Advertisment

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ. நெடுமாறன் சொல்வதில் உண்மை இருக்கிறதா? விடுதலை புலிகளின் தலைவர் எப்படி கொல்லப்பட்டார்?

இந்த சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் கழித்து விடுதலை புலிகள் அமைப்பும் பிரபாகரன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது. 2009-ம் ஆண்டு மே 24-ம் தேதி விடுதலை புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், பிபிசி ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியில், ” ஒப்பற்ற தலைவரான பிரபாகரன் உயிர்த்தியாகம் செய்தார்” என்று கூறியிருந்தார்.

author-image
WebDesk
New Update
பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ. நெடுமாறன் சொல்வதில் உண்மை இருக்கிறதா? விடுதலை புலிகளின் தலைவர் எப்படி கொல்லப்பட்டார்?

’பிரபாகரன் உயிரோடு,  நலமுடன் இருக்கிறார்’ என்று பழ. நெடுமாறன்  கூறியது தமிழக அரசியல் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பழ.நெடுமாறன் பற்றியும்  பிரபாகரன் மறைவை பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

Advertisment

நேற்றைய தினத்தில் தஞ்சவூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்  பழ. நெடுமாறன் கூறியதாவது “ பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். மேலும் அவர் நலமாகவும் இருக்கிறார். பிரபாகரன் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவே நான் இப்போது இதை வெளியிடுகிறேன். மேலும் அவரின் அனுமதியோடும் வெளியிடுகிறேன்.  தமிழீழத்தை பெற அடுத்த கட்ட திட்டங்களை அவர் விரைவில் அறிவிக்க உள்ளார். உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் பிரபாகரனை வரவேற்க வேண்டும். விடுதலை புலிகள் இயக்கம் செயல்பாட்டில் இருந்த வரை, இந்தியாவுக்கு எதிரான எந்த சக்தியையும் இலங்கையில் அனுமதித்தது இல்லை. ஆனால் தற்போது இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாகி உள்ளது. இந்தியப் பெரும் கடலிலும் அவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்திய அரசு இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.  மேலும் அவர் இந்திய பெருங்கடல் என்ற வார்த்தைக்கு பதிலாக இந்துமாக் கடல் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

யார் இந்த பழ. நெடுமாறன்?  

பழநெடுமாறன் என்பவர் ஒரு எழுத்தார், சமூக ஆர்வலர், தென் செய்தி என்ற வார இதழின் ஆசிரியர்,  மேலும் இவர் காங்கிராஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர். தமிழகத்தின்  முன்னாள் முதல்வர் கே. காமராஜருக்கு நெருக்கமானவர். காமராஜர் இறந்த பிறகு காங்கிரஸில்  இருந்து வெளியேறினார்.  கன்னட திரைப்பட நடிகர் ராஜ் குமாரை, வீரப்பன் 2000-ம் ஆண்டு விடுவித்த விவகாரத்தில் உதவி செய்தவர்.

இலங்கையில் போர் நடைபெற்றபோது, பிரபாகரனை பார்க்க இலங்கை சென்றவர். 1992-ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதால்,  இவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 1994-ம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக சார்ஜ் ஷீட் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு வரவில்லை. 2002-ம் ஆண்டு மீண்டும் இவர்  பிரபாகரன் தொடர்பாக பேசியதால், இவர் மீது பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யபட்டு கைது செய்யப்பட்டார். அப்போது 2002-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தேசதுரோக வழக்கும் சேர்க்கப்பட்டது. 15 மாதங்கள் அவர் சிறையில் இருந்தார்.

இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில், தமிழ் ஆதரவாளர்கள் அமைப்பின் தலைவராக இருந்தார். அப்போது இவரும், மனித உரிமை ஆர்வளர்களும், இந்திய அதிகாரிகளிடம் போர் நிறுத்தம் தொடர்பாக அழுத்தங்கள் கொடுத்தனர்.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று பழ. நெடுமாறன் இதற்கு முன்பே பேசியிருக்கிறார். 2018-ம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸிடம் இதை கூறியிருக்கிறார்.

பழ.நெடுமாறனின் மகன் பழனி குமனன், ஒரு பொறியாளர். இவர் ”The Wall Street Journal” என்ற செய்திதாளில் பணிபுரிகிறார். 2015-ம் ஆண்டு இந்த செய்திதாள் குழு புகழ் பெற்ற ’புலிட்சர் விருதை’ சிறந்த புலனாய்வு இதழியலுக்காக பெற்றது. இந்த குழுவில் பழ. நெடுமாறனின் மகனும் இடம் பெற்றிருந்தார்.

பிரபாகரன் எப்படி கொல்லப்பட்டார் ?

2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி பிரபாகரன் கொலை செய்யப்படார் என்று இலங்கை அரசு அறிவித்தது. இதற்கு சில மாதங்களுக்கு முன்பே, விடுதலை புலிகளை ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டும் என்று இலங்கை ராணுவம் முடிவு செய்தது. இதனால் விடுதலை புலிகளை, இராணுவம் வடக்கு இலங்கைக்கு விரட்டியது. விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் முல்லைத்தீவு பகுதியில், மறைவாக இருந்த இடத்தை இலங்கை  ராணுவம் சுற்றி வளைத்தது.  இலங்கை ராணுவத்தின் உயர் அதிகாரிகள் கொடுத்த தகவலின் படி, பிரபாகரனும், அவரது ஆதரவாளர்களும் வேனில் தப்பிச் செல்ல முயன்றபோது, ராணுவத்தினர், குறி பார்த்து செலுத்திய ராக்கெட், அந்த வேனை தாக்கியது. இதில் பிரபாகரன் உள்பட்ட அனைவரும் மரணமடைந்தனர். 

இந்த சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் கழித்து விடுதலை புலிகள் அமைப்பும் பிரபாகரன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது. 2009-ம் ஆண்டு மே 24-ம் தேதி விடுதலை புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர்  செல்வராசா பத்மநாதன், பிபிசி ஊடகத்திற்கு  கொடுத்த பேட்டியில்,  ” ஒப்பற்ற தலைவரான பிரபாகரன் உயிர்த்தியாகம் செய்தார்” என்று கூறியிருந்தார்.

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சா, அப்போதைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜியை தொலைப்பேசியில் அழைத்து, பிரபாகரன் மரணத்தை உறுதி செய்தார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment