scorecardresearch

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வது எப்படி? முழு விவரம்

பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்த நிலையில், அதன் சட்ட நடைமுறை என்ன என்பதை இச்செய்தி தொகுப்பில் காணலாம்

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வது எப்படி? முழு விவரம்

கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த மூன்று சட்டங்களும் சட்டப்படி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

சட்டங்கள் ரத்து செய்யப்படுவது என்றால் என்ன?

சட்டம் நடைமுறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என நாடாளுமன்றம் கருதும் போது, சட்டம் ரத்து செய்யப்படுகிறது. சில சட்டங்கள் Sunset Clause முறை கொண்டிருக்கும். குறிப்பிட்ட தேதி வந்தவுடன், அச்சட்டம் நடைமுறையிலிருந்து நீக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 1987இல் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பயங்கரவாத மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் Sunset Clause முறையை கொண்டுள்ளது. இச்சட்டம் 1995இல் ரத்து செய்யும் வகையில் இயற்றப்பட்டது.

அதே சமயம், Sunset Clause முறை இல்லாத சட்டங்களை, நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தை இயற்றி ரத்து செய்யலாம்.

சட்டத்தை அரசாங்கம் எப்படி ரத்து செய்ய முடியும்?

அரசியலமைப்பின் 245ஆவது சட்டப்பிரிவின்படி, இந்தியா முழுவதும் சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றம் கொண்டுள்ளது. அதே போல், மாநில சட்டப்பேரவைகளுக்கு அந்தந்த மாநிலத்திற்கான சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் உள்ளது. அதே வகையில்,சட்டங்களை ரத்து செய்யும் அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கு உள்ளது.

ஒரு சட்டம் முழுவதுமாகவோ, பகுதியாகவோ அல்லது மற்ற சட்டங்களுக்கு முரணாக இருக்கும் பட்சத்தில், அதனை ரத்து செய்துவிடலாம்.

சட்டத்தை ரத்து செய்வதற்கான செயல்முறை என்ன?

சட்டங்களை இரண்டு வழிகளில் ரத்து செய்யப்படலாம். ஒன்று அவசர சட்டம் அல்லது புதிய சட்டம் ஆகும்.

அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் பட்சத்தில், ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் அதற்கு பதிலாக புதிய சட்டம் இயற்ற வேண்டும். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் அவசர சட்டத்திற்காக இயற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு அனுமதி கிடைக்காவிட்டால், அவசர சட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும்.

அதே சமயம், குறிப்பிட்ட சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் இயற்ற முடியும். இந்த ரத்து செய்யும் சட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும். அதன்பின், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களையும், ஒரே சட்டத்தின் மூலம் ரத்து செய்துவிடலாம். அச்சமயத்தில், புதிதாக இயற்றப்படும் சட்டத்தை ரத்து செய்தல் மற்றும் திருத்தம் என்ற தலைப்பில் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

நரேந்திர மோடி அரசாங்கம் 2014 இல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வழக்கற்றுப் போன 1,428 சட்டங்களை ரத்து செய்வதற்காக ஆறு ரத்து மற்றும் திருத்தச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Process for repealing a 3 famer law at parliament