சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான் எல்லையை கத்தார் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், சர்வதேச நீதிமன்றம், இந்த தடையுத்தரவை நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றம் நீக்கியுள்ள இந்த தடையை எதிர்த்து பஹ்ரைன், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் இன்டர்நேசனல் சிவில் ஏவியேசன் அத்தாரிட்டியிடம் (ICAO) முறையிட்டது. இன்டர்நேசனல் சிவில் ஏவியேசன் அத்தாரிட்டி, ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு பிரிவு ஆகும்.
கத்தார் மீதான தடை விலக்கப்பட்டுள்ள நிகழ்வு, கத்தார் நாடு மற்றும் அதன் விமான சேவை நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
Since the start of the illegal blockade in June 2017, #Qatar has maintained that the blockading countries have acted illegally and in violation of international law. Today marks another step forward in Qatar's case against the blockading countries at the @icao. pic.twitter.com/DJj8QcK9OC
— مكتب الاتصال الحكومي (@GCOQatar) July 14, 2020
இதுதொடர்பாக, கத்தார் அரசின் தொலைதொடர்புத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, மற்ற நாடுகள் எங்கள் நாட்டின் மீது சட்டவிரோதமான தடையை, 2017ம் ஆண்டு ஜூன் முதல் அமல்படுத்தியிருந்தது. எங்கள் நாட்டின் மீது தடைவிதித்து அந்த நாடுகள் சர்வதேச சட்டவிதிகளை தொடர்ந்து மீறிவந்தன. இதுதொடர்பாக, சர்வதேச நீதிமன்றத்தில் கத்தார் தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கத்தார் நாடு ஈரான் உடன் இணைந்து அந்த பகுதியில் தீவிரவாதத்தை தொடர்ந்து தூண்டி வருவதாக தெரிவித்த சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், எகிப்து உள்ளிட்ட நாடுகள், 2017ம் ஆண்டு ஜூன் மாதம், கத்தார் நாட்டுடனான ஜனநாயக மற்றும் பொருளாதார உறவுகளுக்கு தடைவிதித்ததுடன், அந்நாட்டுடனான போக்குவரத்து மற்றும் வான் எல்லைக்கு அதிரடி தடைவிதித்தது
இந்த நாடுகளின் குற்றச்சாட்டை அடியோடு மறுத்த கத்தார், தாங்கள் இப்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்வு, தங்கள் நாட்டின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் என் கத்தார் தெரிவித்துள்ளது.
கத்தார் மீதான தடையை தோஹா நிகழ்வு மூலம் அமல்படுத்திய அந்த 4 நாடுகள், இந்த தடையை விலக்கிக்கொள்ள 13 கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் முக்கிய கோரிக்கைகளாவன, அல் ஜஸீரா உள்ளிட்ட செய்தி நிறுவனங்களை கத்தார் மூடவேண்டும். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடனான உறவை துண்டித்துக்கொள்ள வேண்டும். ஷியா முஸ்லீம்கள் அதிகம் வாழும் நாடான ஈரானுடனான உறவை குறைத்துக்கொள்ள வேண்டும் மற்றும் தங்கள் நாட்டின் எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள துருக்கி படையினரை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்டவைகள் இடம்பெற்றிருந்தன.
சவுதி அரேபியா, கத்தார் நாட்டுடனான எல்லையை மூடியது மட்டுமல்லாதுல அந்நாட்டு கப்பல்கள் தங்களது துறைமுகங்களுக்கு வரவும் தடைவிதித்தது. தங்கள் வான் எல்லையில் கத்தார் விமானங்கள் பறக்க தடைவிதித்தது மட்டுமல்லாது, சவுதியில் உள்ள கத்தார் நாட்டவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக, 2017ம் ஆண்டு வெளியேற்றப்பட்டனர்.
1944ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிவில் ஏவியேசன் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி, கத்தார், இன்டர்நேசனல் சிவில் ஏவியேசன் அத்தாரிட்டியிடம் முறையிட்டது.
இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க முடியும் என்று சவுதி அரேபியா தெரிவித்ததை தொடர்ந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நான்கு நாடுகள் இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றது.
கத்தாருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதையடுத்து, இன்டர்நேசனல் சிவில் ஏவியேசன் அத்தாரிட்டி, அடுத்தாண்டு முதல் விமானம் பறக்க தடை விலக்கிக்கொள்ளப்பட உள்ளதாக ஐக்கியநாடுகள் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.