Advertisment

இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்த கத்தார் நீதிமன்றம்- என்ன நடந்தது?

இவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக கத்தார் சிறையில் உள்ளனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் பொதுவில் இல்லை. என்ன நடந்தது, இந்த வழக்கில் இந்தியா எடுத்த நிலைப்பாடு இங்கே

author-image
WebDesk
New Update
Qatar Indian Navy

2015 ஆம் ஆண்டு புது தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்திப்பதற்கு முன் பிரதமர் மோடியும் கத்தார் அரசின் எமிர்- ஷேக் தமிம் பின் ஹமத் அல்தானியும் கைகுலுக்கிக் கொண்டனர். கத்தாரும் இந்தியாவும் வரலாற்று ரீதியாக நெருங்கிய நண்பர்கள். (Express Photo by Prem Nath Pandey)

2022 ஆம் ஆண்டு தோஹாவில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

Advertisment

கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுகுணகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால் மற்றும் மாலுமி ராகேஷ்- இந்திய கடற்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இந்த 8 அதிகாரிகள் கத்தாரில் தஹ்ராகுளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டென்சி சர்வீசஸ்என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்த நிறுவனம் கத்தார் ராணுவத்துக்கு சேவைகளை வழங்கி வந்தது.

மேலும், இந்த நிறுவனம் கத்தார் கடற்படை தொடர்புடைய நீர்மூழ்கி கப்பல் திட்டம் ஒன்றில் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பலை கத்தார் இத்தாலிய நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வந்தது.

ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை கத்தார் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றம் உட்பட வழக்கின் பல விவரங்கள் இதுவரை பகிரங்கமாகத் தெரியவில்லை.

ந்த வழக்கின் சுருக்கமான வரலாறு மற்றும் இந்திய அரசாங்கத்தின் பதில்

2022                                                      

ஆகஸ்ட் 30: அறிவிக்கப்படாத குற்றச்சாட்டின் பேரில் எட்டு பேரும், மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அக்டோபர் 1: தோஹாவில் உள்ள இந்தியத் தூதரும், துணைத் தூதரும் எட்டு கடற்படை வீரர்களைச் சந்தித்தனர்.

அக்டோபர் 3: முதல் தூதரக அணுகல் வழங்கப்பட்டது.

தஹ்ரா குளோபல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காமிஸ் அல்-அஜ்மியும் தனது அதிகாரிகளை வெளியே எடுக்க வந்தார், ஆனால் கைது செய்யப்பட்டார். இரண்டு மாதங்கள் தனிமைச் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

2023

மார்ச் 1: படை வீரர்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட பல ஜாமீன் மனுக்கள் கடைசியாக நிராகரிக்கப்பட்டது.

மார்ச் 25: எட்டு பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

மார்ச் 29: கத்தார் சட்டத்தின் கீழ் வழக்கு விசாரணை தொடங்கியது.

மே 30: தஹ்ரா குளோபல், தோஹாவில் அதன் செயல்பாடுகளை மூடியது. அனைத்து முன்னாள் ஊழியர்களும் (முதன்மையாக இந்தியர்கள்) பின்னர் தாயகம் திரும்பினர்.

ஆகஸ்ட் 4: கைது செய்யப்பட்டவர்கள் தனிமைச் சிறையில் இருந்து மாற்றப்பட்டு, ஒவ்வொரு அறைக்கும் இருவர் வீதம் தங்கள் சக ஊழியர்களுடன் சிறை வார்டில் வைக்கப்பட்டபோது அவர்களுக்குச் சற்று நிம்மதி கிடைத்தது.

அக்டோபர் 26: நீதிமன்றம் 8 பேருக்கும் மரண தண்டனை விதித்தது.

இந்தியாவின் நிலைப்பாடு

அரசாங்க வட்டாரங்களின்படி, வெளியுறவு அமைச்சகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் கைது செய்யப்பட்ட மாலுமிகளுக்கு சாத்தியமான எல்லா ஆதரவையும் வழங்கியுள்ளது. இந்த விவகாரம் பல்வேறு ராஜதந்திர மற்றும் அரசியல் மட்டங்களில் கையில் எடுக்கப்பட்டது.

இந்தியாவில் விசாரணையில் உள்ள ஒரு வெளிநாட்டவரை, இந்திய அரசாங்கம் விடுவிக்க முடியாதது போல், மற்ற நாடுகளும் தங்கள் சொந்த நீதித்துறை செயல்முறைகளைக் கொண்டுள்ளன, என்று ஆதாரங்கள் சுட்டிக்காட்டின.

என்ரிகா லெக்ஸி-இத்தாலிய கடற்படையினர் வழக்கின் போது (Enrica Lexie-Italian Marines case) எடுத்த நிலைப்பாட்டை இந்த வழக்கிலும் இந்தியா கடைப்பிடிக்கிறது.

ந்த வழக்கில் இரண்டு இந்திய மீனவர்கள் கேரள கடற்கரையில், இத்தாலியின் கொடியுடன் வந்த MB Enrica Lexie என்ற எண்ணெய் கப்பலில் இருந்த இரண்டு இத்தாலிய கடற்படையினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த வழக்கில், இந்திய அரசாங்கம் சர்வதேச சட்டங்கள், கடல்சார் மண்டலங்கள் சட்டம், 1976, இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் UNCLOS 1982 இன் விதிகளின்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்தது.

இந்திய அரசாங்கத்தின் முயற்சிகள் தவிர, முன்னாள் கடற்படை வீரர்களின் குடும்பத்தினரும் ரமலான் மற்றும் ஈத் காலங்களில் மன்னிப்பு வழங்குவதாக அறியப்படும் கத்தார் மீரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர்.

Read in English: Qatar court sentences 8 Indian Navy veterans to death: A timeline of the case

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Qatar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment