Advertisment

இந்தியாவில் ரஃபேல் விமானங்கள்; அடுத்தது என்ன?

ஒரு இருக்கை மற்றும் இரண்டு இருக்கைகள் கொண்ட விமானங்களை இந்தியா வாங்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
Rafale jets on the way: 7,000-km journey from France, and what next

 Krishn Kaushik

Advertisment

Rafale jets on the way: 7,000-km journey from France, and what next :2016ம் ஆண்டு இந்தியாவுக்கும் ஃபிரான்ஸுக்கும் இடையே ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இரட்டை எஞ்சின்கள் கொண்ட 36 போர் விமானங்களை ரூ. 58 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்தது இந்தியா. அதன் முதற்கட்டமாக இந்தியாவிற்கு 5 போர் விமானங்கள் வர உள்ளது. ஜூலை 27ம் தேதி ஃபிரான்ஸில் இருந்து இந்தியாவிற்கு இந்த 5 விமானங்கள் தங்களின் பயணத்தை துவங்கியது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

எத்தனை ஜெட்கள் இந்தியாவிற்கு வருகிறது?

இந்திய விமானப்படை பயணிகள் தற்போது முதற்கட்டமாக 5 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டு வருகின்றனர். மேரிக்நாக் விமானப்படை தளத்தில் இருந்து இந்த விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறது. முதல் விமானப்படை விமானம் இந்திய விமானப்படையிடம் அக்டோபர் மாதம் 2019ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஃபிரான்ஸ் அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லே பங்கேற்றனர்.

இந்திய தூதரகத்தில் 10 விமானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் முதல் 5 விமானங்கள் தற்போது இந்தியாவிற்கு வருகின்றன. மீதம் இருக்கும் 5-ம் ஃப்ரான்ஸில் பயிற்சிக்கு உட்படுத்தும்.

இந்தியாவிற்கு எப்போது வருகிறது இந்த விமானங்கள்?

இந்த விமானங்கள் அம்பலா விமானப்படையில் இன்று வந்து சேரும் . இந்த விமானங்கள் 7000 கிமீ பயணித்து இந்தியாவிற்கு வருகின்றன. ஒரே நாளில் கூட இந்த தூரத்தை கடந்து இந்தியாவிற்கு வரலாம். ஆனாலும் கூட ஐக்கிய அரபு அமீரகத்தில் தரையிறங்கி எரிபொருளை நிரப்பிக் கொண்டு மீண்டும் இந்தியாவிற்கு வருகை புரியும்.

இந்த ஐந்து விமானங்களும் ஒரே மாதிரியானவையா?

இல்லை. ஒரு இருக்கை மற்றும் இரண்டு இருக்கைகள் கொண்ட விமானங்களை இந்தியா வாங்கியுள்ளது. இரண்டு இருக்கைகளை கொண்ட விமானங்களுக்கு ஆர்.பி என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த விமான ஒப்பந்தம் நடைபெறுவதில் முக்கிய பங்காற்றிய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பாதௌரியாவின் இனிசியல்கள் இவை. ஓய்வு பெற்ற முன்னாள் விமானப்படை தளபதி பிரேந்தர் சிங்க் தனோவ் அவருடைய இனிசியல் ஒற்றை இருக்கை கொண்ட விமானங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.

மற்ற விமானங்கள் எப்போது இந்தியா வருகிறது?

விமானப்படைக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 10 விமானங்களில் 5 பயிற்சிக்காக ஃபிரான்ஸில் உள்ளது. இந்திய விமானப்படையின் விமானிகள் மற்றும் துணைப் பணியாளர்களுக்கு ரஃபேல் விமானப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த விமானப்பயிற்சி அடுத்த 9 மாதங்களுக்கு இருக்கும். 2021 இறுதிக்குள் 36 விமானங்களும் இந்தியா வந்துவிடும்.

தரையிறங்கியவுடன் என்ன நடக்கும்?

அம்பலாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில், காலநிலையை பொறுத்து இந்த விமானங்கள் தரையிறக்கப்படும் என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. இந்திய விமானப்படையில் சேர்க்கும் நிகழ்வானது ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாம் பாதியில் நடைபெறும். இந்திய விமானப்படை குழு மற்றும் தரைத்தள படையினர் இந்த விமானத்தை இயக்கும் விரிவான பயிற்சியை பெற்றுள்ளனர். இந்த விமானத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களை பயன்படுத்தவும் அவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இந்த விமானங்கள் வருகைக்கு பின்னர் விரைவாக விமானத்தை இயக்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியில் இணையும் படைப்பிரிவினர் யார்?

இந்திய விமானப்படையில் இருக்கும் கோல்டர் ஏரோஸ் என்ற விமானப்படையினர் அம்பலாவில் பயிற்சியில் இணைவார்கள். 1951ம் ஆண்டு கோல்டர் ஏரோஸ் உருவாக்கப்பட்டது. வரலாற்றில் குறிப்பாக கார்கில் போரில் இவர்களின் பங்கு மிகப்பெரியது. மிக்21 போர் விமானங்கள், விமானப்படையில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, இந்த விமானப்படை பிரிவு 2016ம் ஆண்டு கலைக்கப்பட்டது. ரஃபேல் போர் விமானங்களுக்காக மீண்டும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

 

Rafale Deal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment