Political Pressure Hinder in Police Probes: இந்தியாவில் காவல்துறையின் பணி நிலைமையைப் பற்றிய ஒரு புதிய அறிக்கையில், காவல்துறை விசாரணையில் உணரப்பட்ட அரசியல் அழுத்தம் அவர்களின் விசாரணைகளுக்கு எந்த அளவிற்கு இடையூறாக உள்ளது என்பது பற்றி ஒரு முக்கிய விஷயம் கண்டறியப்பட்டுள்ளது.
வளரும் சமுதாயங்கள் பற்றிய ஆய்வுக்கான மத்திய அரசின் காமன் காஸ் லோக்நிதி திட்டம் என்ற அமைப்பு, காவலர்களின் திறன் மற்றும் காவல் பணி நிலைமைகள் குறித்து சர்வே நடத்தி இந்தியாவில் காவல் பணி நிலை அறிக்கை 2019- ஐ தயாரித்துள்ளது. அதில், சில விஷயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதில் 28% காவல்துறை ஊழியர்கள் அரசியல்வாதிகளிடமிருந்து வரும் அழுத்தம் ஒரு குற்ற விசாரணையில் மிகப்பெரிய தடையாக இருப்பதாக நம்புகின்றனர். இதில் வரும் பல்வேறு வகையான தடைகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், 5-இல் 2 காவல்துறையினர் இந்த அழுத்தங்கள் குற்ற விசாரணையில் மிகப்பெரிய தடையாக இருப்பதாக நம்புகின்றனர். மேலும், சமூகம், சட்ட நடைமுறை மற்றும் காவல்துறையில் உள்ளக வேலை நடைமுறைகள் என பிற தடைகளும் மேற்கோள்காட்டப்பட்டுள்ளன.
செல்வாக்கு மிக்க நபர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களில் 38% பணியாளர்கள் எப்போதும் அரசியல்வாதிகளிடமிருந்து அழுத்தத்தை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். மேலும், போலீஸ் படையில் உள்ள தங்கள் மூத்த அதிகாரிகளிடம் இருந்து எப்போதும் அழுத்தத்தை எதிர்கொள்வதாக மூன்றில் ஒரு பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
ஐந்தில் ஒரு பங்கு காவல்துறையினர் எப்போதும் ஊடகங்களின் அழுத்தத்தை எதிர்கொள்வதாக தெரிவித்து இந்த விகிதம் குறைந்து காணப்படுகிறது. அதே நேரத்தில், 14% பேர் தாங்கள் எப்போதும் மனித உரிமை அமைப்புகள்/ தொண்டு நிறுவனங்கள், நீதித்துறை மற்றும் பொதுமக்களிடமிருந்து செல்வாக்குமிக்க நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அழுத்தத்தை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர்.