கிரிமினல் அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றம் திரும்புவதற்கு மக்களவைச் செயலகம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.
இதன்மூலம் அவரின் வயநாடு எம்.பி. அந்தஸ்து முறைப்படி மீட்டெடுக்கப்பட்டது.
ராகுல் காந்திக்கு மீட்டெடுக்கப்படும் சலுகைகள் என்ன?
எம்.பி.யாக இருக்கும் ராகுல், தனது பதவிக் காலத்தில் மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் பெற தகுதியானவர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் போது, ஒரு எம்.பி.க்கு ஒவ்வொரு நாளுக்கும் கூடுதலாக 2,000 ரூபாய் கிடைக்கும்.
எம்.பி.க்களும் பயணப்படிக்கு (travel allowance) தகுதியானவர்கள், இதில் ரயில்வேயின் கட்டண போக்குவரத்து அடங்கும். பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான மற்ற சலுகைகளில் மருத்துவ வசதிகள், வீடு, தொலைபேசி, தண்ணீர் மற்றும் மின்சாரம் ஆகியவை அடங்கும்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் சட்டம், 1954, ஒரு எம்.பி.க்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று குறிப்பிடுகிறது.
வீட்டுவசதி மற்றும் தொலைபேசி வசதிகள் (நாடாளுமன்ற உறுப்பினர்கள்) விதிகள், 1956 இன் படி: ஒவ்வொரு உறுப்பினரும், அவரது பதவிக் காலம் முழுவதும் ஒரு பிளாட் வடிவில் வீட்டுவசதிக்கு உரிமையுடையவர். ஆனால் இதற்கு உரிமக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
ஒரு உறுப்பினரின் வேண்டுகோளின் பேரில், பங்களா வடிவில் வீட்டுவசதி ஒதுக்கப்பட்டால், அவர் அத்தகைய தங்குமிடத்திற்கு உரிமையிருந்தால் முழு சாதாரண உரிமக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, ராகுலுக்கு டெல்லியில் உள்ள 12 துக்ளக் லேனில் அதிகாரப்பூர்வ இல்லம் ஒதுக்கப்பட்டது.
வழக்கில் அடுத்து என்ன நடக்கும்?
மார்ச் 23, 2023 அன்று சூரத்தில் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா வழங்கிய ராகுலின் தண்டனைக்கு, ஆகஸ்ட் 5 அன்று உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
முன்னதாக, இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி, செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் மனு தாக்கல் செய்தார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 389ன் கீழ், மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றவாளியின் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் தடுத்து நிறுத்தலாம்.
ஆனால் செஷன்ஸ் நீதிமன்றம் மனுவை நிராகரித்தது, தொடர்ந்து ராகுல் உயர் நீதிமன்றத்தை அணுகினார், அதுவும் மனுவை நிராகரித்தது.
உச்ச நீதிமன்ற தடை என்பது ராகுலின் தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என்பதே, இருப்பினும், இது மேல்முறையீட்டு நீதிமன்றம் வழக்கைத் தீர்மானிக்கும் வரை மட்டுமே.
தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு மனு சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.