பாமாயில் இறக்குமதி கட்டுப்பாடு: இந்தியா-மலேசியா வர்த்தகத்தின் இயக்கவியல் என்ன?

கச்சா எண்ணை இறக்குமதியை மலிவாக மாற்றுவது அதானி வில்மர் குழுமம் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு லாபகமாக அமையும்.

By: Updated: January 29, 2020, 06:25:12 PM

இந்திய அரசு கச்சா பாமாயில் மற்றும் refined, bleached and deodorised என்று சொல்லப்படும் தயாரிப்புக்கு பிந்தைய சுத்தப்படுத்தப்பட்ட பாமாயிலின் இறக்குமதி வரியை குறைத்தது. மேலும், இந்தியா அரசு ஆர்.பி.டி ரக பாமாயில் வகையினை தனது இறக்குமதி பட்டியலில் ‘கட்டுப்பாடு’  என்ற பிரிவுக்கு நகர்த்தியுள்ளது. இதுவரை இந்த ஆர்.பி.டி இறக்குமதி பட்டியலில் ‘தடையற்ற பிரிவில்’ இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாமாயில் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது குறித்த விவ்வதத்தை 2019 ஆம் ஆண்டு ஜூலை பட்ஜெட் தொடரிலே இந்தியா தொடங்கியது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்தம் சட்டம் போன்ற இந்தியாவின் உள் விவகார கொள்கையை விமர்சித்த மலேசிய பிரதமர் மகாதீர் பின் முகமதுவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போதைய நடவடிக்கை கருதப்படுகிறது.

பணமோசடி, வெறுக்கத்தக்க பேச்சு,பயங்கரவாதத்துடனான தொடர்பு போன்ற குற்றச்சாட்டுகளில் தேடப்படும்  இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக்கிற்கு,2017ஆம் ஆண்டு முதல் மலேசிய அரசு அடைக்கலம் கொடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் காரணங்களால் மலேசிய பாமாயில் இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளதா?

உண்மையில் இல்லை. ஆர்.பி.டி பாமாயில் இறக்குமதியை  இந்தியா கட்டுபடுத்திகிறதே தவிர, முழுவதுமாக தடை செய்யவில்லை. இந்த இறக்குமதி கட்டுப்பாடு மலேசியாவிற்கு  மட்டுமல்ல, அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். மேலும், கச்சா பாமாயில் இறக்குமதிக்கு எந்தவகையான கட்டுப்பாடும் இல்லை.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

இந்தியாவின் வர்த்தக வகைப்பாடு முறையின் கீழ் ( trade classification system), அரசு வர்த்தக நிறுவனங்களால் (உதாரணமாக – இந்திய உணவுக் கழகம் ) மட்டுமே இறக்குமதி செய்யப்படும் என்ற வரையறுக்கப்பட்ட பொருட்களைத் தவிர, அனைத்து பொருட்களும் சுதந்திரமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன (இறக்குமதி பட்டியலில் அந்த குறிப்பிட்ட பொருள் கட்டுப்பாடு (அ) தடை என்ற பிரிவில் இல்லாதிருக்க வேண்டும்)

பொதுவாக, கட்டுப்பட்டு பட்டியலில்  உள்ள பொருட்களை  இறக்குமதி செய்ய சிறப்பு உரிமம் தேவைப்படும். ஆனால், இதுநாள் வரையில் மலேசிய ஆர்.பி.டி பாமாயில் கட்டுப்பாடுகளின் தன்மைகள் குறித்தும் அதற்கு தேவைப்படும்  உரிமங்கள் குறித்தும் எந்த அறிவிப்பையும் அரசு   வெளியிடவில்லை.

இருப்பினும், ஆர்.பி.டி பாமாயில்  ஏற்றிச் செல்லும் பல  வாகனங்கள் இந்திய  துறைமுகங்களில் நிற்கப்பட்டிருப்பதாக  கூறப்படுகிறது. ஏனெனில், இந்தியாவின் வணிகர்கள் ஆர்.பி.டி பாமாயிலை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்தியா எவ்வளவு பாமாயில் இறக்குமதி செய்கிறது?

இந்தியா 2018-19 ஆம் ஆண்டில் 64.15 லட்சம் மெட்ரிக் டன் கச்சா பாமாயிலையும், 23.9 லட்சம் மெட்ரிக் டன் ஆர்பிடி பாமயிலையும்  இறக்குமதி செய்தது.  இதில் பெரும்பகுதி இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதியானவை. (விளக்கப்படங்கள் மேலே)

2019-20 ஆம் ஆண்டில் இந்தியா 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள காய்கறி எண்ணெயை இறக்குமதி செய்ததாக வர்த்தக அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது, இந்தியாவின் இறக்குமதி பட்டியலில் ஐந்தாவது மிக மதிப்புமிக்க இறக்குமதியாகும்.  (கனிம எண்ணெய் ($ 1 141 பில்லியன் ), தங்கம் ($ 32 பில்லியன்), நிலக்கரி ($ 26 பில்லியன்) தொலைதொடர்பு சாதனங்கள் ( $ 17 பில்லியன்).

இந்தியாவுக்கு ஏன் இவ்வளவு பாமாயில் தேவை?

பாமாயில் இயற்கையாகவே கிடைக்கும் மலிவான சமையல் எண்ணெய் ஆகும். அதன் இயல்பான தன்மை, அனைத்து வகையான உணவுகளிலும் பயன்படுத்த உதவுகிறது. மேலும் அதிகமான வெப்பநிலையில் பாமாயிலின் தன்மை மாறுவதில்லை, எனவே சமையல் மறுபயன்பாட்டிற்கும்  இது  பயன்படுகிறது. பாமாயில் நாம் பயன்படுத்தும் வனஸ்பதி (ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய்) முக்கிய மூலப்பொருளாகவும் உள்ளது. எவ்வாறாயினும், பெரும்பாலான இந்திய வீடுகளில் பாமாயில் பயன்படுத்துவதில்லை.

கச்சா பாமாயில் தொடர்ந்து இறக்குமதி செய்யப்படுவதாலும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி முழவதுமாக தட்டை செய்யப்படவில்லை என்பதாலும் தற்போதைய அரசின் முடிவு உணவு பணவீக்கத்தை(உடனடியாக) பாதிக்கும் என்பது சாத்தியமில்லை.

முடிவால் யார் பாதிக்கப்படுவார்கள்?

இந்தோனேசியாவும், மலேசியாவும் இணைந்து உலகின் 85% பாமாயிலை உற்பத்தி செய்கின்றன.மேலும், பாமாயில் இறக்குமதியில் மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது.   மலேசியாவின் சுத்திகரிப்பு திறன் அதன் உற்பத்தி திறனுக்கு சமமாக உள்ளதால்,சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை ஏற்றுமதி செய்வதில் மலேசியா  அரசு மிக ஆர்வமாக உள்ளது. மறுபுறம், இந்தோனேசியா அதிக கச்சா பாமாயிலை இந்தியாவிற்கு வழங்குவதால், இந்தியா தனது முழு சுத்திகரிப்பு திறனைப் பயன்படுத்த முடிகிறது.

இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யும் கச்சா பாமயிலில் கொழுப்பு, ஈறு,மெழுகு போன்ற பொருட்கள் படிந்திருக்கின்றன. சுத்திகரிப்பின் போது பாமாயிலில் இருக்கும் அமிலங்கள் நடுநிலையாக்க்கபடுகிறன, பிற பொருட்களை வடிகட்டப்படுகின்றன .

வடிகட்டி வெளுக்கப்படுவதால் மீண்டும் மீண்டும் எண்ணெய் பயன்படுத்தினாலும் நிறம் மாறுவதில்லை. எண்ணெய் வாசனையை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் வேதியியல் ரீதியாக அகற்றப்படுகின்றன. இந்த முழு செயல்முறையும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் மதிப்பை சுமார் 4% அதிகரிக்கிறது.

கச்சா பாமாயில் இறக்குமதி செய்ய வேண்டிய போக்குவரத்து செலவுகளையும் நாம் கனகிட்டால் சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி மலிவாக இருக்கும்.

இருப்பினும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயிளின் மீதான  இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும் என்று சுத்திகரிப்புத் துறையைச் சார்ந்தவர்கள் அரசிற்கு அழுத்தம் தருகின்றனர். இதனால், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை இறக்குமதி செய்வதை விட கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது  மலிவாக மாற்றும். இதனால், அதானி வில்மர் குழுமம் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு லாபகமாக அமையும் .

ஆர்பிடி பாமாயில் இறக்குமதியை கட்டுப்படுத்துவது விவசாயிகளுக்கு உதவுமா?

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது விவசாயிகளுக்கு நேரடியாக உதவாது. ஏனெனில், அவர்கள் சுத்திகரிப்பு துறையோடு சம்பந்தப்படவில்லை.  இருப்பினும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் விலை அதிகரிப்பதால், விவசாயிகளின் வருவாயும் அதிகமாகும்.

இருந்தாலும், தற்போது இறக்குமதி கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் உள்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த நீண்ட காலமாகும்.ஒர் பனை மரம் தனது விளைச்சலை கொடுக்க நான்கு ஆண்டுகள் வரை எடுக்கும்.

மேலும், கச்சா பாமாயிலின் இறக்குமதி செய்ய தற்போது தடையேதும் இல்லாதிருப்பதால், விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.

மலேசியா எவ்வாறு பாதிக்கப்படும்?

இந்தியாவுக்கு வர்த்தக ரீதியாக பதிலடி கொடுக்கும் மனநிலை இல்லை என்று மலேசியா தெரிவித்துள்ளது. பிப்ரவரி 2011 ஆம் ஆண்டு “மலேசியா- இந்தியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்” என்ற வர்த்தக  சுதந்திர ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், கச்சா பாமையில் எண்ணைக்கான  இறக்குமதி வரியை இந்தியா 2019 டிசம்பருக்குள் 37.5% ஆக (40% இலிருந்து) குறைக்க வேண்டும், மற்றும் ஆர்பிடி பாமாயில் இறக்குமதி வரியை டிசம்பர் 31, 2018 க்குள் 45% (54% இலிருந்து) குறைக்க வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட பாமியில் இறக்குமதி உரிமங்களை வணிகர்களுக்கு இந்தியா அரசு வழங்காவிட்டால்,மலேசியா தனது புதிய சந்தையைக் தேட வேண்டியிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Palm oil imports and india malaysia trade dynamics

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X