Advertisment

பிரதமர் மோடி கல்வித் தகுதி விவகாரம்: கெஜ்ரிவாலுக்கு அபராதம்.. குஜராத் நீதிமன்றத்திற்கு வழக்கு எப்படி மாறியது?

பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்த விவரங்கள் கேட்டு மனு அளிக்கப்பட்ட நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Prime Minister Narendra Modi

Prime Minister Narendra Modi

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி சான்றிதழ் நகல்களை பிரதமர் அலுவலகம் வழங்கத் தேவையில்லை என்று உத்தரவிட்ட குஜராத் உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மனு தாக்கல் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் பட்டப் படிப்பு சான்றிதழ் நகல்களை வழங்க கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த தலைமை தகவல் ஆணையம் (சிஐசி), பிரதமர் மோடியின் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு சான்றிதழ் விவரங்களை வழங்குமாறு, பிரதமர் அலுவலகத்தின் தகவல் தொடர்பு அதிகாரி, குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகங்களின் தகவல் தொடர்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு

ஏப்ரல் 28, 2016 அன்று, கெஜ்ரிவால் தன்னைப் பற்றிய தேவையான தகவல்களை சிஐசிக்கு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அதோடு பிரதமர் மோடியின் கல்வித் தகுதி விவரங்களையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து கெஜ்ரிவாலின் கோரிக்கை இந்திய குடிமகன் என்ற முறையில் ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் வரும் எனக் கூறி தலைமை தகவல் ஆணையர் எம். ஸ்ரீதர் ஆச்சார்யுலு பிரதமர் மோடியின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களின் சான்றிதழ் நகல் தொடர்பாக பிரதமர் அலுவலகம், குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில், “திரு. நரேந்திர தாமோதர் மோடி” என்ற பெயரில் 1978 (DU-ல் பட்டப்படிப்பு) மற்றும் 1983 (GU-ல் முதுகலைப்பட்டம்) பெற்றது தொடர்பான தகவல்களை சிறந்த முறையில் தேடி அனுப்புமாறு டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்தநிலையில் சிஐசியின் உத்தரவுக்கு எதிராக குஜராத் பல்கலைக்கழகம் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

பல்கலைக்கழகத்தின் வாதம்

சிஜசியின் உத்தரவு "அதிகாரம் இல்லாதது", "தவறானது" மற்றும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று பல்கலைக் கழகம் வாதிட்டது. இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிடுகையில், ஆர்வத்தை பொது நலனுடன் ஒப்பிட முடியாது என்று வாதிட்டார். மேலும் இது மதிப்பீடுகளை தீர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் ஆர்.டி.ஐ சட்டத்திற்கு பெரும் அவதூறு ஏற்படும் என்றும் வலியுறுத்தினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்தார். இதையடுத்து நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

உத்தரவு

குஜராத் பல்கலைக்கழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரேன் வைஷ்ணவ், தலைமை தகவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்தார். மேலும், பிரதமர் மோடியின் கல்விச் சான்றிதழ் விவரங்களை பிரதமர் அலுவலகம், குஜராத் மற்றும் டெல்லி பல்கலைக்கழகங்கள் வழங்கத் தேவையில்லை என்றும் உத்தரவிட்டார்.

மேலும், பிரதமர் மோடியின் கல்விச் சான்றிதழ் விவரங்கள் கோரி மனு தாக்கல் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஹன்ஸ் ராஜ் ஜெயின் வழக்கு

2014-ம் ஆண்டில், மற்றொரு ஆர்.டி.ஐ ஆர்வலர் ஹன்ஸ் ராஜ் ஜெயின் பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழ் குறித்து மனுத் தாக்கல் செய்தார்.
அவர் அளித்த மனுவில், 1978-ம் ஆண்டில் N (நரேந்திரா) மற்றும் M (மோடி) என்ற எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களில் பட்டம் பெற்ற மாணவர்களின் விவரங்களைக் கோரினார். குறிப்பாக, 1978-ம் ஆண்டில் "நரேந்திர மோடி" என்ற பெயரில் எத்தனை மாணவர்கள் டெல்லி பல்கலைக் கழகத்தில் தேர்ச்சி பெற்றனர் என்ற விவரத்தை வெளியிடுமாறும் ஜெயின் கேட்டுக் கொண்டார்.

டெல்லி பல்கலை-யின் தகவல் தொடர்பு அதிகாரி இந்த தகவல்களை வழங்க மறுத்துவிட்டார். தொடர்ந்து, ஜெயின் கோரும் தகவல்கள் மிகவும் பொதுவானது. பதிவு எண் இல்லாமல் இத்தகைய தகவல்களை தேடுவது மிகவும் கடினம் என்றும் விளக்கம் அளித்தார்.

ஜெயின் சிஐசி-யில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அங்கும் தகவல் ஏதும் கிடைக்காததால் வழக்கு 6 மாதங்களுக்குப் பின் முடித்து வைக்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pm Modi Narendra Modi Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment