scorecardresearch

வாய் புற்றுநோயின் தீவிரத்தை கண்டறியும் கையடக்க கருவி – சாதித்த ஐஐடி விஞ்ஞானிகள்

பெரும்பாலான வாய் புற்றுநோய்கள் அட்வான்ஸ்டு நிலையை அடையும் வரை கண்டறியப்படாமல் இருக்கும். அதன் காரணமாக தான், இறப்புகள் ஏற்படுகிறது.

வாய் புற்றுநோயின் தீவிரத்தை கண்டறியும் கையடக்க கருவி – சாதித்த ஐஐடி விஞ்ஞானிகள்

ஐஐடி காரக்பூர் விஞ்ஞானிகள், வாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கான சிறிய, மிகவும் எளிதாக உபயோகிக்ககூடிய, non-invasive அதாவது உடலுக்குள் செலுத்தி சோதனை செய்ய அவசியமில்லாத சாதனத்தை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

இதன் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கு வங்கத்தில் உள்ள குருநானக் பல் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வல்லுநர்கள் மேற்பார்வையிட்டனர்.

உயர்தர பயாப்ஸி அறிக்கைகள் மூலம் சரிபார்க்கப்பட்டு, cancer மற்றும் pre cancer ஸ்டேஜ்களின் அசாதாரண நிலைகளை வேறுபடுத்துவதில் புதிய செயல்திறனை கண்டறிந்துள்ளனர். இந்த ஆராய்ச்சி அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியில் வெளியிடப்பட்டது.

இந்த கையடக்க சாதனம் குறித்த தகவல்களை நமது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துடன் ஐஐடி-காரக்பூரில் உள்ள இயந்திரவியல் துறையின் பேராசிரியர் சுமன் சக்ரவர்த்தி பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது, “குறைந்த விலையில் கிடைக்ககூடிய கையடக்க இமேஜிங் சாதனமாகும். தெர்மல் இமேஜிங் மற்றும் பகுப்பாய்வுகள் மூலம் திசுக்களின் ரத்த ஓட்ட விகிதத்தில் அளவிடப்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் வாய்வழி புற்றுநோய் மற்றும் முன் புற்றுநோயைக் கண்டறிகிறது.

இதில், மினியேச்சர் ஃபார்-இன்ஃப்ராரெட் கேமரா மற்றும் ஈரப்பதம் சென்சார் ஆகியவற்றை இணைக்கும் பிளட் பெர்ஃப்யூஷன் இமேஜர், எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தப்பட்டு, டேட்டா டைரவ்வுடன் சாப்ட்வேர் இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்த கையடக்க சாதனம், பல்வேறு சென்சார்கள் மற்றும் கன்ட்ரோலர்கள் மூலம் அளவிடப்பட்ட டேட்டாவை கம்பூயுட்டர் ஸ்டிமூலேஷன் என்ஜின் மூலம் புற்றுநோய் ஸ்டேஜ்களை வேறுபடுத்த உதவுகிறது. இதன் மூலம், புற்றுநோயின் தீவிரத்தை கண்டறிய சிறப்பு மருத்துவ மையங்களுக்கு அனுப்பவேண்டிய அவசியம் இருக்காது.

வாய்புற்றுநோய் தான் பின்தங்கிய சமூகங்களில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. ஆரம்பநிலையில் கண்டறியப்பட்டால் சராசரியாக ஐந்தாண்டு உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு 80 சதவீதம் உள்ளது. ஆனால், காலம் தாழ்த்தி கண்டறிந்தால், உயிர் பிழைப்பு விகிதம் 65 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாகக் தான் இருக்கிறது.

உண்மை என்னவென்றால், பெரும்பாலான வாய் புற்றுநோய்கள் அட்வான்ஸ்டு நிலையை அடையும் வரை கண்டறியப்படாமல் இருக்கும். மருத்துவ வளம் சரியாக இல்லாத காரணத்தால், நோயாளியின் முதல் மருத்துவ பரிசோதனையின் போது, புற்றுநோயின் தீவிரத்தை அவர்களால் கண்டறிய முடியாமல் போகிறது.

மேலும் பேசிய சக்கரவர்த்தி, இந்த புதிய தொழில்நுட்பமானது, சமூக சுகாதார மையத்தில் உள்ள மருத்துவரால் முதல் பரிசோதனையின் போதே, புற்றுநோய் பாதிப்பின் தீவிரத்தை முன்கூட்டியே கண்டறியும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த மலிவான கருவி, மருத்துவர்கள் தீர்க்கமாக முடிவெடுக்க உதவியாக அமையும் என்றார்.

இந்த தொழில்நுட்பமானது தற்போது, வணிக ரீதியாக நிறுவனங்களுக்கு கொடுத்திட தயார் நிலையில் உள்ளது. மருத்துவப் பயன்பாட்டிற்கு முன், இது விரிவான சட்டரீதியான களப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படலாம், இதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம். ஒரு சாதனத்தின் விலை 500ஆக இருக்கலாம் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Portable and non invasive way to detect oral cancer

Best of Express