Advertisment

கதிசக்தி திட்டம் என்பது என்ன? அது எவ்வாறு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு உதவுகிறது?

Explained: Connecting ministries for infrastructure projects: கதிசக்தி திட்டம் என்பது என்ன? அது எவ்வாறு அமைச்சகங்களை இணைக்கிறது மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு உதவுகிறது?

author-image
WebDesk
New Update
கதிசக்தி திட்டம் என்பது என்ன? அது எவ்வாறு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு உதவுகிறது?

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை "பிஎம் கதிசக்தி - தேசிய மாஸ்டர் பிளான்" திட்டத்தை உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக பல்வேறு தளங்களின் இணைப்பை அதிகரிப்பது மற்றும் தளவாட செலவுகளை குறைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தொடங்கினார்.

Advertisment

கதிசக்தி திட்டம் என்பது என்ன?

உள்கட்டமைப்பு திட்டங்களின் முழுமையான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டை உறுதி செய்யும் நோக்கில் சாலை மற்றும் நெடுஞ்சாலை, ரயில்வே, கப்பல் போக்குவரத்து, பெட்ரோலியம் மற்றும் எரிவாயு, மின்சாரம், தொலைத்தொடர்பு, கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட 16 அமைச்சகங்களை இணைக்கும் ஒரு டிஜிட்டல் தளமாக பிஎம் கதிசக்தி உள்ளது.

கதிசக்தி போர்டல் 200 அடுக்கு புவியியல் தரவை வழங்குகிறது, இதில் சாலை, நெடுஞ்சாலை, ரயில்வே மற்றும் சுங்கச்சாவடிகள் போன்ற உள்கட்டமைப்பு, அத்துடன் காடுகள், ஆறுகள் மற்றும் மாவட்ட எல்லைகள் பற்றிய புவியியல் தகவல்களும் உள்ளன. இது திட்டமிடல் மற்றும் அனுமதி பெற உதவுகிறது.

இந்த போர்டல் பல்வேறு அரசு துறைகளை, நிகழ் நேரத்தில் (ரியல் டைம்) மற்றும் ஒரு மையப்படுத்தப்பட்ட இடத்தில், குறிப்பாக பல துறை மற்றும் பல பிராந்திய தாக்கங்களைக் கொண்ட பல்வேறு திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க அனுமதிக்கும். "ஒவ்வொரு துறையும் இப்போது ஒரு விரிவான முறையில் திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்தும் போது முக்கியமான தரவை வழங்கும் மற்ற துறைகளின் செயல்பாடுகளின் தெரிவுநிலையைக் கொண்டுள்ளது இந்த திட்டத்தின் குறிக்கோள் ஆகும். இதன் மூலம், பல்வேறு துறைகள் குறுக்குவெட்டுத் தொடர்புகள் மூலம் தங்கள் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியும்.

பிரதம மந்திரி, திட்டத்தை துவக்கி வைக்கும் போது, ​​மோசமான உள்கட்டமைப்பு திட்டமிடலுக்கான எடுத்துக்காட்டாக, புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள், நீர்வளத் துறையால் குழாய்கள் அமைக்க தோண்டப்பட்டது என்பதை சுட்டிக்காட்டினார். கதிசக்தி தளம் இதுபோன்ற சூழ்நிலைகளைத் தடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது, இது அரசாங்கத் துறைகள் சிலோஸில் வேலை செய்கிறது.

பல்வேறு அரசாங்கத் துறைகள் தங்கள் திட்டங்களை ஒரு பல-மாதிரி (மல்டிமாடல்) நெட்வொர்க்கில் ஒத்திசைக்க இந்த தளம் உதவும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இது திட்டங்களை கண்காணிப்பதற்கான செயற்கைக்கோள் படங்களையும் வழங்கும். உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான காலக்கெடு தொடர்பாக முதலீட்டாளர்களுக்கு மாநில அரசுகள் உறுதிமொழிகளை வழங்க இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் தளவாட செலவுகளைக் குறைக்க எவ்வாறு உதவும்?

இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 13-14% என்று மதிப்பிடப்பட்டுள்ளது, அதுவே வளர்ந்த பொருளாதாரம் உள்ள நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7-8% மட்டுமே. அதிக லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் பொருளாதாரத்திற்குள்ளான செலவு கட்டமைப்புகளை பாதிக்கிறது, மேலும் ஏற்றுமதியாளர்கள் வாங்குபவர்களுக்கு பொருட்களை அனுப்புவது மிகவும் விலை உயர்ந்தாக உள்ளது.

பாரத்மாலா மற்றும் உள்நாட்டு நீர்வழித் திட்டங்கள், மற்றும் ஜவுளி மற்றும் மருந்து கிளஸ்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பூங்காக்கள் போன்ற பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசாங்கங்களின் கீழ் உள்கட்டமைப்பு திட்டங்களை இணைப்பதன் மூலம், கடைசி மைல் இணைப்பை அதிகரிப்பது, ஒருங்கிணைந்த திட்டத்துடன் தளவாட செலவுகளைக் குறைப்பது மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றை கதிசக்தி தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது..`

தற்போது, ​​பல பொருளாதார மண்டலங்கள் மற்றும் தொழில்துறை பூங்காக்கள் திறனற்ற மல்டிமாடல் இணைப்பு காரணமாக அவற்றின் முழு உற்பத்தி திறனை அடைய முடியவில்லை.

கதிசக்தி திட்டத்தின் கீழ் முன்னேற்றம் எவ்வாறு கண்காணிக்கப்படும்?

தேசிய மாஸ்டர் பிளான் திட்டமான கதிசக்தி, அனைத்து உள்கட்டமைப்பு அமைச்சகங்களுக்கும் இலக்குகளை நிர்ணயித்துள்ளது. 2024-25 க்குள் இந்திய துறைமுகங்களில் கையாளப்படும் மொத்த சரக்குகளை 2020 ஆம் ஆண்டில் 1,282 மில்லிடன் டன் (MTPA) ஆக இருந்ததைவிட ஆண்டுக்கு 1,759 மில்லியன் டன்னாக (MTPA) உயர்த்த வேண்டும். அதே போல் அதே காலகட்டத்தில் தேசிய நீர்வழிகளில் சரக்கு இயக்கத்தை 74 இலிருந்து 95 மில்லியன் டன்னாக அதிகரிக்க இந்தியா இலக்கு வைத்துள்ளது.

19,000 கிமீ தொலைவில் உள்ள இயற்கை எரிவாயு குழாய் நெட்வொர்க்கை இரட்டிப்பாக்குவதைத் தவிர, அடுத்த 4-5 ஆண்டுகளில் 200 க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள், ஹெலிபேட்கள் மற்றும் நீர் ஏரோட்ரோம்களைச் சேர்ப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.

தொழில் மற்றும் உள் வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) கீழ் உள்ள திட்ட கண்காணிப்பு குழு, முக்கிய திட்டங்களின் முன்னேற்றத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும், மேலும் அமைச்சகங்களுக்கிடையேயான எந்தவொரு பிரச்சனையும் அதிகாரம் பெற்ற அமைச்சர்களின் குழுவிற்கு அறிக்கையாக தாக்கல் செய்யும்.

கதிசக்தி போர்ட்டலில் மாநிலங்களுக்கு இடம் உள்ளதா?

கதிசக்தி போர்ட்டல் பற்றி கிட்டத்தட்ட அனைத்து பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களிலிருந்தும் மத்திய அரசு கோரிக்கைகளைப் பெற்றுள்ளது என்று வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். இந்த போர்டல் மாநிலங்களுக்கு செலவு மற்றும் நேர செலவுகள் இரண்டையும் தவிர்க்க உதவும் என்றும், நாட்டு மக்களுக்கு மதிப்புமிக்க உள்கட்டமைப்பின் நன்மையை விரைவில் வழங்க அனுமதிக்கும் என்றும் கோயல் கூறினார்.

திட்டங்களுக்கான அமைச்சகங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புக்கு இது எவ்வாறு உதவும்?

தற்போது, ​​உள்கட்டமைப்பு தொடர்பான அமைச்சகங்களின் வழக்கமான கூட்டங்களில் ஒரு திட்டம் தொடர்பான அமைச்சகங்களுக்கு இடையேயான பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன. இனி இந்த பிரச்சனைகள் முன்கூட்டியே எழுப்பப்பட்டு, உடனடியாக தீர்க்கப்படும்.

PM PRAGATI (செயலில் உள்ள நிர்வாகம் மற்றும் சரியான நேரத்தில் செயல்படுத்துதல்) போர்ட்டல் மூலம், இதுபோன்ற சந்திப்புகளுக்கு முன்பே பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன என்று அமைச்சர் கோயல் கூறினார். மேலும், அமைச்சகங்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதால், மனிதத் தலையீட்டை குறைக்க, கதிசக்தி போர்டல் உதவும் என்றும், திட்ட கண்காணிப்பு குழு திட்டங்களை நிகழ் நேரத்தில் மதிப்பாய்வு செய்யும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஒரு சுரங்கப்பாதை திட்டத்தை மேற்கோள் காட்டிய, அமைச்சர் கோயல் பொதுவாக, ஒரு சுரங்கப்பாதை சாலைகளுக்காகவும், மற்றொரு சுரங்கப்பாதையை ரயில்வேக்காகவும் பார்க்க முடியும்; இருப்பினும் இதுபோன்ற ஒரு தளம் அமைச்சகங்களை ஒருங்கிணைக்க அனுமதிக்கும், மேலும் ஒரு பெரிய சுரங்கப்பாதையை உருவாக்கும், இது இரண்டு நோக்கங்களுக்கும் சேவை செய்யும், வரி செலுத்துவோருக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை மிச்சப்படுத்தும் என்று கூறினார்.

போர்ட்டலை உருவாக்கிய பாஸ்கராச்சார்யா இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் மற்றும் ஜியோஇன்ஃபார்மேடிக்ஸ் (BISAG-N) இன் இயக்குநரான டிபி சிங், ஒரு ரயில் பாதையை உருவாக்கும் திட்டத்தின் உதாரணத்தை மேற்கோள் காட்டினார். இந்த ரயில் பாதை திட்டத்தின் பாதை, போர்ட்டலில் கிடைக்கும் தரவின் மறுஆய்வை தொடர்ந்து பாதை மாற்றப்பட்டது. இதன்மூலம் தேவைப்படக்கூடிய ஒரு வன அமைச்சக அனுமதி தவிர்க்கப்பட்டது.

போர்டல் அதன் இருப்பிடத்தின் அடிப்படையில், எந்தவொரு புதிய திட்டத்திற்கும் தேவையான அனைத்து அனுமதிகளையும் முன்னிலைப்படுத்தும். மேலும் இந்த அனுமதிகளுக்கு பங்குதாரர்கள் நேரடியாக போர்ட்டலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க அனுமதிக்கும்.

இதன் மூலம், ஒரு ரயில் பாதை கட்டப்பட்டால், சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உடனடியாக ஒரு மேம்பாலத்திற்கான அனுமதியை வழங்கலாம், மேலும் தண்டவாளங்கள் முடிந்தவுடன் ரயில்கள் உடனடியாக மின்சாரம் பெறுவதை உறுதி செய்ய மின் அமைச்சகம் திட்டங்களைத் தொடங்கலாம் என அமைச்சர் கோயல் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pm Modi India Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment