பாகிஸ்தான் படைகளும் ஊடுருவல்காரர்களும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் இந்தியப் பகுதியில் உள்ள மலைப் பகுதிகளை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து போர் ஏற்பட்டது. படைகளுக்கு உத்தரவிடுவதில் பர்வேஸ் முஷாரப் முக்கிய நபராக இருந்தார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாயில் உள்ள மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 5) காலமானார். 79 வயதான அவர் கடுமையான நோய்க்கு சிகிச்சை பெற்று நிலையில் உயிரிழந்தார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் 4 நட்சத்திர தளபதியான முஷாரப், 1999-ல் இரத்தம் சிந்தாமல் ராணுவ சதிக்குப் பிறகு அதிகாரத்தைக் கைப்பற்றினார். பாகிஸ்தானின் 10-வது அதிபராக இருந்த அவரை, ஆளும் கூட்டணியால் பதவி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக அவர் 2008-ல் ராஜினாமா செய்வதற்கு முன்பு கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் ஆட்சி செய்தார். விரைவில், முஷாரப் தானாகவே நாடுகடத்தப்பட்டு லண்டனுக்கு குடிபெயர்ந்தார், பின்னர் துபாய்க்கு சென்றார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பதவிக்காலம் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் தவறான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து 2007-ல் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதற்கான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது வரை, முஷாரப் ஆழமான சர்ச்சைக்குரிய பெயராக விட்டுச் சென்றுள்ளார்.
இந்தியா விவகாரத்தில் 1999 ஆம் ஆண்டு கார்கில் போரில் அவர் ஆற்றிய பங்கிற்காக அவர் முக்கியமாக நினைவுகூரப்படுவார். பாகிஸ்தான் ராணுவத்தின் தலைவரான முஷாரப், பாகிஸ்தானிய ஊடுருவல்காரர்களை இந்தியாவிற்குள் அனுப்புவதன் மூலம் தாக்குதலைத் திட்டமிட்டு செயல்படுத்தினார். இருப்பினும், மூன்று மாத காலப் போருக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானியர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்து அவர்களை தோற்கடித்ததால் அது அவருக்கு மிகப் பெரிய ராணுவ தோல்வியாக மாறியது.
கார்கில் போர் எதைப் பற்றியது?
1999-ம் ஆண்டு மே முதல் ஜூலை வரை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்தது காரில் போர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் மாவட்டம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக மற்ற பகுதிகளில் இந்த போர் நடந்தது.
பாகிஸ்தான் படைகளும் ஊடுருவல்காரர்களும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் இந்தியப் பகுதியில் உள்ள மலைப் பகுதிகளை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து போர் ஏற்பட்டது. “பாகிஸ்தான் ராணுவத்தின் ஆரம்பத் திட்டம், பனி குளிர்காலம் காரணமாக இந்திய இராணுவத்தால் காலி செய்யப்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் உள்ள நிலைகளைக் கைப்பற்றுவதான்.” என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அவர்கள் கைப்பற்றப்பட்ட இடத்தை வைத்து சியாச்சின் மோதலுக்கு பேரம் பேசும் சக்தியாகப் பயன்படுத்த விரும்பினர். இந்த மோதல் காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசமயமாக்கும் என்றும், இது பாகிஸ்தானுக்கு சாதகமாக விரைவான தீர்வுக்கு வழிவகுக்கும் என்றும் பாகிஸ்தான் ராணுவம் நம்பியது.
கார்கில் போரில் முஷாரப்பின் பங்கு என்ன?
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் முஷாரப்பைத் தவிர, துணை தளபதி அஜீஸ் கான், மஹ்மூத் அஹ்மத் மற்றும் மேஜர் ஜெனரல் ஜாவேத் ஹசன் ஆகிய மூன்று தளபதிகளால் இந்தத் திட்டம் தீட்டப்பட்டது. இவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் நான்கு பேர் குழு என்று பிரபலமாக அறியப்பட்டனர்.
இருப்பினும், ஆபரேஷன் விஜய் என்ற கூட்டு நடவடிக்கையில், இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவம் பாகிஸ்தானியர்களை தோற்கடித்த பிறகு அவர்களின் லட்சியம் தோல்வியடைந்தது.
இந்த மோதலால் இந்திய-பாகிஸ்தான் உறவு மோச்மானது. பிப்ரவரி 1999-ல் பிரதமர் வாஜ்பாய் மற்றும் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் லாகூர் ஒப்பந்தம் என அழைக்கப்படும் ஒரு முக்கிய இருதரப்பு அமைதிப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட சில மாதங்களுக்குப் பிறகு, இந்த தாக்குதல் நடந்ததால், இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக உணர்ந்தது.
2018-ம் ஆண்டு ஒரு நேர்காணலில், நவாஸ் ஷெரீப், வாஜ்பாய் தன்னிடம் கூறியதாக, "கார்கில் சாகசத்தால் முதுகில் குத்தப்பட்டதாகக் கூறினார். ஏனெனில், அது லாகூர் பிரகடனத்திற்குப் பிறகு நடந்தது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் எப்போதுமே முஷாரப் தனது திட்டங்களைப் பற்றி மர்மமாக வைத்திருந்ததாகக் கூறி வந்தாலும், சில ஆய்வாளர்கள் நவாஸ் ஷெரீப் மூன்று தனித்தனி சந்திப்புகளில் இந்த நடவடிக்கை பற்றி அறிந்திருந்ததாக நம்புகின்றனர்.
பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆய்வாளரான ஆசாத் சிங் ரத்தோர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், “எல்லைக் கட்டுப்பாடு கோட்டில் இரு படைகளின் ஒப்பீட்டு பலம் குறித்து அப்போதைய பாகிஸ்தான் பிரதமருக்குத் தெரியாமல் இருந்தது என தெரிகிறது. தனது ஆட்கள் கார்கிலையும் பின்னர் சியாச்சினையும் கைப்பற்றுவார்கள் என்று நவாஸ் ஷெரீப் நம்பிக்கை கொண்டிருந்தார். 1971-ம் ஆண்டு போருக்குப் பிறகு, கார்கில் நடவடிக்கை பாகிஸ்தானின் மிகப்பெரிய தவறு என்பதை நிரூபித்தது.” என்று எழுதியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.