பிரெஞ்சு ஓபன்.. மகிழ்ச்சியில்லாத ரஃபேல் நடால்.. ஏன், எதற்கு?

நான்கு மாத தாமதத்திற்குப் பிறகு, பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் ஞாயிற்றுக்கிழமை கோவிட் -19 பரவலுக்கு மத்தியில் தொடங்கியது. எனினும் பிரெஞ்சு ஓபன் எனப்படும் களிமண் தரையின் நாயகன் ரபேல் நடால், “தயவுசெய்து புதிய பந்துகள் வேண்டாம்” என்று சொன்னது ஏன் என்பதை விவரிக்கும் தொகுப்புதான் இது. ரோலண்ட்…

By: September 29, 2020, 12:36:30 PM

நான்கு மாத தாமதத்திற்குப் பிறகு, பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் ஞாயிற்றுக்கிழமை கோவிட் -19 பரவலுக்கு மத்தியில் தொடங்கியது. எனினும் பிரெஞ்சு ஓபன் எனப்படும் களிமண் தரையின் நாயகன் ரபேல் நடால், “தயவுசெய்து புதிய பந்துகள் வேண்டாம்” என்று சொன்னது ஏன் என்பதை விவரிக்கும் தொகுப்புதான் இது.

ரோலண்ட் கரோஸில் நடக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் புதிதாக வில்சன் பந்து எனப்படும் புதிய வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டொமினிக் தீம் மற்றும் நோவக் ஜோகோவிச் போன்றோர் இந்த புதிய வகை பந்துகள் “கனமாகவும், மெதுவாகவும்’ இருக்கின்றன எனக் கூறியுள்ளனர். ஆனால் 12 முறை பிரெஞ்சு ஓபன் கோப்பை வென்ற நடால், இந்த பந்துகள் வேண்டாம் எனக் கூறியுள்ளார். வானிலை நிலைமைகளுடன் இணைந்து, வில்சன் பந்துகள் இந்த சாம்பியனுக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது.

பந்துகள் எவ்வாறு வேறுபடுகின்றன?

நடாலின் கூறுவது, புதிய வில்சன் பந்துகள் மெதுவாகவும், “களிமண்ணில் விளையாடுவதற்கு நல்லதல்ல”. ஆனால் யுஎஸ் ஓபன் சாம்பியனாக புதிதாக முடிசூட்டப்பட்ட டொமினிக் தீம் கால நிலைமைகளை விட பந்து “பெரிய வித்தியாசமாக” இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும், “நான் வீட்டில் பந்தை வைத்து இரண்டு நாட்கள் பயிற்சி செய்தேன். அதனால் நான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறேன், ஏனென்றால் பாபோலாட் பந்துகள் உண்மையில் எனக்கு பிடித்த பந்துகள். அவை நன்றாகவும் வேகமாகவும் இருந்தன. எனது விளையாட்டுக்கு ஏற்றவை, நடாலின் விளையாட்டுக்கும் ஏற்றது. புதிய பந்துகள் மெதுவாக இருக்கின்றன. விளையாட தொடங்கிய சிறிது நேரத்திற்குப் பிறகு அவை கொஞ்சம் பெரிதாகின்றன. அது நிச்சயமாக முடிவுகளை கொஞ்சம் மாற்றிவிடும்” எனக் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் ரோலண்ட் கரோஸ் பிரெஞ்சு ஓபனில் 2 வகை வில்சன் பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. கனமான இந்த பந்து, மெதுவாக காற்று வழியாகவும் கோர்ட்டுக்கு வெளியேயும் செல்கிறது. கரடுமுரடான பிட்சில், ஈரப்பதமான சூழ்நிலைகள் உணரப்பட்டால், இந்த பந்து வகைகள் மேலும் இழுக்கப்படும். ஒவ்வொரு முறையும் வீரர்கள் அடிக்கும் போது பந்துகள் அழுக்கை எடுக்கும், இதனால் பந்துகள் கனமாக மாறும்.

கால நிலைகள் பந்தை எவ்வாறு பாதிக்கின்றன?

ஈரப்பதமான, குளிர் கொண்ட செப்டம்பர்-அக்டோபர் வானிலை, வழக்கமான மே-ஜூன் கோடை வானிலையில் இருந்து வேறுபடுகின்றன. ஆனால், இந்த கால நிலையில் யு.எஸ் ஓபனுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு பிரெஞ்சு ஓபன் தொடங்க இருந்தது ஏற்கனவே ஒரு சவாலாக இருந்தது. புதிய பந்துகள் அதை இன்னும் மோசமாக்கியுள்ளன. பந்து அல்லது டென்னிஸ் கோர்ட் ஈரமாக இருந்தால், அது பந்து பறப்பதையும், பவுன்ஸ் ஆவதையும் பாதிக்கும். அடர்த்தியான காற்று வழியாக மட்டுமே பந்து கனமாகிவிடும்.

சனிக்கிழமை இதுதொடர்பாக பேசிய ஜோகோவிச், “பந்துகள் கனமானவை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இது அநேகமாக அக்டோபரில் இருப்பதால் தான், இந்த மாத காலநிலை மிகவும் குளிராக இருக்கிறது. களிமண்ணும் கனமாகவும் ஈரமாகவும் இருக்கிறது. ஒட்டுமொத்த நிலைமைகளும் பந்தை பாதிக்கின்றன. பொதுவாக பந்து கனமாக இருக்கிறதா அல்லது இந்த வகையான கால நிலைமைகளின் கீழ் நாங்கள் விளையாடுகிறோம் என்பதை சொல்வது மிகவும் கடினம்” எனக் கூறியுள்ளார்.

“நான் மல்லோர்காவில் பந்துகளுடன் சூடான சூழ்நிலைகளுடன் பயிற்சி செய்தேன், பந்து மிகவும் மெதுவாக இருந்தது, நான் நினைக்கிறேன் இந்தப் பந்து களிமண்ணில் விளையாடுவதற்கு ஒரு நல்ல பந்து அல்ல, இது எனது தனிப்பட்ட கருத்து. இந்த சீதோஷ்ண நிலை, இந்த விஷயங்களை மேலும் கடினமாக்குகிறது. குளிர் மற்றும் ஈரப்பதத்தின் இந்த நிலைமைகளை நாங்கள் சேர்த்தால், அது மிகவும் மாறும்” என நடால் கூறியுள்ளார்.

புதிய பந்துகள் பிளே-ஸ்டைல்களை எவ்வாறு பாதிக்கின்றன?

நடாலின் மிகப் பெரிய ஆயுதம் அவரின் டாப்ஸ்பின் ஆகும். மேலும் அவரது, விளையாட்டில் பந்துகளும் முக்கிய பங்குகள் வகித்தன. களிமண்ணின் மெதுவான டென்னிஸ் விளையாடும் மேற்பரப்பில், இலகுவான, உயிரோட்டமான பாபோலட் பந்துகள் நடாலின்ஆட்டத்தை மேலும் வீரியமாக்கின. இந்த வகை பந்துகளால், RPM (revolutions per minute) இன்னும் 5,500 வரை உயரக்கூடும். இதனால், டாப்ஸ்பின் சிறப்பாக விளையாட முடியும். ஆனால், இந்த புதிய வகை பந்துகளால், நடாலின் பேவரைட் ஷாட்டுகளான ஃபோர்ஹேண்டுகள் இந்த ஆண்டு குறைவான செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், ஜோகோவிச்சைப் போன்ற ஒரு தட்டையான ஹிட்டர் தன்னுடைய வழக்கமான ஷாட்களை ஆட, அதிக நேரம் பெற வேண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

காயம் தொடர்பான கவலைகள் என்ன?

நடால் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “அடுத்த இரண்டு ஆண்டுகளில், வீரர்களின் ஆரோக்கியத்தின் மீது ஏற்பாட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் இந்த வகை பந்து மிக கனமானது. இது முழங்கை மற்றும் தோள்களுக்கு ஆபத்தானது” எனக் கூறியுள்ளார். அவர் கூறியதை போலவே, ஈரப்பதமான ஆடுகளங்களில், ஹெவியான ஷாட்டுகள் ஆடும்போது நிச்சயமாக முழங்கை போன்ற காயங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

பந்து எப்போது, ஏன் மாற்றப்பட்டது?

இது ஒருவகையான வணிக முடிவு. கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் டன்லப் பதிலாக வில்சன் பந்துகள் மாற்றப்பட்டது. இதையடுத்து வில்சன் வகை பந்துகள் மீண்டும் இரண்டு கிராண்ட் ஸ்லாம்ஸில் (யுஎஸ் மற்றும் பிரஞ்சு ஓபன்) அதிகாரப்பூர்வ பந்தாக மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில், பிரெஞ்சு டென்னிஸ் கூட்டமைப்பு பாபோலட்டு பந்து நிறுவனத்தின் நீண்டகால தொடர்பை முடித்து, சிகாகோவை தளமாகக் கொண்ட வில்சனுடன் ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. புதிய ஒப்பந்தத்தின் கீழ், சேவைகளை வழங்க வில்சனின் ஸ்ட்ரிங்கர்களும் தயாராக இருக்கின்றன. இது மேலும் பல வகையான இணை முத்திரை தயாரிப்புகளும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக பந்துகள் மாற்றப்பட்டபோது என்ன நடந்தது?

நிறைய வீரர்கள் புகார் கூறினர். 2011 இல் பிரெஞ்சு ஓபனில் டன்லொப் பந்திலிருந்து பாபோலட்டு பந்துக்கு மாறியபோது, வீரர்கள் புதிய பந்துகள் அதிக அளவில் குதித்து வேகமாக செல்வதாக கூறினர். அந்த ஆண்டு கடைசியாக பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியை எட்டிய பெடரர், கோரஸை வழிநடத்தினார். ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா “பந்துகள் மிகவும் விசித்திரமானவை” என்று கூறினார், அதே நேரத்தில் ஜோகோவிச் “பந்துகள் மிக, மிக வேகமாக இருக்கின்றன, எனவே அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்” என்று புலம்பினார். அதேநேரம் ஏற்கனவே ஐந்து பிரெஞ்சு ஓபன் பட்டங்களை வென்ற நடால், மேலும் ஏழு பட்டங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Rafael nadal is not happy with the new official ball

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X