வெங்காய விலை உயர்வு ஏன் தேர்தல் பிரச்னை ஆகிறது?

காரீப் பருவத்தில் வெங்காயம் விளைவிக்கும் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காய விலை ஏற்றம் கண்டது

டி.ஒ.பி பயிர்கள் என அழைக்கப்படும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆயகிவை விலை ஏற்ற தாழ்வின்றி கிடைப்பது தான் தனது அரசின் முன்னிரிமை என்று பிரதமர் நரேந்திர மோடி 2018 ஆம் ஆண்டில்  தெரிவித்தார். இவை மூன்றும், நாட்டு மக்களுக்கு மிகவும் அவசியமானவையாக கருதப்படுகிறது.

கடந்த, ஆகஸ்ட் மாத கடைசி வாரத்திலிருந்து, வெங்காய விலை உயர்ந்து வருகிறது. பல நகரங்களில் ஒரு கிலோ ரூ. 80 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில்  அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ .100 என்ற அளவை தொட்டது. பீகார் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது .

இந்தியாவில் வெங்காயம் எப்போது அறுவடை செய்யப்படுகிறது? சமீபத்திய விலை உயர்வுக்கு காரணம்  என்ன? இதன் அரசியல் பிரதிபலிப்பு என்ன?

இங்கே பார்க்கலாம்.

 

வெங்காயம் என்பது பருவகால பயிர் ஆகும். ரபி வெங்காயம் (டிசம்பர் , ஜனவரி மாதங்களில் பயிரிடப்பட்டு, மார்ச் மாதத்திற்குப் பிறகு அறுவடை செய்யப்படுகிறது ), காரீஃப் வெங்காயம் ( ஜூன் – ஜூலை மாதங்களில் பயிரிடப்பட்டு, அக்டோபரில் அறுவடை செய்யப்படுகிறது ) மற்றும் பிந்தைய காரீஃப் பருவ வெங்காயம் செப்டம்பர் மாதம் பயிரிடப்பட்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு அறுவடை செய்யப்படுகிறது) எனினும் குளிர் கால (ரபி) வெங்காய சாகுபடியில் தான் சிறந்த மகசூல் கிடைக்கும்.

 

 

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காரீப் பருவத்தில் வெங்காயம் விளைவிக்கும் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காய விலை ஏற்றம் கண்டது. மேலும், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற பல மாநிலங்களில் கனமழை காரணமாக வெங்காயத்தை சேமித்தி வைப்பதில் பாதிப்பு ஏற்பட்டது

 

 

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2020 செப்டம்பர் 14 அன்று வெங்காய ஏற்றுமதிகளை அரசு தடை செய்தது. உள்நாட்டு நுகர்வோர்களுக்கு வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதோடு, ராபி-2020 பருவ வெங்காய சேமிப்பை அதிகப்படுத்தவும் அரசு முடிவெடுத்தது. மேலும், வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. வெங்காய விதைகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

 

 

வெங்காயத்தை இறக்குமதி செய்வதினால் அன்றாட நிகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. எனவே, நவம்பர் மாதத்துக்குப் பிறகு சந்தைக்கு புது வெங்காயம் வரும் வரை வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது எளிதாக அமையாது.

 

தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆயகிவை விலை ஏற்ற தாழ்வின்றி கிடைப்பது தான் தனது அரசின் முன்னிரிமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். வெங்காயத்தால் நாட்டு மக்களின் உணவு உணவுப் பணவீக்க விகிதம் அதிகரிக்கும். உதரணாமாக, 1998 ம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெங்காய விலை அதிகரிப்பு காரணமாக பாஜக காங்கிரஸிடம் படுதோல்வியை கண்டது. தமிழகத்திலும், 1967 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் காங்கிரஸ் தோல்வி கண்டதற்கு முக்கிய காராணம் உணவு பற்றாக்குறை மற்றும் வெங்காயம் விலை உயர்வாகும்.

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Prices and availability of onion hike in onion prices

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com