ஏப்ரல் 10 முதல், தனியார் தடுப்பூசி மையங்களில், 18-வயது மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முன்னெச்சரிக்கை மூன்றாவது டோஸ் செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
முன்னெச்சரிக்கை டோஸ் எப்போது பெறலாம்?
18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் தடுப்பூசியின் 2வது டோஸைப் பெற்று ஒன்பது மாதங்கள் அல்லது 39 வாரங்கள் முடிந்த அனைவரும், முன்னெச்சரிக்கை மூன்றாவது டோஸுக்கு தகுதியுடையவர்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது இலவசமாக கிடைக்குமா?
இல்லை. 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கான முன்னெச்சரிக்கை டோஸ் தனியார் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும். எனவே, டோஸ் பெறுபவர் அதற்கு பணம் செலுத்த வேண்டும். தனியார் மையங்கள் முன்னெச்சரிக்கை டோஸ் விலையை விரைவில் அறிவிக்கும், மேலும் அது CoWin தளத்திலும் பிரதிபலிக்கும்.
இலவச முன்னெச்சரிக்கை டோஸ்களுக்கு தகுதியானவர்கள் யார்?
சுகாதாரப் பணியாளர்கள், முன்னணிப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூன்றாம் டோஸை அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாகப் பெறத் தகுதியுடையவர்கள்.
முன்னெச்சரிக்கை டோஸுக்கு எந்த தடுப்பூசி போடப்படும்?
பூஸ்டர் ஷெட்யூல்ஸ்க்கு ஒரே மாதிரியான தடுப்பூசியை இந்தியா தொடர்ந்து பின்பற்றும். அதாவது இரண்டு டோஸ் கோவிஷீல்டைப் பெற்ற பயனாளி மூன்றாவது டோஸாக கோவிஷீல்டை எடுக்க வேண்டும். இதேபோல், இரண்டு டோஸ் கோவாக்சின் பெற்றவர்கள், முன்னெச்சரிக்கை டோஸாக கோவாக்சின் எடுக்க வேண்டும்.
3வது டோஸுக்கு நீங்கள் எப்போது தகுதியாவீர்கள் என்பதை அறிய முடியுமா?
பெரும்பாலும், ஆம். கோ-வின் பிளாட்ஃபார்ம் பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் வரும்போது அதைப் பெறுவதற்கு SMS அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை டோஸிற்காக ஒரு பயனாளி தடுப்பூசி மையத்திற்குள் செல்ல முடியுமா?
ஆம். ரெஜிஸ்ட்ரேஷன் மற்றும் அபாயின்மென்ட் சேவைகளை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் அணுகலாம். எனவே CoWin இல் ஸ்லாட்டுகளை முன்பதிவு செய்ய விரும்பாதவர்கள், வாக்-இன் வசதிகளை வழங்கும் தனியார் தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கை டோஸ் பெறலாம்.
இந்தியாவில் இதுவரை எத்தனை முன்னெச்சரிக்கை டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன?
மொத்தம் 45.15 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள், 69.77 லட்சம் முன்னணிப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 1.25 கோடி பேர் முன்னெச்சரிக்கை டோஸ் பெற்றுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “