குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசக் காட்சிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் முறைகேடுகள் பார்ன்ஹப் வலைத்தளத்தில் நடைபெற்று வருவதாக தி நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டதை அடுத்து, உலகின் பிரபல ஆபாசப்பட வலைதளமான பார்ன்ஹப் , சரிபார்க்கப்படாத பயனர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட 10 மில்லியனுக்கும் அதிகமான காணொளி காட்சிகளை உடனடியாக நீக்கியது.
நியூ யார்க் டைம்ஸ் கட்டுரை: கட்டுரையாளர் நிக்கோலஸ் கிறிஸ்டோஃப், 'தி சில்ட்ரன் ஆஃப் பார்ன்ஹப்' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். அதில் ,"பார்ன்ஹப் வலைத்தளம் பாலியல் வல்லுறவு காட்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தை ஆபாசபடங்கள்/பலாத்காரம் மற்றும் கூட்டு பலாத்காரம், பழிவாங்கும் தன்மை கொண்ட ஆபாச காட்சிகள், இனவெறியை தூண்டும் பாலியல் காட்சிகள் பணமாக்கப்படுகிறது" என்று தெரிவித்தார். மேலும், குழந்தை ஆபாசம் குறித்த படங்களை தளத்திலிருந்து பார்ன்ஹப் அகற்றினாலும், சரிபார்க்கப்படாத உறுப்பினர்களால்தான் அவை மீண்டும் மீண்டும் பதிவேற்றப்பட்டு வருவதாக நிக்கோலஸ் தனது கட்டுரையில் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
கட்டுரை வெளியான ஒரு வாரத்திற்குள், மாஸ்டர்கார்டு, விசா போன்ற முக்கிய கிரெடிட் கார்டு நிறுவனங்கள் பார்ன்ஹப் உடனான பணப் பரிவர்த்தனை சேவையை துண்டித்துக் கொள்வதாக அறிவித்தது. விசா நிறுவனமும் பார்ன்ஹப் விவகாரத்தில் ஒரு விசாரணையைத் தொடங்கி இருக்கிறது.
பார்ன்ஹப்பின் தாய் நிறுவனமான மைண்ட்கீக் நிறுவனத்தின் மீது விசாரணையையும் மாஸ்டர் கார்கு நிறுவனம் தொடங்கியது. இதன் காரணமாக, பார்ன்ஹப் பிட்காயின் பணப் பரிமாற்றங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
பார்ன்ஹப் நிறுவனத்தின் பதில் : ஆபாச காணொளி காட்சிகளை சரிபார்க்கப்படாத உறுப்பினர்கள் பதிவேற்றம் செய்யப்படுவதையும், பதிவிறக்கம் செய்யப்படுவதையும் தடை செய்வதாக பார்ன்ஹப் தடை செய்வதாக அறிவித்தது. பதிவிறக்கங்களை " பயனர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றம் செய்யப்படும் இயங்குதள வரலாற்றில் இது விரிவான பாதுகாப்பு அம்சங்கள்" என்று அந்நிறுவனம் தெரிவித்தது .
பயனர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும் யூடியூப் போன்றே பல ஆண்டுகளாக பார்ன்ஹப் தன்னை தன்னை வடிவமைத்துக் கொண்டது. பொது மக்கள், யூடியூப் சேனளின் மூலம் எப்படி வருமானம் ஈட்டுகிரார்களோ, அதே போன்று தான் பார்ன்ஹப் ஆபாச படங்களை பணமாக்கியது. உலகம் முழுவதும் உள்ள ‘பார்ன்ஹப் சமூகம்’ வீடியோக்களை பதிவேற்றம் செய்யத் தொடங்கினர்.
வெப்.காம் நிறுவனத்தின் அறிக்கையின் படி, இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும்,3.3 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் தளத்திற்கு வருகைத் தந்துள்ளனர்.
இந்த வாரம் பார்ன்ஹப் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " கடந்த மூன்று ஆண்டுகளில் 84 மில்லியன் குழந்தை ஆபாசபடங்கள்/பலாத்காரம் தொடர்பான புகார்களை பேஸ்புக் நிறுவனம் தன்னிச்சையாக அறிக்கை அளித்தது. ஆனால், இன்டர்நெட் வாட்ச் பவுண்டேஷன் என்ற மூன்றாம் தரப்பு அமைப்பு பார்ன்ஹப்பில் குழந்தை ஆபாசபடங்கள்/பலாத்காரம் தொடர்புடைய 118 சம்பவங்களை மட்டுமே புகார் அளித்தது. " 118 காணொளி காட்சிகள் அதிகம் தான் என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அதனால்தான் தேவையான ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்று கூறியது.
அமெரிக்காவின் பாலியல் சுரண்டல் மற்றும் சுயநலத்திற்காக பயனப்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையத்தால் தங்கள் பார்ன்ஹப் "இலக்கு வைக்கப்படுவதாகவும்" அந்நிறுவனம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்தது.
தாக்கங்கள் : வலைத்தளம் அதன் பெரும்பான்மையான காணொளி காட்சிகளை நீக்கிவிட்டதால், பார்வையாளர்கள் எண்ணிக்கையில் கடுமையான வீழ்ச்சியைக் காணும். கிரெடிட் கார்டு நிறுவனங்கள் பணப் பரிமாற்றங்களை முடக்கியதால் புதிய பயனர்கள் சந்தா பெற முடியாது. இதன் காரணமாக, வருவாயில் விகிதாசார வீழ்ச்சி ஏற்படும்.
வலைத்தளத்தின் காணொளி காட்சியை பதிவேற்றம் செய்து வருவாய் ஈட்டும் உறுதி செய்யப்பட்ட பயனர்களின் வாழ்வாதாரங்களும் கடுமையாக பாதிக்கக்கூடும்.
பார்ன்ஹப் வலைத்தளத்தில் குழந்தை ஆபாசபடங்கள்/பலாத்காரம் தொடர்புடைய காட்சிகள் இருந்தால், மற்ற அனைத்து ஆபாசப்பட தளங்களிலும் இத்தகைய வீடியோ காட்சிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கிரெடிட் கார்டு நிறுவனங்கள் இதுபோன்ற அனைத்து தளங்களுடனான தொடர்புகளை முறித்துக் கொண்டால், ஆபாசப் படங்கள் வலைத் தளங்களின் வருவாய் நீரோட்டங்கள் சாத்தியமற்றதாக மாறக்கூடும். இந்த போக்கு, இந்த துறையின் முடக்கமா? புதியதொரு தொடக்கமா ? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.