உங்கள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டுமா? சிறப்பு விளக்கப்படங்கள்
குழந்தைகளுக்கு கொரோனா தொற்றின் தாக்கம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. எனவே அவர்களுக்கு தடுப்பூசி எதற்கு என்று நீங்கள் விவாதம் செய்ய விரும்பினால் உங்களுக்கான அனைத்து விளக்கங்களும் உள்ளே
குழந்தைகளுக்கு கொரோனா தொற்றின் தாக்கம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. எனவே அவர்களுக்கு தடுப்பூசி எதற்கு என்று நீங்கள் விவாதம் செய்ய விரும்பினால் உங்களுக்கான அனைத்து விளக்கங்களும் உள்ளே
younger children get Covid-19 vaccine : இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இயக்கத்தில் குழந்தைகளையும் இணைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் சப்ஜெக்ட் எக்ஸ்பெர்ட் கமீட்டி, பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் தடுப்பூசியை 2 முதல் 18 வயது பிரிவினருக்கு வழங்க, அவசர கால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்க பரிந்துரை செய்துள்ளது.
Advertisment
இந்திய பொது மருத்துவ கட்டுப்பாட்டாளருக்கு எஸ்.இ.சி.(Subject Expert Committee (SEC)) வழங்கிய இந்த பரிந்துரை, குழந்தைகளுக்கான தடுப்பூசியை முறையாக வழங்க இன்னும் ஒரு படி மட்டுமே இருப்பதை உறுதி செய்துள்ளது. எஸ்.இ.சி.யின் இந்த பரிந்துரையை டி.ஜி.சி.ஐ. உடனே நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதலாக 25 கோடி நபர்கள் இந்த தடுப்பூசி இயக்கத்தின் மூலம் பயனடைய உள்ளனர் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை இந்தியா ஜைடஸ் காடில்லாவின் தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க அனுமதி அளித்துள்ளது.அமெரிக்காவில் ஃபைசரின் இரட்டை டோஸ் தடுப்பூசி 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதே தடுப்பூசியின் ஒற்றை டோஸ்டை 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு அளிக்க இங்கிலாந்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாடர்னா தடுப்பூசியை செலுத்தவும் இங்கிலாந்து கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் தடுப்பூசியை 2 முதல் 18 வயதினருக்கு செலுத்த அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Advertisment
Advertisements
இந்த பரிந்துரை செயல்பாட்டுக்கு வந்தால் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசியை வழங்கும் முதல் நாடாக இந்தியா இருக்கும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் வழங்க தயாராக இருக்கும் தடுப்பூசி நிறுவனங்கள் மற்றும் அனுமதி மற்றும் ஆராய்ச்சியில் இருக்கும் தடுப்பூசிகள்
உங்கள் குழந்தைகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமா? என்பதற்கு பதிலும் விளக்கமும் மேலே உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil