வடக்கு வானில் காட்சியளிக்கும் விண்மீன் தொகுப்பு தான் பெகாசஸ்; ஆச்சரியமான பெயர் பின்னணி

வடக்கு வானில், நான்கு பெரிய நட்சத்திரங்களுக்கு மத்தியில் சிறகுடன் காணப்படும் குதிரை போன்ற விண்மீன் தொகுப்பு தான் பெகாசஸ்.

Pegasus, Horse

2019ம் ஆண்டு, பெகாசஸ் வைரஸ் பற்றி பலரும் கேள்விபட்ட போது, தி டெலிகிராப், என்.எஸ்.ஒ. குழுமத்தின் இணை நிறுவனர் ஷாலேவ் ஹூலியோ , இந்நிறுவனத்தின் முதன்மை உருவாக்கம் ஒரு ட்ரோஜன் ஹார்ஸ் என்றும் அது வானில் பறந்து டிவைஸ்களுக்குள் செல்லும் என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தது.

இதற்கு முன்பும், பெகாசஸ், வடக்கு வானில் இறகுடன் உள்ள குதிரை போன்று காட்சியளிக்கும் விண்மீன் தொகுப்பாகும். இந்த விண்மீன் தொகுப்பானது, பருவ மழைக்கான மேகம் திரண்டு இருக்கும் மார்ச் மாத இறுதி வாரம் முதல் ஏப்ரல் மாதம் இறுதி வாரம் தவிர்த்து வானில் எப்போதும் காட்சியளிக்கும். இந்திய வானியலில் மஹாஷ்வா என்று இது அழைக்கப்படுகிறது என்று இந்தியாவில் அமெச்சூர் வானியலாளர்களின் பழமையான அமைப்புகளில் ஒன்றான ஜோதிர்வித்யா ப்ரதிஸ்தானின் அனிருத்தா தேஷ்பாண்டே கூறினார்.

வானில் நான்கு பெரிய நட்சத்திரங்கள் உருவாக்கும் பெரிய சதுரத்தை பாருங்கள். அவை பெகாசஸின் பெரிய சதுரம். அதில் மூன்று நட்சத்திரங்கள் உருவாக்கும் முக்கோணம் ஒரு மூலையில் காணப்படும். பிறகு நீங்கள் அங்கே இரவு வானத்தில் சிறகுகள் கொண்ட குதிரையின் உருவத்தை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்.

பெகாசஸ் என்ற பெயர் பெகாய் என்ற வார்த்தையில் இருந்து உருவானது. கிரேக்கத்தில் பெகாய் என்றால் நீர் அல்லது நீருற்றுகள் என்று பொருள். கிரேக்க புராணத்தில் பெகாசஸ் என்பது, மனிதன் மற்றும் கடவுள்களை காக்கும் ஜீயஸின் போர் குதிரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜீயஸ் போருக்கு செல்லும் போது அவருடைய இடி மற்றும் மின்னல் ஆயுதங்களை எடுத்துச் சென்றது பெகாசஸ் தான் என்கிறது கிரேக்க புராணங்கள். ஜீயஸை விட்டு எப்போதும் விலகியதே இல்லை பெகாசஸ். பெகாசஸின் விசுவாசத்தை போற்றும் வகையில் ஜீயஸ் அந்த குதிரையை விண்மீன் தொகுப்பாக மாற்றினார் என்று பழங்கால புராணங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.

பெர்சூயஸால் மெடுசா கொல்லப்பட்ட பிறகு அவரின் ரத்தத்தில் இருந்து உருவானது தான் பெகாசஸ் என்ற குதிரை என்ற புராண கதையும் உள்ளது. பெகாசஸ் பிறகு பெல்லெரோஃபோன் என்ற வீரனால் பிடிக்கப்பட்டு தெய்வங்களின் தங்குமிடமான மவுண்ட் ஒலிம்பஸுக்கு பறப்பதற்கு முன்பு சில போர்களுக்கு பெகாசஸை பயன்படுத்தினான் என்றும் சில கூற்றுகள் முன்வைக்கப்படுகிறது.

இந்த துணிச்சலால் கோபமடைந்த ஜீயஸ், பெல்லெரோஃபோனை குதிரையிலிருந்து பூமிக்கு விழச் செய்ய திட்டமிட்டார், என்றும் அங்கு முள் குத்தி அவர் பார்வை இழந்தார் என்றும் கூறப்படுகிறது. கண்கள் தெரியாமல் போனாலும் கூட அவர் சொர்க்கத்திற்கு செல்லும் வரை அவரையே பெகாசஸ் பின்தொடர்ந்தது என்றும், இறுதியில் விண்மீன் தொகுப்பாக மாறியது என்றும் நம்பப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pegasus of myth and the horse in the sky

Next Story
பெகாசஸ் ஸ்பைவேர் : உங்கள் ஐபோன் குறைவான பாதுகாப்பை பெற்றிருக்கிறதா?Infiltrated by Pegasus is your iphone becoming less secure Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express