Advertisment

வாழும் உயில், செயலற்ற கருணைக்கொலை நடைமுறையை எளிதாக்கும் புதிய உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?

சில சூழ்நிலைகளில் செயலற்ற கருணைக்கொலையை சட்டப்பூர்வமாக்கிய 2018 தீர்ப்பில் வழங்கிய 'முன்கூட்டிய மருத்துவ உத்தரவு' வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. இதற்கு பின்னால் நீண்ட சட்ட வரலாறு உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Passive euthanasia laws

மும்பையில் உள்ள KEM மருத்துவமனையில் அருணா ஷான்பாக் அறை. அவரது வழக்கின் தீர்ப்பு செயலற்ற கருணைக்கொலையை சட்டப்பூர்வமாக்கியது. (EXpress photo by Vasant Prabhu)

செவ்வாயன்று, நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, 2018 ஆம் ஆண்டு Common Cause vs. Union of India & Anr தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 'வாழும் உயில்களுக்கான' தற்போதைய வழிகாட்டுதல்களை மாற்றுவதன் மூலம் நாட்டில் செயலற்ற கருணைக்கொலைக்கான நடைமுறையை கணிசமாக எளிதாக்க ஒப்புக்கொண்டது. இந்த விஷயத்தின் சட்ட வரலாறு என்ன, அதில் உள்ள சிக்கல்கள் என்ன?

Advertisment

கருணைக்கொலை என்றால் என்ன, வாழும் உயில் என்றால் என்ன?

கருணைக்கொலை என்பது ஒரு நபர், குணப்படுத்த முடியாத நிலை அல்லது தாங்க முடியாத வலி மற்றும் துன்பத்திலிருந்து நிவாரணம் பெறுவதற்கு வேண்டுமென்றே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நடைமுறையைக் குறிக்கிறது. ஒரு மருத்துவரால் மட்டுமே நிர்வகிக்கப்படும் கருணைக்கொலை, 'செயலில்' அல்லது 'செயலற்றதாக' இருக்கலாம்.

செயல் கருணைக்கொலை (Active euthanasia) என்பது ஒரு நபரின் வாழ்க்கையை வெளிப்புற சக்தியுடன் முடிவுக்குக் கொண்டு வருவதது, எடுத்துக்காட்டாக, ஒரு கொடிய ஊசி செலுத்தி மரணத்தை விளைவிப்பது. செயலற்ற கருணைக்கொலை (Passive euthanasia) என்பது, நோய்வாய்ப்பட்ட ஒருவரை உயிருடன் வைத்திருக்க இன்றியமையாத உயிர் ஆதரவை அல்லது சிகிச்சையை திரும்பப் பெறுவதைக் குறிக்கிறது.

செயலற்ற கருணைக்கொலை 2018 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது, ஒரு நபருக்கு 'வாழும் உயில்' (living will -தன்னுடைய இறுதிக் காலத்தில் எந்தவிதமான மருத்துவ வசதிகளை கொடுப்பது, எத்தகைய மருத்துவ சோதனைகள் மற்றும் சிகிச்சையினால் ஏற்படும் வலிகளில் இருந்து தன்னை மீட்டுக் கொள்வது என்பது குறித்து எழுதுவதுதான் இந்த 'வாழும் உயில்) இல்லையென்றால், அவரது குடும்ப உறுப்பினர்கள் செயலற்ற கருணைக்கொலைக்கு அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

2018 இல் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது?

உச்ச நீதிமன்றம் செயலற்ற கருணைக்கொலைக்கு அனுமதி அளித்தது, மேலும் இந்த நடைமுறையை ஒழுங்குபடுத்தும் வழிகாட்டுதல்களை வழங்கியது.

அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, நாடாளுமன்றம் இதற்கான சட்டத்தை இயற்றும் வரை வழிகாட்டுதல்கள் அமலில் இருக்கும் என்று கூறியது. இருப்பினும், இதுவரை அது நடக்கவில்லை, மேலும் இந்த விஷயத்தில் சட்டம் இல்லாததால் 2018 தீர்ப்பானது கருணைக்கொலை குறித்த கடைசி உறுதியான வழிகாட்டுதல்களை வழங்கியது.

இந்த வழிகாட்டுதல்கள், வாழும் உயிலை யார் நிறைவேற்றுவது, மருத்துவக் குழுவால் அனுமதி வழங்கப்படக்கூடிய செயல்முறை போன்ற கேள்விகளுடன் தொடர்புடையவை. தகவலறிந்த முடிவெடுக்கும் மன திறன் கொண்ட ஒரு மனிதனுக்கு உயிர் காக்கும் சாதனங்களிலிருந்து திரும்பப் பெறுதல் உட்பட மருத்துவ சிகிச்சையை மறுக்க உரிமை உண்டு என்று நாங்கள் அறிவிக்கிறோம், என்று நீதிமன்றம் 2018 தீர்ப்பில் கூறியது.

2018 க்கு முன் நிலைமை என்ன?

1994 ஆம் ஆண்டில், தற்கொலை முயற்சிக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் - IPC இன் பிரிவு 309 இன் அரசியலமைப்பு செல்லுபடியை சவால் செய்யும் வழக்கில் – உச்ச நீதிமன்றம் அந்த பிரிவை சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட வேண்டிய "கொடூரமான மற்றும் பகுத்தறிவற்ற விதி" என்று கருதியது. தற்கொலைச் செயலை "மதம், ஒழுக்கம் அல்லது பொதுக் கொள்கைக்கு எதிரானது என்று கூற முடியாது, தற்கொலை முயற்சியால் சமூகத்தில் எந்தத் தீங்கும் ஏற்படாது" என்று நீதிமன்றம் கூறியது. (பி ரத்தினம் vs யூனியன் ஆஃப் இந்தியா)

இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு பி ரத்தினம் தீர்ப்பை ரத்து செய்தது. பிரிவு 21 இன் கீழ் வாழும் உரிமையில் இறப்பதற்கான உரிமை இல்லை, மேலும் சட்டம் மட்டுமே கருணைக்கொலையை அனுமதிக்கும் என்றும் அது கூறியது. (Smt. Gian Kaur vs The State of Punjab, 1996)

2011 ஆம் ஆண்டில், 1973 ஆம் ஆண்டு மும்பையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அருணா ஷான்பாக் என்ற செவிலியருக்கு, (அன்றிலிருந்து நீண்ட கால நோயில் இருந்தவர்) செயலற்ற கருணைக்கொலையை உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. (Aruna Ramchandra Shanbaug vs Union Of India & Ors)

முன்னதாக, 2006 ஆம் ஆண்டில், இந்திய சட்ட ஆணையம் அதன் 196 வது அறிக்கையில், ‘கொடிய நோய்வாய்ப்பட்ட (Terminally ill) நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை (Protection of Patients and Medical Practitioners) என்ற தலைப்பில் ஒரு மருத்துவர், ஒரு திறமையான நோயாளியின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிந்து மருத்துவ சிகிச்சையை நிறுத்துவது அல்லது திரும்பப் பெறுவது அவரின் தொழில்முறை கடமையை மீறாது மற்றும் சிகிச்சையைத் தவிர்ப்பது ஒரு குற்றமாக இருக்காது என்று கூறியது.

மருத்துவ சிகிச்சை பெறாத நோயாளியின் முடிவையும் அது அங்கீகரித்துள்ளது, மேலும் இது பிரிவு 309 IPC இன் கீழ் தற்கொலை முயற்சியாக இல்லை என்று கூறியது. மீண்டும், 2008 இல், சட்ட ஆணையத்தின் ‘செயலற்ற கருணைக்கொலை குறித்த 241வது அறிக்கை: ஒரு மறுபார்வை’ செயலற்ற கருணைக்கொலை குறித்த சட்டத்தை முன்மொழிந்தது, மேலும் ஒரு வரைவு மசோதாவையும் தயாரித்தது.

இந்த வாரம் உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு வந்த மாற்றங்கள் என்ன?

2018 ஆம் ஆண்டின் வாழும் உயில் வழிகாட்டுதல்கள் செயல்படுத்த முடியாதவை என்று ஒரு தன்னார்வ சங்கத்தால் மனு தாக்கல் செய்தது. இதன் விரிவான தீர்ப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், திறந்த நீதிமன்றத்தில் தங்கள் உத்தரவின் ஒரு பகுதியை நீதிமன்றம் ஆணையிட்டது.

2018 வழிகாட்டுதல்களின்படி, இரு சாட்சிகள் முன்னிலையில் ஒரு வாழும் உயிலை நிறைவேற்றுபவர் (கருணைக்கொலை கோரும் நபர்) கையொப்பமிட வேண்டும். மேலும் இதில், முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட் (JMFC) கையொப்பமிட வேண்டும்.

மேலும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர், குறைந்தபட்சம் 20 வருட அனுபவமுள்ள, குறிப்பிட்ட ஆனால் மாறுபட்ட மருத்துவத் துறைகளைச் சேர்ந்த மூன்று நிபுணத்துவ மருத்துவப் பயிற்சியாளர்களை உள்ளடக்கிய குழுவை அமைக்க வேண்டும். வாழும் உயிலை நிறைவேற்றலாமா வேண்டாமா என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள். மருத்துவக் குழு அனுமதி அளித்தால், உயிலை மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பி ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்.

பின்னர் மாவட்ட முதன்மை மருத்துவ அலுவலர் உட்பட மூன்று நிபுணர்கள் அடங்கிய மற்றொரு மருத்துவக் குழுவை ஆட்சியர் அமைப்பார். மருத்துவமனை குழுவின் கண்டுபிடிப்புகளுடன் இந்த இரண்டாவது குழு ஒப்புக்கொண்டால் மட்டுமே, முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட்க்கு (JMFC) முடிவு அனுப்பப்படும், பின்னர் அவர் நோயாளியைப் பார்வையிட்டு ஒப்புதல் அளிக்க வேண்டுமா என்பதை ஆய்வு செய்வார்.

இந்த சிக்கலான செயல்முறை இப்போது எளிதாகிவிடும்.

மருத்துவமனை மற்றும் ஆட்சியர் என இரண்டு மருத்துவ குழுக்களை அமைப்பதற்குப் பதிலாக, இரண்டு குழுக்களும் இப்போது மருத்துவமனையால் அமைக்கப்படும். மருத்துவர்களுக்கு 20 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை 5 ஆண்டுகளாக தளர்த்தப்பட்டுள்ளது. மருத்துவக் குழு தனது முடிவை 48 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்; முந்தைய வழிகாட்டுதல்கள் கால வரம்பைக் குறிப்பிடவில்லை.

2018 வழிகாட்டுதல்களுக்கு இரண்டு சாட்சிகள் மற்றும் மாஜிஸ்திரேட்டின் கையொப்பம் தேவை; இப்போது ஒரு நோட்டரி அல்லது கெஜட் அதிகாரி, மாஜிஸ்திரேட்டின் எதிர் கையொப்பத்திற்கு பதிலாக இரண்டு சாட்சிகள் முன்னிலையில் வாழும் உயிலில் கையெழுத்திடலாம். மருத்துவமனையால் அமைக்கப்பட்ட மருத்துவ வாரியங்கள் அனுமதி மறுத்தால், உறவினர்கள் புதிய மருத்துவக் குழுவை அமைக்க உயர் நீதிமன்றத்தை அணுகலாம்.

வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு சட்டங்கள்

நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம் ஆகிய நாடுகள் தாங்க முடியாத துன்பங்களை எதிர்கொள்பவர்களுக்கு, கருணைக்கொலை மற்றும் உதவி தற்கொலை ஆகிய இரண்டையும்  அனுமதிக்கின்றன.

சுவிட்சர்லாந்து கருணைக்கொலையை தடைசெய்கிறது, ஆனால் ஒரு மருத்துவர் முன்னிலையில் உதவி செய்து இறப்பதை (assisted dying) அனுமதிக்கிறது.

மார்ச் 2023க்குள் மனநலம் குன்றிய நோயாளிகளுக்கு கருணைக்கொலை மற்றும் assisted dying அனுமதிக்கப்படும் என்று கனடா அறிவித்தது; இருப்பினும், இந்த முடிவு பரவலாக விமர்சிக்கப்பட்டது, மேலும் இந்த நடவடிக்கை தாமதமாகலாம்.

அமெரிக்காவில் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு சட்டங்களைக் கொண்டுள்ளது. வாஷிங்டன், ஓரிகான் மற்றும் மொன்டானா போன்ற சில மாநிலங்களில் கருணைக்கொலை அனுமதிக்கப்படுகிறது.

இது சட்டவிரோதமானது மற்றும் ஆணவக் கொலைக்கு சமமானதாகக் கருதுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment