The Indian Navy News: முதல் முதலாக ஹெலிகாப்டர் ஸ்ட்ரீமில் (helicopter stream) இரண்டுப் பெண் அதிகாரிகளைப் பார்வையாளர்களாகத் தேர்வு செய்திருப்பதாகக் கடந்த திங்கட்கிழமை இந்தியக் கடற்படை அறிவித்தது. இவர்கள் போர்க்கப்பல்களிலிருந்து இயங்குவார்கள். கடந்த மார்ச் மாதம், கடற்படையில் உள்ள பெண்கள் சேவை ஆணைய அதிகாரிகள் (women Short Service Commission officers) நிரந்தர ஆணையத்திற்குத் தகுதியானவர்கள் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. கடந்த ஆண்டு டிசம்பரில், முதல் பெண் விமானியைக் கடற்படை சேர்த்தது. இந்த முன்னேற்றங்கள் கடற்படையில் உள்ள பெண்களுக்கு எவ்வளவு முக்கியமானது, இந்த நிலை எவ்வாறு உருவானது மற்றும் வருங்கால வாய்ப்புகள் எப்படி இருக்கும் போன்றவற்றைப் பார்ப்போம்.
இந்தியக் கடற்படையில் பெண்கள்:
1992-ம் ஆண்டுக்கு முன்பு வரை, ஆயுதப்படை மருத்துவ சேவைப் பணியில் மட்டுமே பெண் அதிகாரிகள் சேர்க்கப்பட்டனர். ஜூலை 1992 முதல் சிறப்பு நுழைவுத் திட்டத்தின் மூலமாகவும், சிறிய சேவை ஆணையம் (Short Service Commission) மூலமாகவும், கடற்படையின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் மட்டும் பெண்களைச் சேர்க்கத் தொடங்கியது கடற்படை. பல ஆண்டுகளாக, பல்வேறு கிளைகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. தற்போது பெண் அதிகாரிகள் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு, பார்வையாளர்கள், சட்டம், லாஜிஸ்டிக்ஸ், கல்வி, கடற்படைக் கட்டமைப்பு, கடல்சார் மறுமதிப்பீட்டு நீரோட்ட விமானிகள் மற்றும் கடற்படை ஆயுத ஆய்வாளர்கள் உள்ளிட்ட பணிகளில் பெண்கள் சேருவதற்கான வாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ராணுவம் மற்றும் விமானப்படையைப் போலவே கவனிக்கப்பட வேண்டும். ஏனெனில், பெண்கள் தற்போது ஆணையிடப்பட்ட அதிகாரிகளாக மட்டுமே சேர்க்கப்படுகிறார்கள். ஜூனியர் கமிஷன் மற்றும் Non-Commissioned அதிகாரிகள் வகைகளைச் சேர்ந்த பிற பகுதிகளில் அல்ல.
2000-களின் முற்பகுதியில், மருத்துவ மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஸ்ட்ரீமில் இருந்தப் பெண்கள் கடற்படைக் கப்பல்களுக்காகவும் பெண் அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டார்கள். இது ஐந்து ஆண்டுகள் வரை மட்டுமே பின்பற்றப்பட்டது. பல்வேறு காரணங்களுக்காக ஒரு கட்டத்தில் இவை நிறுத்தப்பட்டன.
கடந்த ஆண்டு டிசம்பரில், டோர்னியர் விமானத்தின் (Dornier aircraft) விமானியாக ஒரு பெண் அதிகாரியை நியமித்ததாகக் கடற்படை அறிவித்தது. டோர்னியர், கரையோரத்திலிருந்து இயங்கும் நிலையான சிறகு விமானம். கடந்த திங்களன்று, ஹெலிகாப்டர் ஸ்ட்ரீமிற்கு இரண்டு பெண் அதிகாரிகளைப் பார்வையாளர்களாகச் சேர்ப்பதாகக் கடற்படை அறிவித்தது. பார்வையாளர்கள், ஹெலிகாப்டர்களில் அல்லது கடற்படையால் இயக்கப்படும் நிலையான சிறகு விமானங்களில் பறந்து அதன் வான்வழியைத் திட்டமிடுபவர்கள்.
கப்பல்களைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு சவால்களைப் பொறுத்தவரை, லாஜிஸ்டிக்ஸ் பகுதி அனைவரும் நினைப்பது போல சவாலானது அல்ல. குறிப்பாகக் கடற்படையின் பெரிய போர்க்கப்பல்களில் பெரும்பாலானவை பெண்களுக்கு ஒதுக்கக்கூடிய அடிப்படை வசதிகளைக் கொண்டுள்ளன. மனநிலை மற்றும் பாலின உணர்திறன் பற்றிய கேள்விக்கு, ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படும் என்று பலர் நம்புகிறார்கள். அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.
ஆயுதப்படைகளிலிருந்தும், கடற்படையிலிருந்தும் பணியாற்றும் மற்றும் ஓய்வுபெற்ற பெண் அதிகாரிகள், சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த கொண்டாட்டங்களுக்கு எதிராக ஓர் முன்னெச்சரிக்கை குறிப்பையும் முன் வைக்கின்றனர். இந்த முன்னேற்றங்கள் உண்மையில் அதிகமான பெண்கள் ஆபரேஷனல் ஸ்ட்ரீம் (operational streams) மற்றும் புதிய ஸ்ட்ரீம்களில் சேர்ந்து பணியாற்ற வழிவகுக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதே நேரம், இந்த புதிய அதிகாரிகள் மீது செல்லும் ஊடகம் மற்றும் பொதுமக்களின் கவனமும் அவர்களுக்குத் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கவலைப்படுகிறார்கள்.
பல ஆண் இராணுவத் தலைவர்கள் இதற்கு ஆதரவளிப்பதைப் பெண் அதிகாரிகள் பாராட்டினாலும், இதன் ஒட்டுமொத்த அமைப்பிலிருந்து வரும் எதிர்ப்பையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடற்படை பெண்களுக்கான மற்றொரு மைல் கல்லாக, இந்த ஆண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் கடற்படையில் உள்ள சிறிய சேவை ஆணையத்தின் பெண் அதிகாரிகள் நிரந்தர கமிஷன் (permanent commission) பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் என உறுதி செய்தது. ஆயுதப்படைகளில் சிறிய சேவை ஆணையத்தின் பதவிக்காலம் 10 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
யூனியன் ஆஃப் இந்தியா மற்றும் அன்னி நாகராஜா (Annie Nagaraja) இடையில் தொடுக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய நீதிபதிகள் DY சந்திரசூட் மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர், “பாலின சமத்துவத்திற்கான போர் என்பது மனதினுள் உள்ள போர்களை எதிர்கொள்வதுதான். சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு பணியிடத்தில் நியாயமான மற்றும் சமமான உரிமைகள் மறுக்கப்பட்ட உதாரணங்களுடன் கூடிய வரலாறு ஏராளமாய் உள்ளன" என்று குறிப்பிட்டனர்.
மேலும், "ஆயுதப்படைகளின் கண்ணோட்டத்திலிருந்து, முடிவெடுப்பவர்கள் மற்றும் நிர்வாகிகளால் குறிப்பிட்ட சில காரணங்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் ஆண் ஆதிக்கம் செலுத்தும் படிநிலைகளான உடல் வலிமை, தாய்மை மற்றும் உடல் பண்புக்கூறுகள் இருந்தன. சொல்லப்படும் நூற்றுக்கணக்கான சாக்குப்போக்குகள், பாலினம், நியாயம் மற்றும் சமமான வேலை படிநிலைகள் உள்ளிட்ட ஒவ்வொரு தனிமனிதனுடன் தொடர்புடைய பெருந்தன்மைக்கான அரசியலமைப்பு உரிமைக்கு பதில் ஆகிடாது. பெண்கள் தங்கள் திறமை, திறன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் உறுதியான பதில்களுடன் ஏற்கெனவே இருக்கும் இந்த பாகுபாட்டின் வரலாற்றைக் கடக்க வாய்ப்பு இருப்பதை இது உறுதி செய்கிறது" என்றும் கூறினர்.
பெண்களைக் கப்பல்களில் முதன்மை பதவிகளில் அமர்த்தப்படுவதால், ஆபரேஷனல் ஸ்ட்ரீம்களின் தொழில் முன்னேற்றத்திற்கு ஓர் முக்கிய அம்சமாக இருக்கும் என்றும், நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்ட சவாலான பணிகளை மேற்கொண்டு செய்வதற்குப் பெண்களுக்கு ஒரு நாள் இந்த முன்னேற்றங்கள் வழிவகுக்கும் என்றும் பெண் அதிகாரிகள் நம்புகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.