Advertisment

பிரதமர் உதவி: நடைபாதை வியாபாரிகள் குறித்து சட்டம் கூறுவது என்ன?

பணி மூலதனக் கடனாக சுமார் 50 லட்சம் தெரு வியாபாரிகளுக்கு, பத்தாயிரம் ரூபாய், ஓராண்டு காலக் கடனாக பிணை ஏதுமின்றி வழங்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
பிரதமர் உதவி: நடைபாதை வியாபாரிகள் குறித்து சட்டம் கூறுவது என்ன?

கடந்த செவ்வாயன்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதமர் ஸ்வநிதி திட்டப் பயனாளிகளுடன் பிரதமர்  நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.

Advertisment

பெருந்தொற்று காலத்தில் ஏழை மக்களின் பாதிப்பைக் குறைக்கும் வகையில், கரீப் கல்யாண் யோஜனா என்னும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் தொகுப்புத் திட்டத்தை அரசு தொடங்கியதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்புத் திட்டமும் ஏழைகளைக் கவனத்தில் கொண்டே அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பிரதமர் ஸ்வநிதித் திட்டத்தை  மத்திய அரசு கடந்த ஜூன் மாதம்  தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தெரு வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை மீண்டும் தொடங்குவதற்காக பணி மூலதனக் கடனாக சுமார் 50 லட்சம் தெரு வியாபாரிகளுக்கு, பத்தாயிரம் ரூபாய், ஓராண்டு காலக் கடனாக பிணை ஏதுமின்றி வழங்கப்படுகிறது. கடன் தொகையை உரிய காலத்தில் செலுத்துபவர்களுக்கு, வட்டி மானியம் ஆண்டொன்றுக்கு 7 சதவிகிதமும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 1200 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படுகிறது.

24 சதவிகித ஆண்டு வட்டியில் பத்தாயிரம் ரூபாய் கடனாகப் பெற்றால் கடனுக்கான வட்டிச் சுமையில் மொத்தத்தில் 30 சதவிகிதம் குறையும் வகையில் வட்டி மானியம் அமைந்துள்ளது.

இந்தியாவில் நடைபாதை வியாபாரிகள்: 

இந்தியாவில் 50-60 லட்சம் தெரு வியாபாரிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா,  அகமதாபாத் போன்ற நகரங்களில் அதிக அளவு எண்ணிகையில்  தெரு வியாபார்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்தரவர்கள்.

நிரந்தர கடை இல்லாத எவரும் தெரு வியாபாரிகளாக  கருதப்படுகிறார்கள். சம்பீபத்திய அரசு மதிப்பீடுகளின்படி,  நகர்ப்புற (வேளாண்மை அல்லாத துறைகளில்) முறைசாரா வேலைவாய்ப்பில் 14 சதவீத பங்கை தெருவோர வியாபாரம் கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், இத்துறை பல்வேறு சிக்கல்கள் எதிர்கொண்டு வருகிறது. பெரும்பாலான நகரங்களில் தெரு வியாபாரத்துக்கான அனுமதி உச்சவரம்பு நடைமுறையை பிரதிபலிக்கவில்லை. எடுத்துக்காட்டாக, 2.5 லட்சத்துக்கும் அதிகமான தெருவோர வியாபாரிகள் இருக்கும் மும்பையில்,15,000 கடைகளுக்கு மட்டுமே   அனுமதி உச்சவரம்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், சான்றிதழ் பெறாத  பெரும்பாலான வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக, உள்ளூர் காவலர்கள் முதல் மாநகராட்சி அதிகாரிகள் வரை முறைகேடான வழிகளில் பணத்தை சுரண்டி வருகின்றனர்.

பெரும்பாலும், உள்ளாட்சி அமைப்புகள் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு யுக்திகளை கையாளுகின்றது. நடைபாதை கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீட்பதற்கான  அபராதத் தொகை வியாபாரிகளுக்கு கடினமான சூழலை உருவாக்கும் .

பல ஆண்டுகளாக, நடைபாதை  வியாபாரிகள் தங்களுக்கான சங்கங்களை உருவாக்கியுள்ளனர். மேலும் ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை அதிகரித்து வருகின்றன.

இந்தியாவின் 28 மாநிலங்களில் செயல் படும் 1,400 நடைபாதை விற்பனையாளர் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பாக தேசிய நடைபாதை வியாபாரிகள் கூட்டமைப்பு (என்.எச்.எஃப்) செயல்பட்டு வருகிறது.    .

நடைபாதை வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் : 

2014ம் ஆண்டு தேசிய முற்போக்குக் கூட்டணி,  நடைபாதை வியாபாரிகளின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும்  பாதுக்காக்க நடைபாதை வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தை நிறைவேற்றியது. இந்த மசோதாவை,  செப்டம்பர் 6, 2012 அன்று  மக்களவையில்  அப்போதைய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சர் குமாரி செல்ஜாவால் அறிமுகப்படுத்தியிருந்தார்.

இந்தியாவில், நடைபாதை வியாபாரிகளை முறைப்படுத்த 'நகர விற்பனை குழு'வை அமைக்க மாவட்ட அளவில்   உருவாக்க சட்டம் வகை செய்கிறது . இதன் மூலம், அரசால் அங்கீகரிக்கபட்ட கடைகள் அனைத்தும், விற்பனை மண்டலங்களுக்குள் நியாயமான முறையில் செயல்படுவதை இந்த விற்பனை குழு உறுதி செய்யும்.

எந்தவொரு தனியார் மற்றும் அரசு சார்ந்த இடங்களில் , தற்காலிகமாக கட்டமைக்கப்பட்ட கட்டமைப்பு (அ) இடம்  மாறி மாறி அன்றாட பயன்பாடு (அ) சேவையை பொது  மக்களுக்கு விற்பனை செய்பவரே “தெருவோர வியாபாரி ” என்று சட்டம் வரையறுக்கிறது.

இருப்பினும், இந்த சட்டம் முறையாக அமல்படுத்தவில்லை. பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் ஒரு சில மாவட்டங்களைத் தவிர்த்து, பெரும்பாலும் நகர விற்பனைக் குழுக்கள் அமைக்கப்படவில்லை. இதனால், நடைபாதை வியாபாரிகள் தொடர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

Narendra Modi Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment