Paying $750 a year, how Trump avoided, evaded taxes : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்பின் இருபது ஆண்டுகளுக்கும் மேலான வரி தகவல்களை பெற்றுள்ளது தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை. போராட்டத்தில் இருக்கும் சொத்துகள், தணிக்கை பிரச்சனைகள் மற்றும் மில்லியன் கணக்கில் இருக்கும் கடன்கள் குறித்து வெளியிட்டுள்ளது அந்த பத்திரிக்கை.
கூட்டாட்சி வருமான வரியாக வெறும் 750 டாலர்களை மட்டுமே, ஆட்சிக்கு வந்த முதல் 2 வருடங்களில், கட்டியுள்ளார் என்று அறிவித்துள்ளது அந்த பத்திரிக்கை. (இந்திய மதிப்பில் ரூ. 50,000). அந்த செய்தி அறிக்கையில் மேலும், கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வரி எதையுமே அவர் செலுத்தாமல் தவிர்த்து வந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு தேர்தலின் போது ட்ரெம்பின் வரி தாக்கல் விவகாரம் தான் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. ஆனால் வெற்றிகரமாக வரி தொடர்பான தகவல்களை ஏதும் தராமலே போட்டியில் நின்று வெற்றியும் பெற்றார். இதற்கு முன்பு எந்த அதிபர் பதவிக்கான போட்டியாளரும் இப்படி வரி விபரங்களை தராமல் போட்டியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ட்ரெம்பின் வரி தகவல்கள், சமீபகாலமாக மிகவும் கேட்கப்படும் ஆவணங்களாக உள்ளது.
To read this article in English
வரி ஏய்ப்பின் அளவு என்ன?
நியூ யார்க் டைம்ஸின் அறிவிப்பின் படி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, கூட்டாட்சி வருமான வரி செலுத்தும் பணக்காரர்களைக் காட்டிலும், வருமான வரி செலுத்தும் நபர்களில் அவர்களின் சராசரி அளவு 0.001%, 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைவாக கட்டியுள்ளார் ட்ரெம்ப். பணக்கார அமெரிக்கர்களுக்கு பொருந்தக்கூடிய வரி விகிதங்கள் பல தசாப்தங்களாக குறைந்துவிட்டாலும், செல்வந்தர்கள் தங்கள் பங்களிப்பைக் குறைக்க பல்வேறு விதமான லூப்ஹோல்ஸை பயன்படுத்துகின்றனர். இருப்பினும், மிகவும் வசதியான மக்கள் அமெரிக்காவில் இன்னும் கூட்டாட்சி வருமான வரியை செலுத்துகின்றனர் என்று கூறியுள்ளது.
டிரம்ப் அதை எவ்வாறு நிர்வகித்தார்?
அவர் தனது வரிப் பொறுப்பைக் குறைக்க அல்லது செலுத்தப்பட்ட வரி திரும்பப்பெற பல்வேறு வழிகளைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. தனது பொறுப்பைக் குறைப்பதை நோக்கி, அவர் பின்வரும் விஷயங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு செல்வந்தருக்கான அனைத்து வசதிகளையும் அனுபவித்து வருகின்ற போதிலும் கூட 18 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் வருமான வரியை செலுத்தவில்லை ட்ரெம்ப் என்று நியூ யார்க் டைம்ஸின் பத்திரிக்கை செய்தி குறிப்பிடுகிறது. அமெரிக்க வரலாற்றில் வசதி படைத்த அதிபராக ட்ரெம்ப் இருக்கிறார். ஆனால் இதற்கு முன்பு அந்த பதவியை வகித்த ஜார்ஜ் W புஷ், (2000 – 2009), பாரக் ஒபாமா (2009-2017) கூட ஆண்டுக்கு கூட்டாட்சி வருமான வரியாக 1,00,000 டாலர்களை கட்டியுள்ளனர். இது ட்ரெம்ப் கட்டிய தொகையை காட்டிலும் 140 மடங்கு அதிகம்.
தனிப்பட்ட செலவுகளை வணிக செலவாக வகைப்படுத்துதல் . இதன் மூலம் வரி செலுத்துவதற்கான வருமான வரம்பில் இருந்து குறைத்துக் கொள்ளப்படுகிறது. ட்ரெம்ப் தன்னுடைய வீடு முதல், கொல்ஃப் மைதானம், விமானம் வரை அனைத்தையும் வணிக செலவாகவே கணக்கிட்டுள்ளார். ட்ரெம்பின் சிகை அலங்காரத்திற்கான செலவு மட்டும் 70 ஆயிரம் டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ. 50 லட்சம்) அவருடைய மகள் இவான்கா ட்ரெம்பின் சிகை அலங்கார செலவுகள் 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 70 லட்சம்) அனைத்தும் வணிக செலவாக காட்டப்பட்டுள்ளது என்று நியூயார்க் டைம்ஸ் இதழ் அறிவித்துள்ளது.
ட்ரெம்பின் செவன் ஸ்பிரிங் எஸ்டேட் வணிக செலவுகள் குறித்த அவருடைய வரையறையை காட்டுகிறது. 200 ஏக்கர் எஸ்டேட் 1996ம் ஆண்டு வாங்கப்பட்டது. அதனை ட்ரெம்ப் குடும்பத்திற்கான சொத்தாகும். ஆனாலும் வரி நோக்கங்களுக்காக இதனை முதலீட்டு சொத்து என்று வரையறை செய்துள்ளார். அது தனிநபர்களின் குடியிருப்பாக இல்லாத காரணத்தால் 2014ம் ஆண்டில் இருந்து சொத்துவரியாக வர வேண்டிய 2.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தள்ளுபடியாகியுள்ளது.
அதிக அளவில் ஆலோசனை கட்டணங்களை செலுத்துதல்
ட்ரெம்பின் அனைத்து நிறுவனங்களும் வருகின்ற வருவாயில் 20%-த்தை ஆலோசனைக்கான கட்டணங்களாக, அனைத்து திட்டங்களிலும் குறிப்பிட்டுகிறது என்பதை தி நியூ யார்க் டைம்ஸ் கண்டறிந்துள்ளது. உதாரணத்திற்கு அஜர்பைஜானில் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒரு ஹோட்டல் ஒப்பந்தம் முடிக்கப்பட்டால் அதில் கிட்டத்தட்ட 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆலோசனை கட்டணம் என்று கணக்கினை காட்டுகிறது. இதன் மூலம் இறுதி லாபத்தை, வரிவிதிப்பு வரம்பில் இருந்து குறைத்து விலக்கிக் கொண்டார். அந்த ஆலோனை கட்டணத்தை அவருடைய மகள் இவான்கா அல்லது அவர் நடத்தும் நிறுவனம் ஒன்று பெற்றுக் கொள்ளும்.
பெரும் இழப்பை அடைந்தது போல் காட்டுதல்
அதிக வருவாய் ஈட்டும் வணிகம் தொடர்ந்து நஷ்டமடைவது போல் காட்டுதல். அவருடைய தொழில் சாம்ராஜ்ஜியத்தின் மையமாக திகழும் கொல்ஃப் கோர்ஸ் கடந்த 20 ஆண்டுகளாக $315 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாக கூறுதல். தி ட்ரெம்ப் ஆர்கனிசேசன் என்பது 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தொகுப்பாகும்ம். இவை அனைத்தும் ட்ரெம்பிற்கு சொந்தமானவை. டிரம்ப் பிராண்டின் உரிமம் மற்றும் அதன் வணிகத்தின் பிற இலாபகரமான பகுதிகளிலிருந்து பெறப்பட்ட லாபங்களை ஈடுசெய்ய இதன் இழப்புகளைப் பயன்படுத்தியுள்ளார் என்று அந்த நிறுவனம் எழுதியுள்ளது.
பணத்தினை எவ்வாறு திரும்ப பெற்றார்?
ட்ரெம்ப் அதிக அளவில் பணத்தை திரும்ப பெற முயன்றார். கடந்த 18 ஆண்டுகளாக அவர் 95 மில்லியன் அமெரிக்க டாலர்களை அவர் வரியாக செலுத்தியுள்ளார். ஆனால் அவை அனைத்தையும் வட்டியுடன் சேர்த்து 72.9% மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரியை திரும்பப் பெற்றார். இதற்காக நீண்ட காலமாக அதிகாரிகளிடம் போராட்டம் செய்தார் ட்ரெம்ப்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil