Advertisment

குடியுரிமை போராட்டம் : பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவித்தலைத் தடுத்தல் சட்டம் என்றால் என்ன ?

உச்சநீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் சட்டம் போதுமானதாக இல்லை என்று கண்டறிந்துள்ளது. தன்னுடைய அதிகாரத்தின் மூலம் சட்டத்தின் இடைவெளிகளை நிரப்பவும் முயற்சித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cji, cji of india, CAA protest, jamia millia university,students protest, jamia millia islamia delhi

cji, cji of india, CAA protest, jamia millia university,students protest, jamia millia islamia delhi

ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் மிதமிஞ்சியதாகக் கூறப்படும் மனுக்களை விசாரிக்க ஒப்புக் கொண்ட அதே வேளையில், இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே, " எதிர்பாளர்கள் நியாயம் வீதியில் தான் கிடைக்கும் என்று  முடிவு எடுத்திருந்தால், அவர்கள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார்.

Advertisment

பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்கு எதிராக சட்டம் இருந்தபோதிலும், ஆர்ப்பாட்டங்களின் போது நாடு முழுவதும் கலவரம், சேதம் மற்றும் சட்டவிரோத தீ விபத்து சம்பவங்கள் பொதுவாக நடந்து வருகிறது.

சட்டம் என்ன சொல்கிறது

பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவித்தலைத் தடுத்தல் சட்டம், 1984 - ல்    “பொதுச் சொத்தையும் பொறுத்த செயல் எதனையும் செய்வதால் சொத்தழிப்புச் செய்கிற எவரோருவரும், ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும் (ஆனால், ஆறு மாதங்களுக்கு குறையாத ) கால அளவிற்குச் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்துத தண்டிகப்படுதல் வேண்டும்" என்று கூறப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த சட்டத்தில் பொது சொத்து என்றால் என்ன என்பதற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுச் சொத்து

அ. நீர், ஒளி, விசை, அல்லது ஆற்றலைத் தயாரித்தல், பங்கீடு செய்தல் அல்லது வழங்குதல் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் ஏதேனும் ஒரு கட்டிடம், கருவிகல அமைவு அல்லது பிற சொத்து,

ஆ. எவையேனும் எண்ணெய் கருவிகல அமைவுகள்.

இ.  எவையேனும்  கழுவுநீர் கட்டுமானங்கள்

ஈ. ஏதேனும் சுரங்கம் அல்லது தொழிற்சாலை

உ. ஏதேனும் பொது போக்குவரத்து வழிவகை அல்லது தொலைத் தொடர்பு ஆல்லது அவை தொடர்பாக பயன்படுத்தப்படும் ஏதேனும் கட்டிடம், கருவிலக அமைவு அல்லது பிற சொத்து

இருப்பினும், உச்சநீதிமன்றம் பல முந்தைய சந்தர்ப்பங்களில் சட்டம் போதுமானதாக இல்லை என்று கண்டறிந்தது. மேலும் தன்னுடைய அதிகாரத்தின் மூலம் சட்டத்தில் இடைவெளிகளை நிரப்ப முயற்சித்தது.

பல்வேறு காலங்களில் இந்தியாவில் கிளர்ச்சி போராட்டம,கடையடைப்பு, முழு அடைப்பு போன்ற பெயரில் பொது மற்றும் தனியார் சொத்துக்கள் அழிக்கபப்ட்ட  நிகழ்வுகளை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், 2007ம் ஆண்டில் இரண்டு குழுக்களை அமைத்தது. இதற்கு, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி தாமஸ் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் ஆகியோர்  தலைமயில் இந்த பரிந்துரை குழு அமைக்கபப்ட்டது.

2009ம் ஆண்டில், பொது மற்றும் தனியார் சொத்துக்களின் அழிவு v ஆந்திர மாநிலம் மற்றும் பலர் என்ற வழக்கில், உச்சநீதிமன்றம் இரண்டு நிபுணர் குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் சொத்தழிப்பு  தொடர்பான  புது வழிகாட்டுதல்களையும்  வெளியிட்டது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள்:  

எதிர்ப்பாளர்களுக்கு எதிராக  ஆதாரச் சுமையை மாற்ற தாமஸ் குழு பரிந்துரைத்தது. இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்,  வழக்கு தொடர்ந்து ஒரு அமைப்பால் அழைக்கப்பட்ட நேரடி நடவடிக்கையில் (ஆர்ப்பாட்டத்தில் ) பொது சொத்துக்கள் சேதமடைந்துள்ளன என்பதை நிரூபிக்கப்பட வேண்டும்.

உச்சநீதிமன்றம் கூறுகையில்," வழக்கு பதிவுசெய்யப்பட்ட அந்த கட்டத்திலிருந்து,குற்றம் சுமத்தப்பட்டவர்தான், தான்  குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். மேலும், குற்றம் சாட்டப்பட்டவரை,பொது சொத்துக்களை அளித்த குற்றவாளியாக யூகிக்கும் அதிகாரத்தை நீதிமன்றத்திற்கு வழங்க சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், கூறியது,".

பொதுவாக, வழக்கில் ஒருவர் குற்றவாளியாக நிரூபிக்கும் வரை  நிரபராதி என்று சட்டம் கருதுகிறது.ஆனால், பாலியல் வன்முறை போன்ற  வழக்குகளில் ஆதாரச் சுமையை குற்றம் சாட்டப்பட்டவர் மீது சுமத்துவது இந்திய சட்ட நெறிமுறைகளில் ஒன்றாக கருதப்பட்டுவருகிறது.

எனவே, பொது சொத்தழிப்பு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது  இந்த ஆதாரச சுமையை ஏற்ற வேண்டும்  என்று கூறியது.

நரிமன் கமிட்டியின் பரிந்துரைகள், பொது சொத்தழிப்பு  சேதங்களை எவ்வாறு மீட்டெடுப்பது போன்ற கேள்விகளையும் கையாண்டன. அதன் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், கலவரக்காரர்கள் சேதத்திற்கு கண்டிப்பாக பொறுப்பேற்கப்படுவார்கள் என்றும், சேதத்தை "நல்லதாக்கும் வகையில்" இழப்பீடு வசூலிக்கப்படும் என்றும் கூறியது.

" ஒரு நபர்கள், கூட்டாகவோ அல்லது வேறுவிதமாகவோ,ஒரு போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி,அது வன்முறையாக மாறி, அதனால் பொது சொத்துக்களுக்கு சேதம் விளையுமானால்-  சேதத்தை விளைவித்த அந்த நபர்கள் அல்லது  சேதத்தை விளைவித்த போரட்டத்தில் ஒரு பகுதியாக இருந்த நபர்கள்  அல்லது  போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள்  சேதங்களுக்கு கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும் . சேத மதிப்பீடு சாதாரண நீதிமன்றங்களால் மதிப்பிடப்படலாம் அல்லது உரிமையைச் செயல்படுத்த உருவாக்கப்பட்ட எந்தவொரு சிறப்பு நடைமுறையினாலும் மதிப்பிடப்படலாம், ”என்று நீதிமன்றம் கூறியது.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின் தாக்கம் : 

சட்டத்தைப் போலவே, வழிகாட்டுதல்களும் ஒரு சின்ன  தாக்கத்தை மட்டும் ஏற்படுத்தியுள்ளன. ஏனென்றால், எதிர்ப்பாளர்களை அடையாளம் காண்பது  மிகவும் கடினமாக. அதிலும், குறிப்பாக தலைமை இல்லாமல் நடத்த  போராட்டத்திற்கு.

2015 ல் பதிதார் போராட்டத்தைத் தொடர்ந்து, ஹார்டிக் படேல் மீது உயிர் மற்றும் சொத்துக்கள் இழக்கும் அளவிற்கு வன்முறையைத் தூண்டியதற்காக தேசத்துரோக வழக்கில்  குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது ; எவ்வாறாயினும், படேலின் வக்கீல்கள் ஹார்டிக் படேல் தான் வன்முறைக்கு அழைப்பு விடுத்தார் என்பதற்கான  எந்த ஆதாரமும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்டனர்.  பொது சொத்தழிப்பு இழப்பீட்டிற்கு அவர் பொறுப்பேற்க முடியாது என்றும் கூறினர்.

கோஷி ஜேக்கப் Vs யூனியன் ஆஃப் இந்தியா என்ற மற்றொரு வழக்கில் ,கிளர்ச்சியின் காரணமாக  தொடர்ச்சியான  12 மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், 2009 உச்ச நீதிமன்ற  வழிகாட்டுதல்களை மத்திய அரசு அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கிலும் , பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவித்தலைத் தடுத்தல் சட்டம் ,1984 தற்காலிக அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் இந்த  சட்டம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது. இருப்பினும், போராட்டத்தின் அமைப்பாளர்கள் நீதிமன்றத்தின் முன் இல்லாததால் அது மனுதாரருக்கு  இழப்பீடும் வழங்குவதையும் மறுத்துவிட்டது .

Delhi Supreme Court Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment