டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 13.3% பேருக்கு (7 ல் 1 ஒருவருக்கு) “பிரேக் த்ரூ” கோவிட் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருக்கிறார். நீரிழிவு, வளர்சிதை மாற்ற நோய்கள் மற்றும் உட்சுரப்பியல் ஆகியவற்றுக்கான ஃபோர்டிஸ் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் நிறுவனத்தில் இருந்து சுகாதாரப் பணியாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
பிரேக் த்ரூ கோவிட் பாதிப்பு என்றால் என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் கோவிட்19 வைரஸால் பாதிக்கப்பட்டால் அது பிரேக் த்ரூ பாதிப்புகள் என்றழைக்கப்படுகிறது. தடுப்பூசி வழங்கிய பாதுகாப்பை உடைத்து தொற்று பாதித்துவிட்டது என எடுத்துக்கொள்ளலாம். மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளிலும் இதுபோன்ற பாதிப்புகள் குறைவாகவே உள்ளன.
ஆய்வு எவ்வாறு நடத்தப்பட்டது?
மருத்துவமனையில் உள்ள 123 ஊழியர்களில் 113 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் அடங்குவர். நீரிழிவு நோயாளிகள், தொடர்புடைய வளர்சிதை மாற்றக் கோளாறுகள் மற்றும் அவசரகால அறுவை சிகிச்சைகள் தேவைப்படாதவர்களுக்கு சுகாதார வசதி வழங்குகிறது.
மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டதன் விவரம் மற்றும் கோவிட் தொற்று பாதிப்பு குறித்த தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் பராமரித்து வருகிறது. தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகும் தொற்று ஏற்பட்டால் அந்த தகவலும் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வு ஜனவரி 16 முதல் இன்று வரை நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 113 பேரில், 28 பேருக்கு கோவாக்சின் வழங்கப்பட்டது, 85 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.
கண்டுபிடிப்புகள் என்ன?
தடுப்பூசி போடப்பட்ட 113 பேரில், இரண்டாவது டோஸ் 107 பேருக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது டோஸ் எடுத்த 14 நாட்களுக்கு பிறகு பிரேக் த்ரூ கோவிட் அறிகுறிகள் 15 பேருக்கு கண்டறியப்பட்டது(113 இல் 13.3%). அனைவருக்கும் காய்ச்சல் அறிகுறி இருந்தது. அவர்களில் பாதி பேருக்கு தொண்டை வலி மற்றும் இருமல் இருந்தது. சுகாதார நிலையத்தின் தலைவர் டாக்டர் அனூப் மிஸ்ரா கூறுகையில், ஒரு சிலருக்கு வயிற்றுபோக்கு மற்றும் வாசனை மற்றும் சுவை இழப்பு போன்ற அறிகுறி இருந்தது. அறிகுறிகள் 3-14 நாட்களில் நீடித்தன. அவர்களில் ஒருவர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய கட்டத்தில் இருந்தார். மற்ற 14 பேருக்கும் லேசான கோவிட்- 19 நோய் இருந்தது எனக் கூறியுள்ளார்.
இதன் தாக்கங்கள் என்ன?
"பிரேக் த்ரூ" கோவிட் பாதிப்புகள் சுகாதார நிலையங்களில் அதிக அளவில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறிகின்றனர். டாக்டர் மிஸ்ரா கூறுகையில், இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகும் கோவிட்-19 பாதிப்பு ஏற்படுவது தொற்றுநோய்க்குப் பிந்தைய முக்கியமான நோயுற்றதாக இருக்கும். மேலும் இது தொற்றுக்கான ஆதரமாக மாறும். சமூகத்தில் வசிக்கும் மக்களிடம் நிறைய ஆராய்ச்சிகள் மற்றும் தகவல்களை பெற வேண்டும்.
இது பற்றிய தெளிவான ஆராய்ச்சி தேவை. எங்கள் நிலையத்தில் காணப்படும் திருப்புமுனை நோய்த்தொற்றுகளில் பெரும்பாலானவை லேசான அறிகுறிகள் உள்ளவை.அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்டாலும் அறிகுறியற்ற நோய்த்தொற்றுகள் பரிசோதிக்கப்படாமல் விடப்படுகிறது.இந்த அறிகுறியற்ற நோயாளிகள் மூலம் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என கூறிகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"