ஏப்ரல் 22 அன்று, உலக சுகாதார அமைப்பு (WHO) Pfizer இன் வாய்வழி வைரஸ் தடுப்பு மருந்து Paxlovid-ஐ, தீவிர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கிட பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரை 3,078 நோயாளிகளை உள்ளடக்கிய இரண்டு சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளின் புதிய தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சையைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்து 85% குறைக்கப்பட்டதாக WHO அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாக்ஸ்லோவிட்
பாக்ஸ்லோவிட் மாத்திரையில் நிர்மாட்ரெல்விர், ரிடோனாவிர் ஆகிய மருந்துகள் உள்ளன. இதற்கு கடந்தாண்டு டிசம்பரில் USFDA ஆல் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது
நிர்மாட்ரெல்விர் மருந்து கொரோனா வைரஸ் தனது புரதத்தை பிரதி எடுக்கவிடாமல் தடுக்கும். நிர்மாட்ரெல்விர் மாத்திரை புரதத்தைத் தடுத்து நிறுத்தியதை நீண்ட நாட்களுக்குச் செயல்பட வைக்கும்.
நிர்மத்ரெல்விர் மருந்து தடுப்பூசிகளைக் காட்டிலும் சிறந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இது ஸ்பைக் புரதங்களைப் போல மாற்றமடையாத வைரஸில் உள்ள பாதிப்பை உண்டாக்கும் தன்மையை தாக்குகிறது. எனவே, தடுப்பு மருந்து அனைத்து வகைகளுக்கும் எதிராக பயனுள்ளதாக இருக்கும்
WHO சமீபத்திய ஒப்புதலுக்கு முன்பே, பாக்ஸ்லோவிட் அதிசய மருந்தாகக் காணப்பட்டது. இது கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்டது. மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக்கால் தயாரிக்கப்பட்ட இரண்டாவது வாய்வழி கோவிட்-19 மருந்து மோல்னுபிராவிர் ஆகும். இது கடந்த ஆண்டு டிசம்பரில் FDA அங்கீகாரத்தைப் பெற்றது, ஆனால் மருத்துவ பரிசோதனைகளில் குறைந்த செயல்திறனைக் கொண்டிருந்தது.
பாக்ஸ்லோவிட் மாத்திரை என்பது 2 நிர்மாட்ரெல்விர், ஒரு ரிடோனாவிர் மாத்திரையாகும். இந்த மாத்திரையை 5 நாட்களுக்கு காலை, மாலை இருவேளையும் தொடர்ந்து சாப்பிட வேண்டும். மொத்தமாக 30 மாத்திரைகள் சாப்பிட வேண்டும். இந்த மாத்திரையை, 5 நாட்களுக்கு மேல் மருத்துவரின் ஆலோசனையில்லாமல் எடுக்கக் கூடாது.
Paxlovid க்கான EUA மருத்துவத் தரவுகளை ஆராய்ந்ததில், அறிகுறிகள் தோன்றிய மூன்று நாட்களுக்குள் 89 சதவீதமும், அறிகுறிகள் தோன்றிய ஐந்து நாட்களுக்குள் 88 சதவீதமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் அல்லது இறப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
கூடுதல் ஆக்ஸிஜன் தேவைப்படாத மற்றும் கடுமையான நோய்க்கு முன்னேறும் அபாயம் உள்ள வயாதானோர்களுக்கு, பாக்ஸ்லோவிட் பயன்படுத்தப்படலாம் என்று ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (ஈஎம்ஏ) ஆலோசனை வழங்கியது.
ஜெனரிக் வெர்ஷன்
கடந்தாண்டு நவம்பர் 16 ஆம் தேதி, தகுதி வாய்ந்த ஜெனரிக் மருந்து உற்பத்தியாளர்களுக்கு துணை உரிமங்களை வழங்குவதன் மூலம் மருந்தின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை எளிதாக்கும் பாக்ஸ்லோவிட்க்கான தன்னார்வ உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக ஃபைசர் அறிவித்தது.
பொது சுகாதார அமைப்பான மருந்து காப்புரிமைக் குழுவுடனான (MPP) ஃபைசரின் உரிம ஒப்பந்தம், உலக மக்கள்தொகையில் தோராயமாக 53% உள்ள இந்தியா உட்பட 95 குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு மருந்துகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
இந்தாண்டு மார்ச் 17 ஆம் தேதி, MPP ஆனது நிர்மத்ரெல்விரின் ஜெனரிக் வெர்ஷனை தயாரிக்க 35 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக அறிவித்தது.
இந்நிறுவனங்கள் இந்தியாவைத் தவிர, வங்கதேசம், பிரேசில், சீனா, டொமினிகன் குடியரசு, ஜோர்டான், இஸ்ரேல், மெக்சிகோ, பாகிஸ்தான், செர்பியா, கொரியா குடியரசு மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ளன.
ஜெனீவாவை தளமாகக் கொண்ட Unitaid நிறுவனத்தால் நிறுவப்பட்ட MPP, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கான உயிர்காக்கும் மருந்துகளுக்கான அணுகலை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் செயல்படுகிறது
இந்தியாவில் தயாரிப்பு
MPP துணை உரிம ஒப்பந்தங்களில் கையொப்பமிட்ட 35 நிறுவனங்களில் 19 நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளது.இதில், பெங்களூருவை தளமாகக் கொண்ட பயோகான் லிமிடெட், மும்பையை தளமாகக் கொண்ட க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ், சன் பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் சிப்லா, அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு Torrent Pharmaceuticals மற்றும் Cadila Pharmaceuticals, ஹைதராபாத்தின் ஹெட்டோரோ மருந்துகள், லாரஸ் ஆய்வகங்கள், புனேவின் எம்க்யூர் பார்மாசூட்டிகல் ஆகியவை அடங்கும்
இந்த வார தொடக்கத்தில் ஹெட்டரோவின் மருந்து வேதியியலாளர்களிடம் விரைவில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் உறுதிப்படுத்தல் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
பாக்ஸ்லோவிட் சிகிச்சையை அணுகும் போது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் கடைசி கட்டத்திற்கு தள்ளப்படலாம் என்பது மிகவும் வேதனையளிக்கிறது. இதே நிலைமைதான், இத்தகைய நாடுகளில் கொரோனா தடுப்பூசி வழங்கிய போதும் ஏற்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் மவுசு அதிகம்
பைடன் நிர்வாகம் பாக்ஸ்லோவிட் போன்ற வாய்வழி வைரஸ் தடுப்பு சிகிச்சைகள் கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதன் மூலம் அணுகலை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று வெள்ளை மாளிகை செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
தற்போது, மருந்தகங்கள் மாத்திரைகளைப் பெறுவதற்கு மாநிலங்களைச் சார்ந்தே உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தகங்களுக்கும், மாநிலங்கள் மற்றும் சமூக மையங்களுக்கும் சிகிச்சைகளை நேரடியாக அரசாங்கம் அனுப்புகிறது. தற்போதைய முறையின் கீழ், சுமார் 20,000 இடங்களில் சிகிச்சைகள் கிடைக்கின்றன என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
நிர்வாகம் அதன் நேரடி விநியோகத்தை 30,000 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், வரும் வாரங்களில் அதன் எண்ணிக்கை 40 ஆயிரமாக அதிகரிக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பாக்ஸ்லோவிட் மருந்தின் தேவையானது, அதன் சிக்கலான தகுதி தேவை, குறைக்கப்பட்ட சோதனை, போதைப்பொருள் தொடர்புகளுக்கான சாத்தியக்கூறுகள் காரணமாக குறைந்து காணப்படுகிறது. சுமார் $530 என்கிற விலையில் 20 மில்லியன் மாத்திரைகள் வரை வாங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil