ஜனாதிபதி மன்னிக்கும் அதிகாரம்: அமெரிக்கா- இந்தியா என்ன வேறுபாடு?

அமைச்சரவையின் ஆலோசனைக்கு குடியரசு தலைவர் கட்டுப்பட்டாலும், பிரிவு 74 (1) மறுபரிசீலனைக்கு ஒரு முறை திருப்பித் தர அவருக்கு அதிகாரம் அளிக்கிறது.

President’s powers to pardon — in US, India :  தன்னுடைய பணிக்காலம் நிறைவடைய வெறும் இரண்டு மாதங்களே இருக்கின்ற நிலயில் புதன்கிழமை அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் தன்னுடைய அரசியல் சாசன உரிமையை பயன்படுத்தி அந்நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃப்ளைனிற்கு மன்னிப்பு வழங்கினார். எஃப்.பி.ஐ.யிடம் பொய் கூறியதற்காக இரண்டு முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்.

மன்னிப்பு வழங்குதலுக்கு அமெரிக்க அதிபருக்கு இருக்கும் அதிகாரங்கள் என்ன?

ஃபெடரல் குற்றங்களில் ஈடுபட்ட ஒருவரின் தண்டனை காலத்தை குறைக்கவோ, அவருக்கு மன்னிப்பு வழங்கவோ அமெரிக்க அதிபர்களுக்கு அரசியல் சாசன உரிமை உள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றம், இந்த அதிகாரத்திற்கு வரம்பு இல்லை. அதே போன்று காங்கிரஸால் இந்த முடிவில் தலையிட இயலாது.  க்ளமென்சி என்பது ஒரு பரந்த எக்ஸ்க்யூட்டிவ் அதிகாரம். இது விவேகத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது தான் வழங்கும் மன்னிப்புகள் தொடர்பாக அதிபர் யாருக்கும் பதில் அளிக்க வேண்டாம். மேலும் அப்படி ஒருவரை விடுவிக்க எந்த காரணத்தையும் யாருக்கும் தர வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் சில வரம்புகள் உள்ளது. உதாரணத்திற்கு, அமெரிக்க அரசியலமைப்பின் பிரிவு II, பிரிவு 2- ல் அனைத்து அதிபர்களுக்கும் “இம்பீச்மெண்ட்டை தவிர (அதிபர்கள் பதவியில் இருந்து விலக அமெரிக்க சேம்பர் பயன்படுத்தும் நடவடிக்கை), அனைத்து குற்றங்களுக்கும் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளது.  மேலும் அதிகாரம் கூட்டாட்சி குற்றங்களுக்கே பொருந்தும் தவிர மாநில குற்றங்களுக்கு பொருந்தாது. அதிபரால் மன்னிப்பு பெற்றவர்களின் வழக்குகள் ஒவ்வொரு தனிப்பட்ட மாகாணத்தின் சட்டங்களின் கீழ் விசாரிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ட்ரெம்ப் மற்றும் இதர அதிபர்களால் வழங்கப்பட்ட மன்னிப்பு

ஃபைளைனுக்கு மட்டும் இவர் மன்னிப்பு வழங்கவில்லை. 2017ம் ஆண்டு ட்ரெம்ப் முன்னாள் மாரிகோபா பகுதி ஷெஃரிப் ஜோ அர்பையோவையும் மன்னித்தார். நீதிமன்ற உத்தரவையும் மீறி வெளிநாடுகளில் இருந்து அமரிக்காவில் தஞ்சம் புகுந்தவர்களை, சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள் என்று கூறி கைது செய்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார். வலதுசாரி வர்ணனையாளர் மற்றும் பிரச்சார மோசடி செய்து தண்டனை பெற்ற தினேஷ் டிசோசா மற்றும் பத்திர மோசடியில் ஈடுபட்ட மைக்கேல் மில்கென் ஆகியோரையும் விடுதலை செய்தார்.

இருப்பினும் புதிய அமெரிக்க வரலாற்றில் இந்த அதிகாரத்தை மிகவும் குறைவாக பயன்படுத்தியவர் டொனால்ட் ட்ரெம்ப் என்கிறது ப்யூ ஆராய்ச்சி தரவுகள். அவருடைய நான்கு ஆண்உ கால ஆட்சியில் ட்ரம்ப் 29 நபர்களை விடுதலை செய்துள்ளார். 16 நபர்களுக்கு தண்டனையை குறைத்துள்ளார்.

அவருக்கு மாறாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தன்னுடைய 8 வருட ஆட்சியில் 212 பேர்களுக்கு பொதுமன்னிப்பும், 1715 நபர்களின் தண்டனை காலத்தையும் குறைத்துள்ளார். டொனால்ட் ட்ரெம்புடன் ஒப்பீட்டு அளவில் பார்க்கும் போது அவருக்கு அடுத்தபடியாக ஜார்ஜ் எச்.டபிள்.யு. புஷ் 77 முறை மன்னிப்புகள் வழங்கியுள்ளார்.

இருப்பதிலேயே அதிக அளவு பொதுமன்னிப்பை வழங்கியவர் அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட். 12 வருட ஆட்சியில், இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் 3,796 நபர்களுக்கு பொதுமன்னிப்பு மற்றும் தண்டனை குறைப்பை அறிவித்துள்ளார்.

இந்திய குடியரசு தலைவர்கள் எவ்வாறு மன்னிப்புகளை வழங்குகின்றனர்?

அமெரிக்க அதிபர்கள் பொதுமன்னிப்பை தடங்கலற்று வழங்குகின்ற நிலையில் இந்திய குடியரசு தலைவர்கள் கேபினட்டின் ஆலோசனைப்படியே நடக்க வேண்டும். இந்திய அரசியல் சாசன பிரிவு 27-ன் கீழ், “மன்னிப்பு வழங்குவது, தண்டனையை குறைப்பது அல்லது எந்தவொரு குற்றத்திற்கும் தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரின் மரண தண்டனையையும் இடைநிறுத்தவோ, மாற்றவோ இந்திய குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது”. . பிரிவு 161இன் கீழ், ஆளுநருக்கும் மன்னிப்பு அதிகாரம் உள்ளது, ஆனால் இவை மரண தண்டனை வரை நீட்டிக்கப்படுவதில்லை.

குடியரசு தலைவர் தானாக, சுதந்திரமாக மன்னிப்புகளை வழங்க இயலாது. கேபினட்டின் ஆலோசனைக்காக ஜனாதிபதி மாளிகை, தான் பெற்ற கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பும். இதனை அமைச்சகம், மாநில அரசின் கருத்துகளுக்காக, சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு அனுப்பும். அதன் பதிலை பொறுத்து, கவுன்சில் ஆஃப் மினிஸ்டர்கள் சார்பாக தன்னுடைய ஆலோசனையை உள்துறை அமைச்சகம் வழங்கும். சில வழக்குகளில், உச்ச நீதிமன்றம், அமைச்சர்கள் சபையின் ஆலோசனைப்படி கருணை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 1980இல் மரு ராம் vs இந்திய யூனியன், மற்றும் 1994 ல் தனஞ்சோய் சாட்டர்ஜி Vs மேற்கு வங்காள மாநிலம் ஆகியவை இதில் அடங்கும்.

அமைச்சரவையின் ஆலோசனைக்கு குடியரசு தலைவர் கட்டுப்பட்டாலும், பிரிவு 74 (1) மறுபரிசீலனைக்கு ஒரு முறை திருப்பித் தர அவருக்கு அதிகாரம் அளிக்கிறது. எந்தவொரு மாற்றத்திற்கும் எதிராக அமைச்சர்கள் சபை முடிவு செய்தால், அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Presidents powers to pardon in us india

Next Story
கொரோனா நோயாளிகளுக்கு அபாயகரமான நுரையீரல் நோய் ஏன்?Corona Virus Covid 19 Lung Fibrosis Research Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com