ஒரு நபர் தனது பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்கத் தவறினால், பான் செயலிழந்துவிடும். அத்தகைய சூழ்நிலையில், அந்த நபர் தனது பான் எண்ணை வழங்கவோ, தெரிவிக்கவோ அல்லது குறிப்பிட்டு காட்டவோ முடியாது. மேலும், அத்தகைய தோல்விக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் அவரே பொறுப்பாவார்.
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வரி செலுத்துவோர் தங்கள் நிரந்தர கணக்கு எண்ணை (பான் எண்) ஆதார் எண்ணுடன் இணைக்க ஜூன் 30, 2023 வரை அவகாசம் வழங்கியுள்ளது. அனைத்து வரி செலுத்துபவர்களும் இணைக்க வேண்டியது கட்டாயமாகும். இணைக்கவில்லை என்றால் ஜூலை 1, 2023 முதல் பான் செயல்படாது.
பத்திரச் சந்தையில் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பான் மட்டுமே அடையாள எண் என்பதால், பங்குச் சந்தையில் பரிவர்த்தனைகளைத் தொடர, ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களுக்கு அவர்களின் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்குமாறு மூலதனச் சந்தை கட்டுப்பாட்டாளர் செபி அறிவுறுத்தியுள்ளது.
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கு காரணம் என்ன?
ஒரு நபருக்கு பல நிரந்தர கணக்கு எண்கள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஒரு பான் எண் ஒதுக்கப்பட்டிருப்பதைக் கண்டதை அடுத்து, பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதாக வருமான வரித்துறை அறிவித்தது. பான் தரவுத்தளத்தை நகலெடுப்பதற்கான வலுவான வழியைப் பெற, ஆதாரைப் பெறத் தகுதியுள்ள ஒரு வரி செலுத்துவோர், பான் மற்றும் வருமானத்திற்கான விண்ணப்பப் படிவத்தில் தனது ஆதார் எண்ணைக் குறிபிடுவது கட்டாயமாக்கப்பட்டது.
யாரெல்லாம் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும்?
மார்ச் 2022 இல் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, ஜூலை 1, 2017 அன்று பான் அட்டை எண் வைத்துள்ள ஒவ்வொரு நபரும் தனது ஆதார் எண்ணைத் தெரிவிக்க வேண்டும் என்பதை வருமான வரிச் சட்டம் கட்டாயமாக்குகிறது. ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும். பான் உடன் ஆதாரை இணைப்பதை ஜூன் 30, 2023 அன்று அல்லது அதற்கு முன் செய்யப்பட வேண்டும், இல்லையெனில் பான் செயலிழக்கும்.
யாரெல்லாம் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கத் தேவையில்லை?
இந்த இணைப்பு கட்டாயம் இல்லாத சில வகை தனிநபர்கள் உள்ளனர்.
*எண்பது வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இணைக்கத் தேவையில்லை.
*வருமான வரிச் சட்டத்திற்கு உள்ளே வராதவர்கள்.
*இந்தியாவின் குடிமகனாக இல்லாதவர்கள்.
ஜூன் 30-க்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?
ஒரு நபர் தனது பான் எண்ணை ஆதாருடன் இணைக்கத் தவறினால், பான் செயலிழந்துவிடும். அத்தகைய சூழ்நிலையில், அந்த நபர் தனது பான் எண்ணை வழங்கவோ, தெரிவிக்கவோ அல்லது குறிப்பிடவோ முடியாது. மேலும், அத்தகைய தோல்விக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் அவரே பொறுப்பாவார். இணங்காததன் முக்கிய தாக்கங்களில் சில:
*செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி ஒரு நபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாது.
*நிலுவையில் உள்ள வருமானங்கள் செயலாக்கப்படாது.
*செயல்படாத பான்-களுக்கு நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப் பெற முடியாது.
*பான் செயலிழந்தால், குறைபாடுள்ள வருமானம் போன்ற நிலுவையில் உள்ள நடவடிக்கைகளை முடிக்க முடியாது.
*பான் செயல்படாததால் அதிக விகிதத்தில் வரி கழிக்கப்பட வேண்டும்.
இந்த விளைவுகளைத் தவிர, வங்கிகள் போன்ற பிற நிதி பரிவர்த்தனைகளைச் செய்வதில் நபர் சிரமங்களைக் காணலாம். ஏனெனில், இந்த பரிவர்த்தனைகளுக்கு பான் ஒரு முக்கியமான வாடிக்கையாளரின் விவரங்களின் அளவுகோலாகும்.
முதலீட்டாளர்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதை செபி ஏன் கட்டாயமாக்கியுள்ளது?
பத்திர சந்தையில் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பான் முக்கிய அடையாள எண் மற்றும் வாடிக்கையாளரின் விவரங்கள் (KYC) தேவைகளின் ஒரு பகுதியாக இருப்பதால், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் செல்லுபடியாகும் KYC-ஐ உறுதி செய்ய அனைத்து செபி-பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்கள் (MIIs)கட்டாயம் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும்.
தற்போதுள்ள அனைத்து முதலீட்டாளர்களும் பத்திரச் சந்தையில் தொடர்ச்சியான மற்றும் சுமூகமான பரிவர்த்தனைகளுக்கான காலக்கெடுவுக்குள் தங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதை உறுதிசெய்ய வேண்டும், மார்ச் 30, 2022, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) சுற்றறிக்கைக்கு இணங்காததன் விளைவுகளைத் தவிர்க்க வேண்டும். KYC இணக்கமற்றதாகக் கருதப்படும். மேலும், PAN மற்றும் ஆதார் இணைக்கப்படும் வரை பத்திரங்கள் மற்றும் பிற பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடுகள் இருக்கும்.
பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது எப்படி?
வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.incometax.gov.in இல் உள்ள Link Aadhaar விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் ஒருவர் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"