Advertisment

அதிவேக கொரோனா பரிசோதனை: ஐஐடி காரக்பூர் கண்டுபிடிப்பு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

மரபணு பகுப்பாய்வை கண்டறியும் அலகு மற்றும் ஸ்மார்ட்போன் செயலி ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த கருவி.

author-image
WebDesk
New Update
Quick Covid-19 test from IIT Kharagpur: How it works

Anuradha Mascarenhas

Advertisment

Quick Covid-19 test from IIT Kharagpur: How it works, why it matters :  கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்யும் புதிய சோதனை ஒன்றை வடிவமைத்துள்ளது ஐ.ஐ.டி. காரக்பூர். உயர்தர மூலக்கூறு ஆய்வில் ஒரு மாற்றத்தை இந்த கருவி கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்த சோதனை முறையின் செயல்திறனை உறுதிப்படுத்தியுள்ளது என்று ஐ.ஐ.ஐ.கே.ஜி.பி. அறிவித்துள்ளது.

இது எப்படி பணியாற்றுகிறது?

இதில் வெப்பத்தை கட்டுப்படுத்தும் முன்னிரல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது மேலும் மரபணு பகுப்பாய்வை கண்டறியும் அலகு மற்றும் ஸ்மார்ட்போன் செயலி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.  SARS-CoV-2 இருப்பதை உறுதிப்படுத்த மூன்று மாஸ்டர் கலவைகள் வெவ்வேறு மரபணுக்களின் குறிப்பான்களாக செயல்படுகின்றன என்று ஐ.ஐ.டி கரக்பூரின் நிதியுதவி ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை ஆலோசனை டீன் பேராசிரியர் சுமன் சக்ரவர்த்தி கூறினார். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் இந்த கலவைகளுடன் வினைபுரிகின்றன. இந்த எதிர்வினை தயாரிப்புகளில் காகித கீற்றுகள் நனைக்கும்போது, வண்ண கோடுகள் வைரஸின் இருப்பைக் குறிக்கின்றன. ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களின்படி தொழில்நுட்பம் கடுமையான சோதனை நெறிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று ஐ.ஐ.டி-கேஜிபி ஸ்கூல் ஆஃப் பயோசயின்ஸ் உதவி பேராசிரியர் டாக்டர் அரிந்தம் மொண்டல் தெரிவித்தார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

இது ஏன் சிறப்பானது? ஆர்.டி. - பி.சி.ஆர் உள்ளிட்ட தற்போதைய சோதனைகள் துல்லியமான முடிவை வழங்குகிறது. ஆனால் அதற்கு அதிக தொழில்நுட்பங்கள் நிறைந்த ஆய்வக உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது. ஆண்டிஜென் சோதனைகள் விரைவில் முடிவுகளை தருகிறது. ஆனால் துல்லியத் தன்மை போதுமானதாக இல்லை.

ஐ.ஐ.டி. கரக்பூர் இயக்குநர் வி.கே. திவாரி கூறுகையில், இந்த கோவிராப் மூலம் சோதனைகள் ஒரு மணி நேரத்தில் நிறைவேறிவிடும். இந்த கருவி மிகவும் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டு, எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வக சூழலுக்கு வெளியே இருக்கும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி முடிவுகளை கண்டறிய இயலும். இது உயர் தர ஆர்.டி.பி.சி.ஆர் மெஷின்களுக்கு மாற்றாக உள்ளது. திறந்த வெளியில் கூட இந்த சோதனைகளை மேற்கொள்ள இயலும். ஒரே யூனிட்டை பயன்படுத்தி நிறைய நபர்களுக்கு, பேப்பர் காட்ரேஜை மட்டும் மாற்றி சோதனைகளை செய்து கொள்ள முடியும்.

காப்புரிமை பெற்ற இந்த கருவி மிகவும் பொதுவானது. இது கொரோனா பரிசோதனைக்கு மட்டுமின்றி, காய்ச்சல், மலேரியா, டெங்கு, ஜப்பான் என்சிபாலிடிஸ், டி.பி. போன்ற நோய்களையும் கண்டறிய உதவும். இது அனைத்தும் ஐசோ தெர்மல் நியூக்ளிக் ஆசிட் அடிப்படையிலான ஆய்வுகள்.

COVIRAP & FELUDA : FELUDA, சத்யஜித்ரேவின் கற்பனை கதையில் வரும் துப்பறிவாளர் பெயர் இந்த சோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் விரிவாக்கம் FNCAS9 Editor-Limited Uniform Detection Assay, இந்த சோதனை இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஜெனோமிக்ஸ் மற்றும் இண்டெக்ராட்டிவ் பயாலஜியால் உருவாக்கப்பட்டது. இதுவும் கொரோனா தொற்றை கண்டறிகிறது. ஆனால் CRISPR-CAS தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

FELUDA சோதனைகளுக்கும் வல்லுநர்கள் தேவை குறைவாகவே உள்ளது. தற்போது இருக்கும் FELUDA ப்ரோட்டோடைப், ப்ரோசசிங்கிற்கு பி.சி.ஆர். மெஷினையே நம்பியுள்ளது. ஆனால் கோவிராப் சொந்த கண்டறியும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. அது ஐ.ஐ.டி. கே.ஜி.பியால் காப்புரிமை பெறப்பட்டுள்ளது. "இந்த சோதனைகளில் சில கூறுகள் எங்களுக்கு பிரத்யேகமானவை மற்றும் CRISPRCAS இலிருந்து வேறுபட்டவை" என்று பேராசிரியர் சக்ரவர்த்தி கூறினார்.

இன்னும் ஏன் கொரோனா சோதனைகள் முக்கியமானது?

அக்டோபர் 20ம் தேதி வரை இந்தியாவில் 9.72 கோடி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளாது. மேலும் WHO பரிந்துரைத்த ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் மக்களுக்கு 140 சோதனைகள் என்ற அளவை சந்தித்து வருகிறது. ஒரு நாளைக்கு உறுதி செய்யப்படும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வரூகிஅது. ஆனாலும் வல்லுநர்கள் ஒரு நாளைக்கு 140 / மில்லியனுக்கும் குறைவான சோதனைகள் செய்யப்படும் பகுதிகளில் சோதனைகளுக்கான அணுகலை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். கார்ப்பரேட் அல்லது ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் இணைந்து கமெர்ஷியலாக இந்த கருவியை கொண்டு வர தயார் நிலையில் இருக்கிறது ஐ.ஐ.டி. என்று கூறியுள்ளார் அந்நிறுவனத்தின் இயக்குநர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Iit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment