பல்வகைப்படுத்தல் உந்துதலின் ஒரு பெரிய வெற்றி என்னவென்றால், நெல் விளைவிக்கப்பட்ட பகுதியின் கீழ் இருந்து எடுக்கப்பட்ட ஐந்து லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் குறைந்த நீர் நுகர்வு கொண்ட பயிர்கள் விதைக்கப்படுவதாக மாநில விவசாயத் துறை தெரிவித்துள்ளது. ஆனாலும், நெல் பயிரிடப்படும் பகுதி உண்மையில் இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுவதற்கான புள்ளிவிவரங்களை வருவாய் துறை மேற்கோளிட்டுள்ளது. இந்த மாறுபாடு ஏன்?
வேளாண்மைத் துறையில், வேளாண் இயக்குநர் அலுவலகம் ஒவ்வொரு மாவட்ட தலைமையகத்திலும் உள்ள அதன் முதன்மை வேளாண் அலுவலர்களின் அலுவலகங்களிலிருந்து காரீஃப் மற்றும் ராபி பயிர்களின் கீழ் உள்ள தரவுகளை சேகரிக்கிறது. வேளாண் மேம்பாட்டு அலுவலர்களை கள அலுவலர்களாக கொண்டு, முதன்மை வேளாண் அலுவலர்கள் தரவுகளை சேகரிக்கின்றனர். இந்த தரவுகள் ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கி இருக்கும்.
அதுவே, வருவாய் துறையில், ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும் பயிர் ஆய்வு (கிர்தாவரி) மூலம் தரவு சேகரிக்கப்படுகிறது.
வருவாய் அதிகாரிகள் (பட்வாரிகள்) பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 முதல் மார்ச் 31 வரை ராபி பயிர்களுக்கும் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 31 வரை காரீப் பயிர்களுக்கும் பயிர் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். அதாவது தரவுகளை சேகரிக்கின்றனர்.
வருவாய் அதிகாரிகளால் சேகரிப்பட்ட தரவுகளில் 50 சதவீதத்தை ஒரு கானுங்கோ (பட்வாரிஸுக்கு சற்று மேலே உள்ள வருவாய் அதிகாரி) சரிபார்க்க வேண்டும், அதே நேரத்தில் ஒரு வட்ட வருவாய் அதிகாரி மொத்தத்தில் 25 சதவீதத்தை ஆய்வு செய்ய வேண்டும். கானுங்கோஸ் மற்றும் வட்ட வருவாய் அதிகாரிகளின் ஆய்வு காலம் ராபிக்கு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 10 வரை மற்றும் காரீப் பயிர்களுக்கு நவம்பர் 1 முதல் நவம்பர் 10 வரை ஆகும்.
இந்தத் தரவு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வருவாய் துறையால் தொகுக்கப்பட்டு பஞ்சாப் நிலப் பதிவு அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது, பின்னர் அவர்கள் அதை பஞ்சாப் வேளாண் துறைக்கு அனுப்புகிறார்கள். அவர்கள் அதனை மத்திய அரசின் வேளாண்மைத்துறை அமைச்சகத்திற்கு அனுப்புகிறார்கள். ஆனால் இறுதித் தரவு பஞ்சாப் நிலப் பதிவுத் துறையால் சேகரிக்கப்பட்ட தரவுகளாகக் கருதப்படுகிறது.
கொரோனா பரவல் காரணத்தால், நில பதிவு அலுவலகம் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சரியான நேரத்தில் விவரங்களைப் பெற முடியவில்லை என்றும், இது 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான தரவை தாமதத்துடன் தொகுத்ததாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் வேளாண்மைத் துறையின் தரவு மக்காச்சோளம் மற்றும் பருத்தி விஷயத்தில் அதிக பணவீக்கத்துடன் இருப்பதாகவும் நெல் பகுதியின் கீழ் ஒரு “தவறான குறைப்பை” காட்டுகிறதாகவும் எல்லா இடங்களிலும் மேற்கோள் காட்டப்படுகிறது.
பஞ்சாப் வேளாண் துறையிலும், வருவாய் துறையிலும் நிலவும் கள அலுவலர்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக, இரண்டு துறைகளாலும் துல்லியமான தகவல்களை சேகரிக்க முடியவில்லை.
“பஞ்சாப் நிலப் பதிவுகளின் புள்ளிவிவரங்கள் பல்வேறு பயிர்களின் கீழ் நிலத்திற்கான இறுதி புள்ளிவிவரங்களாகக் கருதப்பட்டாலும், இந்த அலுவலகம் 22 மாவட்டங்களிலிருந்து கிடைத்த அறிக்கைகளை மட்டுமே தொகுக்கிறது. மேலும் மாவட்ட அளவில் பட்வாரிகள், கனுங்கோஸ் போன்றவற்றின் பற்றாக்குறை உள்ளது. நேரடியான ஆய்வுகளுக்குப் பிறகு புள்ளிவிவரங்கள் சரியாக வருகிறதா இல்லையா என்பதை கூறுவது கடினம், ”என்று பஞ்சாப் வருவாய் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் மாநிலத்தில் ஏராளமான கிராமங்களுக்கு பல துறைகளிலிருந்தும் கள அதிகாரிகளின் எந்தவொரு வருகையும் பல மாதங்களாக காணவில்லை என்றும் கூறினார்.
ஒவ்வொரு பயிருக்கும் இலக்கு, வேளாண் துறை நிர்ணயிப்பதால் பஞ்சாப் இயக்குநர் நில பதிவு அலுவலர் அறிக்கை இறுதி அறிக்கையாக கருதப்படுகிறது என்றும், நேரடி ஆய்வு வருவாய்த் துறையால் செய்யப்படுகிறது என்றும் பஞ்சாப் வேளாண் இயக்குநர் டாக்டர் எஸ் எஸ் சித்து தெரிவித்தார். வேளாண் துறையின் உயர்த்தப்பட்ட பல்வகைப்படுத்தல் புள்ளிவிவரங்கள் குறித்து கேட்டபோது, அவர் இப்போது காரீப் பயிர்களுக்கான தற்போதைய இலக்குகளைப் பற்றி மட்டுமே பேச முடியும் என்று கூறினார்.
பஞ்சாப் வேளாண்மையின் மற்றொரு மூத்த அதிகாரி இரு அரசுத் துறைகளின் தரவுகளிலும் உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை ஒப்புக் கொண்டார், மேலும் இது பஞ்சாப் அரசாங்கத்தை ஒரு சங்கடமான சூழ்நிலையில் தள்ளியுள்ளது என்றும் கூறினார்.
“இப்போது யாரை குற்றம் சொல்வது? மேலும், யாரை நம்பவது? ” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
வருவாய்த் துறையின் புள்ளிவிவரங்கள் முதன்முதலில் வந்தபோது, 2019 ஆம் ஆண்டில் தரவுகளில் இந்த வேறுபாடுகள் ஏன் தீர்க்கப்படவில்லை என்று வட்டாரங்கள் கேள்வி எழுப்பின.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil