சிறைகள் கூடக்கூட கைதிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது…என்ன காரணம்?

Prison - prisoners ratio : 2016ம் ஆண்டு முதல், சிறைகளின் கொள்ளளவு அதிகரிக்க அதிகரிக்க அதில் அடைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் (National Crime Records Bureau (NCRB)) வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By: Updated: January 13, 2020, 11:47:27 PM

2016ம் ஆண்டு முதல், சிறைகளின் கொள்ளளவு அதிகரிக்க அதிகரிக்க அதில் அடைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் (National Crime Records Bureau (NCRB)) வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..

தேசிய குற்ற ஆவண காப்பகம், சிறைகள், அதன் கொள்ளளவு, அதில் அடைக்கப்படும் கைதிகள், அவர்களின் குற்றத்தன்மைகள் உள்ளிட்ட விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…
2016ம் ஆண்டில் 3,80,876 என்ற அளவில் இருந்த நாட்டில் செயல்பட்டு வந்த சிறைகள், 2018ம் ஆண்டில் 3,96,223 சிறைகளாக அதிகரித்தது. இது சதவீதத்தின் அடிப்படையில் 4.03 சதவீதம் அதிகம் ஆகும். இதே காலகட்டத்தில் இந்த சிறைகளில் அடைக்கப்பட்ட கைதிகளின் அடிப்படையில் 2016ம் ஆண்டில் 4,33,003 கைதிகள் இருந்த நிலையில், 2018ம் ஆண்டில் கைதிகளின் எண்ணிக்கை 4,66,084 ஆக அதிகரித்துள்ளது. இது சதவீதத்தின் அடிப்படையில், 7.64 சதவீதம் அதிகம் ஆகும். இதன்மூலம் சிறைகளில் அடைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை இந்த காலகட்டத்தில் 113.7 சதவீதம் என்ற அளவில் இருந்து 117.6 சதவீதம் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.

சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் விகிதாச்சாரம் அடிப்படையில், உத்தரபிரதேசம் ( 176.5 சதவீதம்) முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து சிக்கிம் ( 157.3 சதவீதம்), டில்லி (154.3 சதவீதம்) உள்ளது.
சிறைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், 2016ம் ஆண்டை காட்டிலும் (1412) 2018ம் ஆண்டில் (1339) அதில் அடைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இது சதவீதத்தின் அடிப்படையில் 5 சதவீதம் குறைவு ஆகும். 2018ம் ஆண்டின் நிலவரப்படி, 628 கிளைச்சிறைகளள், 404 மாவட்ட சிறைகள், 144 மத்திய சிறைகள், 77 திறந்தவெளி சிறைகள், 41 சிறப்பு சிறைகள், 24 மகளிர் சிறைகள், 19 சிறுவர் சீர்திருத்த பள்ளிகள் உள்ளன.

 

சிறைவாசத்தில் 2000 குழந்தைகள்

2018ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, குற்றம் சுமத்தப்பட்ட பெண்களினால், கிட்டத்தட்ட 2 ஆயிரம் குழந்தைகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்த 1999 குழந்தைகளில் நான்கில் ஒரு பங்கு குழந்தைகள் உத்தரபிரதேச மாநிலத்தில் (509) உள்ளனர். பீகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 1201 குழந்தைகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இது சதவீதத்தின் அடிப்படையில் 60 சதவீதம் ஆகும்.
இந்தியாவில் உள்ள 19242 பெண் குற்றவாளிகளில் 1732 பெண் குற்றவாளிகள் தங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இவர்களில் 3423 பேர் 24 மகளிர் சிறைகளிலும், 15999 பெண் குற்றவாளிகள் மற்ற சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

எத்தனை வகை…

2018ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, 4,66,084 கைதிகளில், 1,39,488 கைதிகள் தண்டனை உறுதிசெய்யப்பட்ட குற்றவாளிகள். 3,23,537 ( 69 சதவீதம்) கைதிகள் விசாரணைக்கைதிகளாக உள்ளன.
2016ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டில் தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 2.8 சதவீதம் அதிகரித்து 1,35,683 என்ற அளவில் உள்ளது. இவர்களில் 28,660 குற்றவாளிகள் உ.பி. மாநிலத்தில் (20.5 சதவீதம்) உள்ளனர். அதனை தொடர்ந்து மத்திய பிரதேசம் (18626) மற்றும் மகாராஷ்டிரா (8908) உள்ளனர்.
2016ம் ஆண்டில் 2,93,058 என்ற அளவில் இருந்த விசாரணைக்கைதிகளின் எண்ணிக்கை, 2018ம் ஆண்டில் 3,23,537 ஆக அதிகரிதக்துள்ளது. உ.பி மாநிலத்தில் 75206 பேரும், பீகாரிஙல் 31488 பேரும், மகாராஷ்டிராவில் 26898 பேரும் விசாரணைக்கைதிகளாக உள்ளனர்.

 

என்ன மாதிரியான குற்றங்கள்

தண்டனை உறுதி செய்யப்பட்ட 1,22,441 குற்றவாளிகளில், 1,04,017 குற்றவாளிகள் ( 85 சதவீதத்தினர், மனித உடல்கள் மீதான தாக்குதலினால் குற்றம் சுமத்தப்பட்டவர்களாக உள்ளனர். 12939 குற்றவாளிகள், சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் தண்டனை பெற்றவர்களாக உள்ளனர்.
இந்த குற்றவாளிகளில் 69165 ( 66 சதவீதம்) கொலைக்குற்றத்திற்காகவும், 12076 (12 சதவீதத்தினர் கற்பழிப்பு குற்றத்திற்காகவும், 8341 (8 சதவீதத்தினர்) கொலை முயற்சிக்காகவும் தண்டனை பெற்றுள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Prison space grows but prisoner count grows faster

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X