Advertisment

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: பறிபோகும் சலுகைகள், நன்மைகள் எவை?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலவச தொலைபேசி அழைப்புகள் முதல் பயணப் படிகள் வரை பல்வேறு வசதிகளை அனுபவிக்கின்றனர். எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி இழக்கும் சலுகைகள் இங்கே

author-image
WebDesk
New Update
Rahul Gandhi

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் கே.சி.வேணுகோபால், அசோக் கெலாட் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருடன் புது தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் சனிக்கிழமை, மார்ச் 25, 2023 அன்று செய்தியாளர்களைச் சந்திந்தப்போது. (பி.டி.ஐ புகைப்படம்/ ரவி சவுத்ரி)

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019 ஆம் ஆண்டு தனது 'மோடி குடும்பப்பெயர்' கருத்துக்காக அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (மார்ச் 24) லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். வெள்ளிக்கிழமை காலை மக்களவைக்கு ராகுல் காந்தி வந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது.

Advertisment

தகுதி நீக்க அறிவிப்புக்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, சசி தரூர், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மேலிட தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனா (யு.பி.டி) தலைவர் உத்தவ் தாக்கரே, ஆம் ஆத்மி கட்சி தலைவர் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்: ராகுல் காந்தி தகுதி நீக்கம்: அடுத்து என்ன நடக்கும்?

எம்.பி.யாக இருந்தால் கிடைக்கும் வசதிகளை இழக்கிறார்

லோக்சபா உறுப்பினர் பதவியை இழப்பது என்பது, எம்.பி.க்கள் பெறும் பல வசதிகளை இழப்பதுடன் சேர்ந்து வருகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் "திறம்பட செயல்படும் நோக்கில்" சில சலுகைகள் மற்றும் நன்மைகளுக்கு உரிமையுடையவர்கள். இவை பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியச் சட்டம், 1954 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. சட்டத்தின் சமீபத்திய திருத்தம் மே 11, 2022 அன்று செய்யப்பட்டது.

இவற்றில் சில சலுகைகள் மற்றும் பலன்கள் பின்வருமாறு.

'கடமையில் இருப்பதற்காக' சம்பளம் மற்றும் செலவினப்படிகள்

ஒரு எம்.பி.க்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் மற்றும் பணியின் போது வசிக்கும் எந்த காலகட்டத்திலும் ஒரு நாளைக்கு ரூ.2,000 செலவினப்படிகள் கிடைக்கும். 'கடமையில் இருக்கும் காலம்' என்பது, ஒரு உறுப்பினர் நாடாளுமன்றத்தின் அமர்வு அல்லது ஒரு குழுவின் அமர்வு நடைபெறும் இடத்தில் அல்லது அத்தகைய அமர்வில் கலந்துகொள்வதன் நோக்கம் அல்லது உட்கார்ந்திருப்பது அல்லது அத்தகைய பிற வணிகத்தில் கலந்துகொள்வதன் நோக்கத்திற்காக, அத்தகைய உறுப்பினராக அவரது கடமைகளுடன் தொடர்புடைய பிற வணிகங்கள் பரிவர்த்தனை செய்யப்படும் இடத்தில் இருக்கும் காலம் என்று பொருள்படும்.

எம்.பி.க்களின் சம்பளம் மற்றும் தினசரி செலவினப்படிகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, செலவு பணவீக்க குறியீட்டின் அடிப்படையில் அதிகரிக்கப்படுகிறது.

பயணப் படிகள் மற்றும் இலவச இரயில் போக்குவரத்து

பாராளுமன்ற உறுப்பினராக தமது கடமைகள் தொடர்பாக மேற்கொள்ளும் எந்தவொரு பயணத்தையும் எளிதாக்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பயண படியையும் பெறுகின்றனர். தங்கள் கடமைகளை நிறைவேற்ற அவர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு பயணத்திற்கும் விமானக் கட்டணத்தை அவர்கள் பெறுகிறார்கள். சாலை மார்க்கமாக பயணம் செய்தால், ஒரு கிலோ மீட்டருக்கு 16 ரூபாய் மைலேஜ் கட்டணமாக வழங்கப்படுகிறது.

முன்பு, எம்.பி.க்கள் ரயிலில் பயணம் செய்யத் தேர்வுசெய்தால் அவர்களுக்கும் ரயில் கட்டணம் செலுத்தப்பட்ட நிலையில், இப்போது அவர்களுக்கு இலவச, மாற்ற முடியாத பாஸ் வழங்கப்படுகிறது, இது குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு அல்லது எக்சிகியூட்டிவ் வகுப்பில் எந்த ரயிலிலும் எந்த நேரத்திலும் பயணிக்க உரிமையளிக்கிறது. இந்த பாஸ் எம்.பி பதவியில் இருக்கும் காலத்திற்கு செல்லுபடியாகும். எந்தவொரு காரணத்திற்காகவும் ரயில் அனுமதிச் சீட்டை பெறவில்லை என்றால், எம்.பி.க்கள் இரயிலில் இலவசப் பயணம் செய்ய உரிமையுண்டு, அவர்களது கட்டணம் திருப்பிச் செலுத்தப்படும்.

எம்.பி.க்கள் நீராவி கப்பலில் இலவச போக்குவரத்தை அனுமதிக்கும் விதிமுறைகளும் உள்ளன. கடலோர, தீவு அல்லது ஆற்றங்கரை மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இது வழங்கப்படுகிறது.

தொகுதி செலவினங்கள்

ஒரு உறுப்பினர் தொகுதி உதவித்தொகையாக மாதம் ரூ.75,000 பெற தகுதியுடையவர்.

அலுவலக செலவுப் படிகள்

ஒரு எம்.பி.க்கு அவர்களின் அலுவலக செலவுகளை கவனிக்க மொத்தம் ரூ.60,000 மாதம் ஒதுக்கப்படுகிறது. இதில், 20,000 ரூபாய் ஸ்டேஷனரி பொருட்கள் மற்றும் தபால் கட்டணத்திற்குச் செல்கிறது, லோக்சபா செயலகம், செயலர் உதவி பெறுவதற்காக பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம் 40,000 ரூபாய் செலுத்துகிறது.

வீட்டுவசதி மற்றும் பிற தொடர்புடைய படிகள்

ஒவ்வொரு உறுப்பினரும் தனது பதவிக் காலம் முழுவதும், பணம் செலுத்தாமல், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வடிவில் தங்குவதற்கு உரிமையுண்டு. அவர்களுக்கு பங்களா ஒதுக்கப்பட்டால், சாதாரண உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு இலவச மின்சாரம் (ஆண்டுக்கு 50,000 யூனிட் வரை) மற்றும் இலவச தண்ணீர் (ஆண்டுக்கு 4,000 கிலோ லிட்டர் வரை) ஆகியவையும் உண்டு.

எம்.பி.க்களுக்குச் சில மரச்சாமான்கள் மற்றும் கூடுதல் சேவைகளுக்கான ஏற்பாடுகள் (எம்.பி.யின் இல்லத்தில் இணைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் போன்றவை) மற்றும் குறிப்பிட்ட கால பராமரிப்பு ஆகியவையும் உள்ளன.

தொலைபேசி கட்டணம்

எம்.பி.க்கள் தங்கள் டெல்லி இல்லம் மற்றும் அலுவலகம், அத்துடன் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலத்தில் உள்ள அவர்களது வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் தொலைபேசிகளை இலவசமாக நிறுவுவதற்கும் இயக்குவதற்கும் உரிமை உண்டு. எந்த வருடத்திலும் தொலைபேசியிலிருந்து செய்யப்படும் முதல் 50,000 உள்ளூர் அழைப்புகளுக்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை.

மேலும், எம்.பி.க்கள் தேசிய ரோமிங் வசதியுடன் மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட்டின் (எம்.டி.என்.எல்) ஒரு மொபைல் ஃபோன் இணைப்பையும், எம்.டி.என்.எல் அல்லது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) இன் மற்றொரு மொபைல் ஃபோன் இணைப்பையும் தனது தொகுதியில் பயன்படுத்துவதற்கு தேசிய ரோமிங் வசதியைப் பெற உரிமை உண்டு. அத்தகைய கையடக்கத் தொலைபேசி இணைப்புகளைப் பதிவு செய்தல் மற்றும் வாடகைக்கு எடுப்பது தொடர்பாக அவர் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

மருத்துவ சேவை

500 ரூபாய் (உறுப்பினரின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும்) மாதாந்திரக் கட்டணத்திற்குப் பிறகு, எம்.பி.க்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இலவச மருத்துவச் சேவையைப் பெற உரிமை உண்டு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment