செல்லப் பூனை மட்டுமல்ல… நீங்களும் கவனம்: எச்சரிக்கும் கொரோனா ஆய்வு

Pet cats vulnerable to corona virus இந்த இனங்கள், பிணைப்பு தொடர்பு மற்றும் கோடான் தழுவல் குறியீடு என இரண்டையும் கொண்டிருக்கின்றன.

By: December 16, 2020, 9:00:12 AM

Pet Cats Vulnerable to Corona Virus Tamil News : தொற்றுநோய் பரவலின்போது பல்வேறு கட்டங்களில் வந்த அறிக்கைகள், நாவல் கொரோனா வைரஸால் வளர்ப்பு பூனைகள், சிங்கங்கள் மற்றும் புலிகள் பாதிக்கப்படலாம் என்பதைக் காட்டுகின்றன. புதிய ஆய்வுகள் உங்கள் செல்லப் பூனைகளை பாதிக்கக்கூடியவையாக மாறுவதற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளன. முந்தைய ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் மற்றும் பொதுவான புரிதல் என்னவென்றால், உயிரணு அமைப்பு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உதவுவதால் பூனைகள் எளிதில் பாதிக்கப்படுகின்றன என்பதுதான். இது பார்சிலோனாவை தலைமையிடமாகக் கொண்ட ஜீனோமிக் ஒழுங்குமுறை மையத்திலிருந்து (சி.ஆர்.ஜி) வெளிவந்தது. தற்செயலாக இதே நகரத்தில்தான் கடந்த வாரம் நான்கு காட்டு சிங்கங்கள் கொரோனா வைரஸினால் பாதிப்படைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுரை, PLOS கணக்கீட்டு உயிரியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மெக்கானிசம்: கொரோனா வைரஸ் அதன் மேற்பரப்பில் ஸ்பைக் புரதத்தைப் பயன்படுத்தி தொற்றுநோயைப் பரப்பத் தொடங்குகிறது. மனித உயிரணுவின் மேற்பரப்பில் ACE2 ஏற்பிகள் எனப்படும் புரதங்கள் உள்ளன. ஸ்பைக் புரதம் ACE2 ஏற்பியுடன் பிணைக்கப்படுகிறது. பின்னர் அவற்றை நகலெடுக்கிறது. இதே வழிமுறை மற்ற உயிரினங்களின் கொரோனா வைரஸ் தாக்குதலிலும் நிகழ்கிறது.

புதிய ஆய்வு: புதிய ஆராய்ச்சி 10 வெவ்வேறு உயிரினங்களின் ACE2 ஏற்பிகளை காண்கிறது மற்றும் வைரஸ் ஸ்பைக் புரதத்துடன் பிணைப்பதற்காக அவற்றின் தொடர்பை ஒப்பிடுகிறது. இதை சோதிக்க ஆராய்ச்சியாளர்கள் கணினி மாடலிங் பயன்படுத்தினர். அவை “கோடான் தழுவல் குறியீட்டை (codon adaptation index)” ஒப்பிடுகின்றன. இது உயிரணுக்கள் நுழைந்த பிறகு வைரஸ் எவ்வளவு திறமையாக பிரதிபலிக்கிறது என்பதற்கான ஒரு நடவடிக்கை.

மனிதர்களுக்கு அடுத்தபடியாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய இனங்கள் ஃபெரெட்டுகள் என்றும் அதனைத் தொடர்ந்து பூனைகள், சிவெட்டுகள் மற்றும் நாய்கள் என்றும் கண்டறிந்தனர். இந்த இனங்கள், பிணைப்பு தொடர்பு மற்றும் கோடான் தழுவல் குறியீடு என இரண்டையும் கொண்டிருக்கின்றன.

காட்டுப் பூனைகள்: பார்சிலோனா மிருகக்காட்சிசாலை சிங்கங்களுக்கு முன்பு, நியூயார்க்கின் பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் ஏழு புலிகள் மற்றும் சிங்கங்கள் பாசிட்டிவ் முடிவுகள் பெற்றன. வீட்டுப் பூனைகள் பாதிக்கப்படக்கூடிய காரணம் காட்டுப் பூனைகளுக்கும் பொருந்துமா?

“பூனைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால்,  அதனுடன் நெருக்கமாக இருக்கும் சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்பு உள்ளது என்று நான் கருதினேன்” என ஆய்வின் மூத்த எழுத்தாளரும் சி.ஆர்.ஜி இயக்குநருமான லூயிஸ் செரானோ மின்னஞ்சல் மூலம் கூறினார்.”

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Pet cats vulnerable to corona virus tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X