஸ்தான் பிரதமருக்கும் தலைமை நீதிபதிக்கும், இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக தற்போதைய நிகழ்வு இருக்கலாம் என்று சிலர் நம்புகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
General Bajwa, Pakistan army chief, Imran khan, Pakistan Supreme court

பாகிஸ்தான் பிரதமருக்கும், தலைமை நீதிபதிக்கும், இடையிலான போட்டியின் விளைவாக தற்போதைய நிகழ்வு இருக்கலாம் என்று சிலர் நம்புகிறார்கள்.

கடந்த வாரம், பாகிஸ்தான் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோசா தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு, இம்ரான் கான் தலைமையிலான அரசாங்க நடவடிக்கையை கேள்வி எழுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டது.  ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவை பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகள் நீட்டிப்பிற்கு  போதிய விளக்கம் கொடுக்க இந்த அரசு தவறவிட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

Advertisment

கடந்த 70 ஆண்டுகளாக, நாட்டிற்கு தேவைப்படும் ஒரு ராணுவம் என்பது அல்லாமால் ராணுவத்திற்குள், ரானுவத்துக்காக   ஒரு நாடு என்று அடையாளப்படுத்தப் பட்ட பாகிஸ்தானில் ராணுவத் தளபதியின் பதவியை  உச்சநீதிமன்றம் கேள்விகேட்கும்  நடவடிக்கை அரிதாகவே கருதப்படுகிறது.

என்ன நடந்தது ?  

ராணுவத் தளபதி பதவி நீட்டிப்பை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற பெஞ்ச் நவம்பர் 26ம் தேதியன்று ஒரு மனுவை எடுத்துக் கொண்டது. ரியாஸ் ரஹி  இந்த மனுவை தாக்கல் செய்தார்.  "தொடர் மனுதாரர்" என்று பாகிஸ்தான் நீதிமன்ற வட்டாரங்களில் அறியப்பட்ட வழக்கறிஞர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், முன்னாள் ஜனாதிபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் மற்றும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு  ஆகியோருக்கு எதிராகவும் நீதிமன்றத்தை நாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ரியாஸ் ரஹி- பாகிஸ்தான் வழக்கறிஞர் ரியாஸ் ரஹி- பாகிஸ்தான் வழக்கறிஞர்

 

ஒரு கட்டத்தில், பதவி நீட்டிப்பை  மனுவை ரஹி வாபஸ் பெற முயற்சித்த போதிலும், தலைமை நீதிபதி கோசா அவரை அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை தரும் அரசியலமைப்பு   370 வது பிரிவை இந்தியா ரத்து செய்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு,(ஆகஸ்ட் 19ம்) ராணுவத் தளபதியின் பதவி காலத்தை மூன்று ஆண்டுகளுக்கு ( நவம்பர்  29,2019 முதல் நவம்பர் 2022 வரை)  நீட்டித்தார் பிரதமர் இம்ரான் கான். மேலும் "பிராந்திய பாதுகாப்பு நிலைமை" பதவி  நீட்டிப்புக்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட  வாதங்கள் & தீர்ப்பு : 

எந்த சட்டப்பிரிவின் கீழ் இராணுவத் தலைவர் பதவியை நீட்டிக்கின்றீர்கள் என்று அமர்வு கேட்ட கேள்விக்கு அரசு தலைமை சட்ட அதிகாரி உறுதியான பதில்களை அளிக்க தடுமாறினார்.   ஆகஸ்ட் 19 ம் தேதி இம்ரான்கானால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பதை கண்டறிந்த பெஞ்ச் , பாகிஸ்தானின் ஜனாதிபதியால் மட்டுமே இராணுவத் தலைவரின் நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட முடியும் என்ற அரசியலமைப்பு சட்டத்தையும்  மேற்கோள் காட்டியது .

'3ம் பாலினத்தவர்' என்றால் அஃறிணை உயிரினங்களா?'- திருநங்கைகள் கேள்வி

பாகிஸ்தான் அரசு சட்டக் குழு, இந்த பதவி நீட்டிப்பு  அரசியலமைப்பு  பிரிவு 243-ன் கீழ் தான் செய்யப்பட்டது  (ராணுவப்படை தளபதி )  என்று வாதிட்டனர்.

ஆனால், சட்டப்பிரிவு 243-ஐ வாசித்தால், அது ராணுவத் தளபதி  நீட்டிப்பை கையாள்வதில்லை என்றும், நியமனம் வேறு, பதவி நீட்டிப்பு வேறு என்றும் உச்சநீதிமன்றம் விளக்கம் கொடுத்தது.

உதாரணமாக, ராணுவத் தலைவரை நியமனம் செய்வது தொடர்பான 243 (4) (ஆ) பிரிவில் : “பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி நியமிக்கப்படுவார்…”

இறுதியாக, உச்சநீதிமன்ற அமர்வில் - ராணுவத் தளபதி  பஜ்வாவின் பதவியை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கலாம். மேலும், அத்தகைய நீட்டிப்பை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை அரசாங்கம் கொண்டு வர வேண்டும்.  (ராணுவத் தளபதி பதவி நீட்டிப்பு, பாகிஸ்தானில் ஏழு தசாப்தங்களாக எந்தவொரு சட்ட ஆதரவும் இல்லாமல் நடந்து வருகிறது என்பது இதன் மூலம் தெரியவருகிறது ).

ராணுவத்தின் செல்வாக்கு :

பாகிஸ்தானை பொறுத்த வரையில்,  இராணுவத் தலைவர் மிகவும் சக்திவாய்ந்தவர். உதாரணமாக, நாட்டின் உயர் வழக்கறிஞர்களில் ஒருவரான பாகிஸ்தான் சட்ட மந்திரி ஃபரோக் நசீம் உச்சநீதிமன்றத்தில் ராணுவத் தளபதிக்காக  வாதாட ராஜினாமா செய்தார். தீர்ப்பின் பின்னர், நசீம் மீண்டும் சட்ட அமைச்சராக பதவியேற்றார்.

ராணுவத் தளபதியுன் செல்வாக்கை எடுத்துரைக்க இன்னும் சில நிகழ்வுகளை எடுத்துக் கூற வேண்டும் என்றால், பதவி நீட்டிப்பின் இறுதி உத்தரவுக்கு முந்தைய மாலை, பிரதமர் இம்ரான் கான் உயர்மட்ட சட்ட நிபுணர்களின் கூட்டத்தில்  ராணுவத் தளபதி பஜ்வாவும் கலந்து கொண்டிருக்கிறார்.

கடந்த இரண்டு தசாப்தங்களில், ஜெனரல் ரஹீல் ஷரீஃப் மட்டுமே தனது பதவியில் இருந்து சரியான நேரத்தில் ஓய்வு பெற்றவர். ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கயானி, முஷாரஃப் ஆகியோர் தங்கள் பதவிக் காலம் முடிந்த பிறகும் ராணுவத் தளபதியாக பணியாற்றினார். அஷ்பக் பர்வேஸ் கயானி கயானியின் நீட்டிப்புக்கு எதிராக  2012ல் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட வழக்கு அப்போதைய நீதிபதி  அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பாகிஸ்தானில் இராணுவம் - நீதித்துறை இணைப்பு எப்படி: 

2007 ல் முஷாரப்புக்கும், அப்போதைய பாகிஸ்தான் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரிக்கும் நடந்த கசப்பான அனுபவத்தை நினைவூட்டுவதாகவே தற்போதைய நிகழ்வு அமைந்திருக்கிறது. நீதிபதி இப்திகார்  முஷாரப் இராணுவ ஆட்சியால் நீக்கப்பட்டார். இறுதியில், இது முஷாரஃப் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பங்களித்தது

சமீபத்திய வழக்கின் விசாரணையின் போது, ​​தலைமை நீதிபதி  தனது கருத்துகளை இவ்வாறாக பதிவு செய்தார்:" இராணுவச் சட்டத்தை ஆராயும் போதெல்லாம், இந்தியா மற்றும் சிஐஏவின் முகவர்கள் என்று எங்கள் மீது முத்திரை குத்தப்படுகிறது ." ஆயினும், "கேள்விகளைக் கேட்பது எங்கள் உரிமை" என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் பிரதமருக்கும் தலைமை நீதிபதிக்கும், இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக தற்போதைய நிகழ்வு இருக்கலாம் என்று சிலர் நம்புகிறார்கள்.  நீதித்துறை முன்னாள் பிரதமர்  ஷெரீப்பை பாதுகாக்கின்றது என்றா இம்ரான் கான் கருத்துக்கு, ஷெரீப்பின் பெயரை எக்சிட் கண்ட்ரோல்  பட்டியலில் இருந்து நீக்குவதற்கும்  நீதித்துறைக்கும் எந்த தொடர்பு இல்லை என்று சமீபத்தில் நீதிபதி கோசா தெளிவுபடுத்தியிருந்தார்.

ஏன், பணக்காரர்களுக்கு ஒரு நியாயம் , ஏழைகளுக்கு ஒரு நியாயம் என்பதை  கேள்விகேட்கும் விதமாக நீதித் துறை செயல்படவேண்டும் என்ற பிரதமர் இம்ரான் கான் கருத்தை  தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோசா கடுமையாக எதிர்த்தார்.  ஒரு பிரதமரை குற்றவாளி கூண்டில் ஏற்றியுள்ளோம், மற்றொரு பிரதமரை தகுதி நீக்கம் செய்துள்ளோம்.... நீதிமன்றத்தின் கண்ணியத்தை குறைக்காதிர்கள் என்றும் பதில் கூறினார்.

இந்தியா எவ்வாறு யோசிக்க வேண்டும்  : 

பயங்கரவாத பிரச்சினையில் பல்வேறு உலக அமைப்புகளில்  பாகிஸ்தானை தனிமைபடுத்த இந்தியா முயற்சித்து வருகிறது.  மேலும், அடுத்த  ஆண்டு பிப்ரவரி மாதம் நிதி நடவடிக்கை பணிக்குழு மீண்டும் பாகிஸ்தானின் தடுப்புப்பட்டியலில் சேர்க்கலாமா ? என்ற கேள்வியை விவாதிக்க உள்ளது. எனவே,  தற்போதைய ராணுவத் தளபதி நெருக்கடி, பாகிஸ்தானின் மக்கள் பிரதிநிதி ஆட்சி, ராணுவத்தை பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்டாயப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும். இது நடந்தால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்பட வாய்ப்பு கிடைக்கும்.

மறுபுறம், இந்த நிகழ்வு இந்தியாவிற்கு மிகவும் பாதகமாக இருக்கவும் வாய்ப்புள்ளது. அதன் ஸ்திரதன்மையும், நாட்டு மக்களிடம் அதன் மீதான உணர்வை அதிகப்படுத்த  ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ரானும் காஷ்மீரில் தனது அத்துமீறல்களை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

எவ்வாறாயினும், புது டெல்லி அனைத்தையும் கவனத்தில் கொண்டு, நடக்கும் நிகழ்வுகளை உற்று பார்ப்பது நல்லது.

Pakistan Pakistan Pm Imran Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment