உங்களின் வருங்காலத்திற்கான மிகச் சிறந்த சேமிப்பு பிஎஃப்… தெரிந்ததும் தெரியாததும்!

நிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.

pf employer login
pf employer login

pf employer login: அரசு ஊழியர்களுக்கும், தனியார் ஊழியர்களுக்கும் பிஎஃப் பிடிக்கப்படும்.பொதுமக்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட பி.பி.எப், ஒரு நீண்ட கால முதலீட்டுத் திட்டம்.

அரசு ஊழியர்களின் புராவிடண்ட் பண்டுக்கு இணையாக தற்போது பிஎஃப் திட்டத்திலும் 8% வட்டி வழங்கப்படுகிறது.ஒரே தவணையில் முழு தொகையையோ அல்லது அதிகபட்சம் 12 தவனைகளாகவோ பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்படும் தற்போது பிபிஎஃப் கணக்குகளுக்கான வட்டி ஆண்டுக்கு 8 சதவிகிதமாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

pf claim பிஎஃப் அறிமுகம்!

மாத சம்பளம் பெறுபவர்கள் தங்களின் வருங்கால தேவைக்காகவும், முதுமைக் காலத்திற்கு அவசியம் என்பதற்காகவும் மத்திய அரசால் 1968ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (PPF).பிஎஃப் கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். ஆனால் முதிர்வடைந்த ஒரு வருட காலத்திற்குள் மேற்கொண்டு 5 வருடங்கள் அல்லது அதற்கு மேலும் நீட்டிக்கப்படலாம்.

pf balance : பிஎஃப் முன்பு இருந்த முறை!

2018-2019 நிதி ஆண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதத்தை ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் 0.10 சதவீதம் உயர்த்தி 8.65 சதவீதமாக இருந்தது. முன்னதாக 2017-2018 நிதி ஆண்டுப் பிஎஃப் சந்தாதார்களுக்கு 8.55 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்பட்டது.இந்நிலையில் 2018-2019 நிதி ஆண்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தப்பட்டது.

pf changes: பிஎஃப் மாற்றம்!

பிஎஃப் செலுத்துபவர்கள் தங்கள் பழைய கணக்குகளை புதிய கணக்குகளோடு ஒவ்வொரு முறையும் இணைக்க வேண்டும். அப்படி இணைக்க ஒவ்வொரு முறையும் நம் புதிய பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டிருக்கும் அலுவலகங்களுக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இனி அப்படி பழைய கணக்குகளை புதிய கணக்குகளோடு இணைக்க வேண்டாம். நம் புதிய பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டிருக்கும் பிஎஃப் அலுவலகத்துக்கோ அல்லது ஆன்லைன் முறையிலோ விண்ணப்பிக்கத் தேவையும் இல்லை.

pf withdraw : யாரெல்லாம் பிஎஃப் எடுக்கலாம்!

வேலையிலிருந்து ஓய்வு பெறும்போதோ, வேறு காரணங்களினால் நிரந்தரமாக வேலையை விட்டு விலகும்போதோ, பிஎஃப் பணத்தைத் திரும்ப எடுக்க முடியும். அதாவது, தொடர்ந்து 60 நாட் களுக்கு மேல் வேலையில் இல்லாமல் இருக்கும்போது பிஎஃப் பணத்தை எடுக்க முடியும். ஆனால், ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்துக்கு வேலை மாறும்போது பணத்தை எடுக்க முடியாது.

பிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும். இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின் திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.

pf interest : பிஎஃப் வட்டி விகிதம்!

பி.எஃப் வட்டி விகிதம் கடந்த மார்ச் மாதம் 0.1% உயர்த்தப்பட்டது. இதனால் பி.எஃப் வட்டி 8.55% லிருந்து 8.65% ஆக உயர்ந்தது.2018-2019 நிதியாண்டுக்கான பிஎஃப் திட்டம் மீதான வட்டி விகிதத்தை 8.55 சதவீதத்திலிருந்து 8.65 சதவீதமாக உயர்த்தி அறிவித்திருந்தது.

தற்போது 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளோருக்கு 20.8% வருவான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதன்படி கணக்கிட்டால், வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள 8.65 சதவீத பிஎஃப் வட்டி, 10.92 சதவீதத்துக்கு சமமாகும்.

இதேபோன்று, 10 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளோருக்கு பிடித்தம் செய்யப்படும் 34.32 சதவீதம் வருமான வரியின் அடிப்படையில், பி.எஃப் வட்டி விகிதமான 8.65, 13.17 சதவீதத்துக்கு சமமாகிவிடும்.

pf balance check : பிஃப் பேலன்ஸ் பார்ப்பது!

உங்களின் பீஎப் கணக்கில் பதிவு செய்து வைத்துள்ள மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ்-ஐ கீழ்கண்டவாறு அனுப்ப வேண்டும்.EPFOHO UAN என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

தற்போது பிஎஃப் விவரங்களைப் பத்து மொழிகளில் அதாவது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் எஸ்எம்எஸ் மூலம் அறியும் வசதி உள்ளது.

இச்சேவைப் பெற உங்களுடைய ஆதார், பான் எண் அல்லது வங்கிக் கணக்கு எண் உங்கள் நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டு அது அனுமதி வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்தத் தகவல்களைப் பெற முடியும். ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். //www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.

பத்து வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம்.

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pf employer login pf withdraw pf online pf claim pf share pf apply pf interest

Next Story
இந்திய விமானப்படையின் அசுரன்… மிரட்டும் அப்பாச்சி ஏ.எச்.-64E போர் விமானம்Apache AH-64E attack helicopters
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express