தடுப்பூசி போட்டவர்களுக்கு பாராசிட்டமால் தேவையா ? – நிபுணர்களின் விளக்கம்

மற்ற தடுப்பூசிகளை போலவே, கொரோனா தடுப்பூசிகளும் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பெரும்பாலானவை லேசான அல்லது மிதமானவை ஆகும். அவை சில நாட்களுக்குள் மறைந்துவிடும்

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடேக் நிறுவனம், தங்களது கோவாக்சின் தடுப்பூசிக்குப் பின்னர் பாராசிட்டமால் அல்லது வலி நிவாரணிகள் எடுத்துக்கொள்வது தேவையில்லை என தெரிவித்துள்ளது. தற்போது, சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகிறது.

மற்ற தடுப்பூசிகளை போலவே, கொரோனா தடுப்பூசிகளும் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பெரும்பாலானவை லேசான அல்லது மிதமானவை ஆகும். அவை சில நாட்களுக்குள் மறைந்துவிடும்.இதற்கு வலி நிவாரணி அல்லது பாராசிட்டமாலைப் பயன்படுத்த பலர் விரும்பினாலும், வல்லுநர்கள் இவற்றை வழக்கமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க அறிவுறுத்துகிறார்கள் என்பது தான் உண்மை.

இதுதொடர்பாக பாரத் பயோடோக் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், ” சில தடுப்பூசி மையங்களில் சிறாருக்கு மூன்று பாராசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்பட்டு அவற்றை முறையே மூன்று வேளை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாகக் தகவல் கிடைத்தது.

கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய பின்னர் வலி நிவாரணிகள், காய்ச்சல் மாத்திரை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

30,000 தனிநபர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி மேற்கொண்ட கிளினிக்கல் பரிசோதனையில் 10 முதல் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டன. அவையும் மிக லேசான அறிகுறிகளாக இருந்தன. ஒன்றிலிருந்து, இரண்டு நாட்களில் அந்த பக்கவிளைவுகளும் மருந்து ஏதும் கொடுக்காமலேயே நீங்கியது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் நவம்பர் 2021 இல் தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வை மேற்கோள் காட்டி பேசியிருந்தார். அதில், “குறிப்பிட்ட சிலருக்கு மருத்துவர்கள் பாராசிட்டமால் வழங்கிட பரிந்துரைக்கப்படாவிட்டால், பாராசிட்டமால் தேவையில்லை. பெரியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் குழந்தைகளின் (2-18 வயது) சோதனைகளின் அடிப்படையில், இது தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகள், மற்ற தளங்களைப் பயன்படுத்தும் தடுப்பூசிகளை விட மிகக் குறைவாக உள்ளது என தெரிவித்தார்.

பாராசிட்டமால் காரணம் என்ன?

முன்னணி நோயெதிர்ப்பு நிபுணர் டாக்டர் ககன்தீப் காங் கூறுகையில், ” பொதுவாக தடுப்பூசி செலுத்தியதும் சிறியளவில் வீக்கம் ஏற்படும் பட்சத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தடுப்பூசி செயல்பாடு சிறப்பாக இருப்பதாக அர்த்தம். ஒருவேளை, உடனடியாக எதிர்ப்பு மருந்தைக் கொடுக்கும் பட்சத்தில், தடுப்பூசியின் செயல்பாடு குறையக்கூடும். தடுப்பூசி போட்ட உடனே பாராசிட்டமால் அல்லது தடுப்பு மருத்தை எடுத்துக்கொள்வது, நோயெதிர்ப்பு சக்தி உருவாகுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துவிடும் என்று நம்பகதரான ஆய்வு முடிவுகள் இருக்கிறது” என தெரிவித்தார்.

ஐசிஎம்ஆர் தேசிய பணிக்குழுவின் உறுப்பினர் டாக்டர் சஞ்சய் பூஜாரி பேசுகையில், “தடுப்பூசிகளால் ஏற்படும் பக்க விளைவுகள் எப்போதும் ஏற்படுவதில்லை. பெரும்பாலும் லேசானவை தான். 1 அல்லது 2 நாள்களில் சரியாகிவிடும். பாராசிட்டமால் மற்றும் பிற தடுப்பு மருந்துகள் எடுக்கையில், தடுப்பூசியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதற்கு முன்னரோ அல்லது பின்னரோ இந்த மருந்துகளை வழக்கமாகப் பயன்படுத்துவது நல்ல முடிவு அல்ல” என்றார்.

குழந்தைகளும், பாராசிட்டாமலும்

க்ளவுட்னைன் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் உமேஷ் வைத்யா கூறியதாவது, ” குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் காய்ச்சல் இல்லாத பட்சத்தில், பாராசிட்டமால் வழக்கமாகவே கொடுக்கப்படுவதில்லை. தற்போது, பெரியவர்களை விட சிறார்கள் தடுப்பூசிகளை நன்றாக பொறுத்துக்கொள்கிறார்கள். பாராசிட்டாமல் மருந்தை 100 ஆண்டுகளுக்கும் மேலாக சிறார்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது . குழந்தை மருத்துவத்தில் மகிவும் பாதுகாப்பான மருந்து. எனவே தடுப்பூசிக்குப் பிறகு காய்ச்சலை தடுத்திட பாராசிட்டாமல் கொடுப்பது எந்தத் பயமும் தேவையில்லை” என்றார்.

தொற்று நோய் ஆலோசகர் டாக்டர் அமித் டிராவிட் கூற்றுப்படி, ” சிறார்களுக்கு பாராசிட்டமாலின் ஹெபடோடாக்சிசிட்டி பற்றி கவலை இருக்கலாம். இது ஒரு கல்லீரல் நச்சு மருந்து. எனவே தடுப்பூசிக்குப் பிறகு அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பாராசிட்டாமல் கொடுக்கப்பட வேண்டும்” என்றார்.

பக்க விளைவுகள் ஏன் வருகிறது?

தடுப்பூசி செலுத்தியதும் ஏற்படும் பக்கவிளைவுகள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுவதை காட்டுகிறது. இவை ஒருவரின் அன்றாட நடவடிக்கைகளைச் செய்யும் திறனைப் பாதிக்கலாம் ஆனால், சில நாள்களில் சரியாகிவிடும்.

டிசம்பர் 16, 2021 அன்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC)புள்ளிவிவரங்களின்படி, சிலருக்கும் பக்க விளைவுகள் இல்லை. அதே போல், ஒவ்வாமை எதிர்வினைகள் அரிதானதாகவே இருந்தது.வலி, சிவத்தல், வீக்கம், தலைவலி, தசை வலி, காய்ச்சல் மற்றும் குமட்டல் ஆகியவை தான் தடுப்பூசியின் சாதாரண பக்கவிளைவுகள்.

தடுப்பூசி போட்ட பிறகு ஏற்படும் வலி மற்றும் அசௌகரியங்களுக்கு இப்யூபுரூஃபன், அசெட்டமினோஃபென், ஆஸ்பிரின் (18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்) அல்லது ஆண்டிஹிஸ்டமின்கள் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு மருத்துவரிடம் கேட்க வேண்டும் என சிடிசி அறிவுறுத்தியள்ளது.

பக்கவிளைவுகளைத் தவிர்க்கும் நம்பிக்கையில் தடுப்பூசிக்கு முன் மருந்துகளை எடுத்துக்கொள்வது தவறான முடிவாகும். அதை ஒருபோதும் யாரும் அறிவுறுத்தவில்லை.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூற்றுபடி, உடலில் தடுப்பூசியின் செயல்பாட்டை மருந்துகள் எவ்வாறு தடுக்கும் என்பது தெரியவில்லை. மற்ற காரணங்களுக்காக மருந்துகள் எடுக்கப்படும் பட்சத்தில், அதனை முன்பு போலவே தொடர்ந்து எடுக்க வேண்டும்” என கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Paracetamol after jab only if doctor advises it says experts

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com