Advertisment

லண்டன், நியூயார்க் மற்றும் ஜெருசலேமில் போலியோ பாதிப்பு.. எவ்வளவு ஆபத்தானது?

போலியோ’ லண்டன், நியூயார்க் மற்றும் ஜெருசலேமில் பல தசாப்தங்களுக்கு பிறகு முதல் முறையாக பரவுகிறது. 2022ல் இதுவரை 177 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

author-image
WebDesk
New Update
Polio disease outbreak

Polio disease outbreak

ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை முடக்கும் கொடிய போலியோ நோய், பல தசாப்தங்களுக்கு பிறகு இப்போது லண்டன், நியூயார்க் மற்றும் ஜெருசலேமில் பரவுகிறது. இது மீண்டும் தடுப்பூசி பிரச்சாரங்களைத் தூண்டுகிறது.

Advertisment

பயங்கரமான நோய்

போலியோ’ 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் உலகெங்கிலும் உள்ள பெற்றோரை பயமுறுத்தியது. முக்கியமாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் இது, பெரும்பாலும் அறிகுறியற்றது, ஆனால் காய்ச்சல் மற்றும் வாந்தி உள்ளிட்ட அறிகுறிகளையும் ஏற்படுத்தும்.

200 நோய்த்தொற்றுகளில் ஒன்று மீளமுடியாத பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது, மேலும் அந்த நோயாளிகளில் 10% வரை இறக்கின்றனர்.

இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை, ஆனால் 1950 களில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதால், போலியோ முற்றிலும் தடுக்கக்கூடியதாக ஆனது. உலகளவில், நோயின் தீவிரம் கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. முக்கியமாக மலப் பொருளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் இது பரவுகிறது.

ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் மட்டுமே இப்போது அதிக தொற்று நோய் உள்ள நாடுகளாக உள்ளன. ஆனால் இந்த ஆண்டு, மலாவி மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளிலும் போலியோ பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இது 1990 களுக்கு பிறகு, அந்த நாடுகளில் பதிவான முதல் பாதிப்பாகும்.

வெவ்வேறு மாறுபாடு

போலியோ வைரஸின் இரண்டு முக்கிய வடிவங்கள் உள்ளன. மேலே குறிப்பிட்டுள்ள தீவிர வகையுடன், தடுப்பூசி-பெறப்பட்ட போலியோ (vaccine-derived polio) எனப்படும் அரிதான நிகழ்வுகளும் உள்ளன.

பிரிட்டிஷ் தலைநகர் லண்டன் மற்றும் அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள கழிவுநீரில் கண்டறியப்பட்டது இந்த இரண்டாவது வடிவம் ஆகும், நியூ யார்க் மாநிலத்தில் ஒரு பக்கவாத பாதிப்பும் பதிவாகியுள்ளது.

ஜெருசலேம், இஸ்ரேல் ஆகிய இடங்களிலும் மரபணு ரீதியாக ஒத்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது, தற்போது விஞ்ஞானிகள் இந்த இணைப்பைப் புரிந்துகொள்வதில் ஈடுபட்டுள்ளனர் என்று உலகளாவிய போலியோ ஒழிப்பு நிறுவனம் (GPEI) தெரிவித்துள்ளது.

தடுப்பூசி மூலம் பெறப்பட்ட போலியோ மேலே உள்ள இடங்களில் கிட்டத்தட்ட கேள்விப்படாதது. ஆனாலும் 2021 இல் நைஜீரியாவில் 415 பாதிப்புகள் உட்பட, பிற நாடுகளில் இது அறியப்பட்டதாக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் வெடிப்புகளை ஏற்படுத்துகிற - அச்சுறுத்தலாக உள்ளது.

இது பலவீனமான நேரடி வைரஸ் கொண்ட, வாய்வழி போலியோ தடுப்பூசியின் பயன்பாட்டிலிருந்து உருவாகிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட பிறகு, சில வாரங்களுக்கு அவர்களின் மலத்தில் வைரஸ் பரவுகிறது. தடுப்பூசி போடப்படாத சமூகங்களில், இது பின்னர் பரவி, வைரஸின் தீங்கு விளைவிக்கும் பிறழ்வாக மாறலாம்.

பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த நேரடி தடுப்பூசியை பயன்படுத்தவில்லை என்றாலும், மற்ற நாடுகள் பரவலை தடுக்க பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இது உலகளாவிய பரவலை அனுமதிக்கிறது, குறிப்பாக COVID-19 க்குப் பிறகு மக்கள் மீண்டும் பயணிக்கத் தொடங்கியதால் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஏன் இப்போது

ஆனால் தடுப்பூசி-பெறப்பட்ட மற்றும் தீவிர போலியோ வெடிப்புகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் தடுப்பூசி போடப்படாத மக்கள் தொகையாகவே உள்ளது என்று நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) உலகளாவிய போலியோ முன்னணி நிபுணர் டெரெக் எர்ஹார்ட் கூறினார்.

தொற்றுநோய்க்கு முன்’ தடுப்பூசி போடுவதில் தயக்கம் வளர்ந்து வரும் பிரச்சனையாக இருந்தது, பின்னர் COVID-19 ஒரு தலைமுறையில் வழக்கமான நோய்த்தடுப்பு சக்திக்கு மோசமான இடையூறுகளை ஏற்படுத்தியது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2022ல் போலியோ தடுப்பூசி பிரச்சாரங்களை மீண்டும் கொண்டு வருவதற்கான பெரும் முயற்சிகளுக்குப் பிறகு இதுவரை 177 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் தொற்றுநோயியல் நிபுணர் டேவிட் ஹேமன் உட்பட உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, கழிவுநீர் கண்டுபிடிப்புகள் இன்னும் ஒரு முக்கிய செய்தியுடன் பெற்றோருக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. எனவே குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு பாதுகாக்கவும் என்று அறிவுறுத்துகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Polio
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment