scorecardresearch

இந்தியாவின் பூர்வீக நாய் இனங்களின் வரலாறு அறிவோமா?

PM Modi Mann ki baat dogs : இந்திய நாய்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், எவ்வித பருவநிலையையும் அது தாங்கவல்லது. 16 முதல் 17 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் கொண்டது

PM Modi, Mann ki baat, Indian dogs, indian dog breeds, indian dog breeds you must know about, PM Modi Mann ki baat dogs, Combai, Chippiparai, Rajapalayam, Mudhol Hound, express explained indian express

Gitanjali Das

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி, மான் கி பாத் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை. விலங்குகள் வளர்ப்போர், விலங்கு நல ஆர்வலர்கள், மீட்புபடையினர் உள்ளிட்டோருக்கு இனிய தேனமுதமாக இன்றும் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ராஜபாளையம், சிப்பிப்பாறை உள்ளிட்ட இந்திய இன நாய்கள் குறித்து உரையில் பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, சர்வதேச நாடுகளைப்போன்று, நம்நாட்டின் ராணுவத்திலும் இந்த வகை நாய் இனங்களை பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நாய் இனங்களின் வரலாறு, அறிவுக்கூர்மை

இந்திய நாய் இனங்களின் வரலாறு மிக நீண்டது. தற்போதைய கலப்பின நாய்களுடன் அதை ஒருபோதும் ஒப்பிட இயலாது. பேரரசர்கள், மகாராணிகள், பிரபுக்கள் உள்ளிட்டோர் தங்களது அந்தஸ்தின் சின்னங்களாக இந்திய நாய் இனங்களையே கருதி வந்தனர். அவர்களது புகைப்படங்களிலும் இந்திய நாய் இனங்கள் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

1963ம் ஆண்டில், டபிள்யூ.வி. சோமன் எழுதிய ‘The Indian Dog’ புத்தகத்தில், ரிக் வேதத்தில் இந்திய நாய் இனம் சராமா என்றழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திரக்கடவுளுடன் பெண் நாய் ஒன்றும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாபாரதத்திலும், யுதிஷ்திரன் சொர்க்கம் செல்லும்போது தன் நாயை அனுமதிக்காவிட்டால், தானும் செல்லமாட்டேன் என்று கூறியதாக குறிப்பில் உள்ளது.

இந்திரன் : சொர்க்க லோகத்தில் மனிதர்களை தவிர்த்து நாய் போன்ற வேறு எந்த விலங்குகளுக்கு இடமில்லை. அவைகள் அங்கு வந்தால் அதன் புனிதத்தன்மை கெட்டுவிடும். அதனால், நீ சொர்க்கம் வர வேண்டுமெனில் நாயை இங்கேயே விட்டு விட வேண்டும்.

யுதிஷ்திரன் : பக்தர்களை அவமதிப்பது, பிராமணர்களை கொல்வது எவ்வளவு பாவமோ, அதுபோல நான் என் நாயை விட்டுவருவதை உணர்கிறேன். அது இறைவனின் தீவிரமான பக்தர். அதை பாதுகாக்க என்னைத்தவிர மற்ற யாராலும் முடியாது. என்னால் அதை ஒருநிமிடம் கூட பிரிந்து இருக்க முடியாது. இதுவே என் உரிமை என்று யுதிஷ்திரன் கூறியதாக குறிப்பில் உள்ளது.

பொதுவான பூர்வீக இனங்கள் எவை?

ராஜா கேஎன், பி கே சிங், ஏ கே மிஸ்ரா 2016ம் ஆண்டில் எழுதிய ‘A new methodology for characterisation of dog genetic resources of India’ புத்தகத்தில், National Bureau of Animal Genetic Resources (NBAGR) உயரதிகாரி தேவேந்திரன் உள்ளிட்டோர் கூறியுள்ளதாவது இந்திய வகை நாய்களில் அறியப்படாத ஏராளமான இனங்கள் உள்ளன… அவை இதுவரை சரியாக வகைப்படுத்தப்படவில்லை மற்றும் ஆவணப்படுத்தப்படவில்லை.
நாய்கள் பொதுவாக, அவற்றின் பாதுகாப்புத்தன்மை, வளர்ப்பு, துணை, சண்டை, வாசனை இவைகளின் அடிப்படையிலேயே சர்வதேச அளவில் வகைப்படுத்தப்படுகின்றன.

 

இந்தியாவில், நாய் பூர்வீக இனங்கள் கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம், ராம்புர் ஹவுண்ட், காரவன் ஹவுண்ட், கன்னி, முதோல் ஹவுண்ட், இந்தியன் மஸ்டிப் (புள்ளி), ஹிமாயலன் செம்மறி நாய், பூட்டியா நாய் இனம் உள்ளிட்டவைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம் மற்றும் கன்னி வகை நாய்கள் தமிழகத்தை சேர்ந்தது ஆகும். இந்த வகை நாய்கள் விவசாய நிலங்கள் மற்றும் கால்நடை பண்ணைகளில் பாதுகாவலனாகவும், வேட்டைநாய்களாகவும் பெருமளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. வீட்டில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், அதன் கம்பீர தோற்றத்திற்காகவும் இந்த நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

National Bureau of Animal Genetic Resources, மூத்த விஞ்ஞானியான டாக்டர் கே என் ராஜா, 2013-15ம் ஆண்டில், தென்தமிழகத்தில் உள்ள நாய் இனங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ராஜபாளையம், சிப்பிப்பாறை வகை நாய்கள், விவசாய நிலங்களில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு அரணாகவும், கால்நடைகளை வேட்டையாட வரும் விலங்குகளை தாக்கி அழிக்கும் அரணாகவும் விளங்கி வருகிறது. சிப்பிப்பாறை நாய்கள், அந்த பகுதியில் நடைபெறும் திருமணங்களில் பெண்களுக்கு சீதனமாகவும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வகை நாய்களை வளர்ப்பதை அவர்கள் பெருமையாகவே கருதுகின்றனர். வேட்டையாடும் திறன் அதிகம் உள்ள இந்த நாய்கள், வளர்ப்பவர்களுக்கு சிறந்த ஊழியனாக உள்ளது. பெரியார் அணை கட்டுமானத்தின்போது, சிப்பிப்பாறை வகை நாய்கள் பாதுகாப்புப்பணிக்காக பயன்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி மான் கி பாத் உரையில், கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம் உள்ளிட்ட நாய்கள் குறித்து பேசியது குறித்து புனேயில் உள்ள RESQ Charitable Trust துணை நிறுவனர் தன்யா கேன் கூறியதாவது, வேட்டையாடும் திறன் கொண்ட நாய் இனங்கள் பெரும்பாலும் தென் தமிழகத்தை சேர்ந்தவை ஆகும். ஹிமாலயன் செம்மறி நாய் மற்றும் பூட்டியா நாய் இனங்கள், வட இந்தியாவில் கால்நடை பண்ணை பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஹவுண்ட் வகை நாய் இனங்கள், ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளன. அவைகளின் வாசனை, இயக்கம், அதிக சக்தி உள்ளிட்டவைகள் அதன் தனிச்சிறப்பு ஆகும்.

சாதாரணமாக தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் பெரும்பாலும் கலப்பின வகையை சேர்ந்தது என்று தன்யா கேன் தெரிவித்துள்ளார்.

வீடுகளில் பூர்வீக இன நாய்களை விட அதிக வெளிநாட்டு இன நாய்கள் வளர்க்கப்படுவது ஏன்?

இந்தியர்களிடையே ,பூர்வீக இன நாய்களை பெட் விலங்காக வளர்க்க முடியாது என்ற எண்ணம் ஆழமாக பதிந்துள்ளது. இதை அவர்கள் உடனடியாக நீக்க வேண்டும் என்று விலங்குநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்காரணமாகவே, அவர்கள் வெளிநாட்டு நாய் இனங்களான லேப்ரடார், பீகில்ஸ், ஜெர்மன் ஷெப்பர்ட்ஸ்ல, ஹஸ்கிஸ், ஷி ஜூஸ் உள்ளிட்ட வகை நாய்களே, இந்திய வீடுகளில் அதிகம் வளர்க்கப்படுகின்றன.
பூர்வீக இன நாய்களை இந்தியர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருவதன் காரணமாக அதன் எண்ணிக்கை கணிசமான அளவில் சரிவடைந்து வருகிறது. இதனை மீட்கும்பணியில் தன்னார்வலர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தெருக்களில் சுற்றித்திரியும் கலப்பின நாய்கள் துன்புறுத்தல், விபத்து உள்ளிட்ட காரணங்களினால் தொடர்ந்து மரணமடைந்து வருகிறது.இதனை மீட்கும்பணியிலும் தன்னார்வலர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

வீட்டு பாதுகாப்பிற்கு இந்திய வகை நாய்கள் எவ்வளவு பொருத்தமாக இருக்கும்?

சிப்பிப்பாறை, ராஜபாளையம் போன்ற இந்திய வகை நாய்கள், வீட்டு பாதுகாப்புக்கு மிகவும் ஏற்றது ஆகும். இந்த வகை நாய்களுக்கு அதிக பயிற்சி தேவை. மற்ற நாய்களைப்போல, இது ஒரு அறையிலேயே முடங்கிக்கிடக்காது என்று கேன் தெரிவித்துள்ளா்ர.
இந்த வகை நாய்களை எளிதில் பழக்கப்படுத்திவிடலாம். எப்போதுமே ஆக்டிவ்வாக இருக்கும் என்று டாக்டர் ராஜா தெரிவித்துள்ளார்.
Delhi the Street Dog’ என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வரும் அமெரிக்காவை சேர்ந்த ஜெஸ் பிரிட்டானி தெரிவித்துள்ளதாவது, சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை மீட்டு அவற்றுக்கென்று தனியாக இடம் அமைத்து பாதுகாத்து வருகிறோம் இந்திய நாய்களுக்கு அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது அவர்கள் அதற்கு தக்க பயிற்சிகளை அளித்து ராணுவம் உள்ளிட்ட படைகளில் சேர்க்கின்றனர். என்று தெரிவித்துள்ளார்.

இந்திய நாய்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், எவ்வித பருவநிலையையும் அது தாங்கவல்லது. 16 முதல் 17 ஆண்டுகள் வரை ஆயுட்காலம கொண்டது என்று டெல்லி கால்நடை மருத்துவர் பிரேமலதா சவுத்ரி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் உரையை, விலங்குகள் நல ஆர்வலர்கள் எவ்வாறு பார்க்கின்றனர்?

பிரதமரின் உரைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

RESQ Charitable Trust தலைவர் நேஹா பாஞ்சமியா தெரிவித்துள்ளதாவது, இந்திய நாய் இனங்கள் குறித்த பிரதமரின் உரையை வரவேற்கிறேன். ஆனால், இந்த செய்தி தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இந்திய வகை நாய்கள், சிறந்தவைகள் தான், ஆனால், அதன் எண்ணிக்கை தற்போது குறைவாக உள்ளது. இந்த வகைகளை நாம் வீட்டில் பெட் விலங்காக வளர்க்க முடியாது.

ராஜபாளையம், சிப்பிப்பாறை, முதோல் ஹவுண்ட்ஸ் வகை நாய்களை அதே இனத்தை சேர்ந்த நாய்களுடனே இணையவிட வேண்டும். இந்த வகை நாய்கள், தெருக்களில் சாதாரணமாக சுற்றித்திரியாது. இதை தக்க சான்றிதழ்கள் இல்லாமல் வளர்ப்பவர்களிடம் இருந்து வாங்குவது சட்டவிரோதம் ஆகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Explained: After PM Modi’s push, a look at the many dog breeds native to India

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Pm modi mann ki baat indian dogs indian dog breeds indian dog breeds you must know about