தேசிய ஓய்வூதிய முறையை (NPS) இயக்கும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான (PFRDA), உத்திரவாதமான வருவாய் மற்றும் குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட வருவாய்த் திட்டமான (MARS) தொடங்குவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. இது சேமிப்பாளர்களுக்கும், மாத சம்பளம் வாங்குபவர்களுக்கும் பணத்தை முதலீடு செய்வதற்கான சிறந்த விருப்பமாக அமையும்.
PFRDA திட்டம் என்ன?
MARS திட்டத்தை வடிவமைக்க உதவும் ஆலோசகராக EY ஆக்சுவேரியல் சர்வீசஸ் LLP நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதமான வருமானத்தை வழங்கும் ஓய்வூதியக் கட்டுப்பாட்டாளரின் முதல் திட்டமாக அமையும்.
இருப்பினும், இத்திட்டம் முன்மொழியப்பட்ட கட்டத்தில் மட்டுமே தற்போது உள்ளது. திட்ட ஆலோசகர் அடுத்த இரண்டு மாதங்களில் MARS இன் கட்டமைப்பை உருவாக்குவார்களஅ என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டு முடிவதற்குள் இந்தத் திட்டத்தைத் செயல்படுத்த PFRDA விரும்புகிறது.
திட்டத்தின் உண்மையான வருமானம் சந்தை நிலவரத்தைப் பொறுத்தது ஆகும். ஆனால், எந்தவொரு சிக்கலும் ஸ்பான்சரால் சரி செய்யப்படும். மேலும் உபரி சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த திட்டத்தில் இரண்டு விருப்பங்கள் வழங்கப்படலாம். ஒன்று, நிலையான உத்தரவாத விருப்பத்தின் கீழ், உத்திரவாதமான வருமானம் கிடைக்கப்பெறும். மற்றொருன்று, லிமிட்டடு வருமானம் என்படும் floating guarantee விருப்பத்தின் கீழ், உத்தரவாதமான வருவாய் விகிதம் நிர்ணயிக்கப்படாதது ஆகும்.
Floating உத்தரவாதமானது ஓய்வு பெறும் வரையிலான 1 ஆண்டு வட்டி விகிதத்தின் வளர்ச்சியைப் பொறுத்தது. 1 ஆண்டு வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டு முதலீட்டின்படி கணக்கிடப்படும். இது ஓய்வு பெறும் வரை செல்லுபடியாகும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு குறைந்தபட்ச வருமானம் கிடைக்கும்.
இது டென்மார்க்கில் உள்ள ATP அமைப்பைப் போன்றது. PFRDA அறிக்கையின்படி, முதலீடு செலுத்தப்படும்போது சந்தையில் ATP பெறக்கூடிய விகிதங்களின் அடிப்படையில் 80 சதவீத முதலீட்டு உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன.
லாக்-இன் காலம் இருக்கிறதா?
தற்போதைய திட்டத்தின்படி, ஒவ்வொரு முதலீட்டு லாக்-இன் காலம் உண்டு. பணத்தை திரும்ப பெற விரும்புவோர், லாக் இன் காலத்திற்கு பிறகே அணுக முடியும். அந்த காலத்திற்குப் பிறகு சந்தாதாரர் பணத்தை திரும்பப் பெறலாம் அல்லது கூடுதல் முதலீடு செய்ய விருப்பம் தெரிவிக்கலாம். பல லாக்-இன் காலங்களுடன், விருப்ப திட்டங்கள் இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முதலீட்டில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச பண வரம்புகள் பரிந்துரைக்கப்படலாம். முதலீட்டாளர்களுக்கு ஈர்ப்பு அம்சமாக, குறைந்தபட்ச உத்தரவாதமான வருமானம் அமைந்திடும்.
இப்போதைய மதிப்பு என்ன?
ஜனவரி 31, 2022 அன்று 1.53 கோடி சந்தாதாரர்களுடன் NPS நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகளின் மதிப்பு ரூ.6,85,745 கோடி ஆகும். இதன் மதிப்பு, மார்ச் இறுதிக்குள் மார்ச் இறுதிக்குள் ரூ.7 லட்சம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
NPS என்பது ஒரு தன்னார்வ, வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும். சந்தாதாரர்கள் தங்கள் பணிக்காலத்தின் போது முறையான சேமிப்பின் மூலம் அவர்களின் எதிர்காலம் குறித்து உகந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil