காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்போது உச்ச நீதிமன்றத்தை நாடலாம். இதற்கிடையில், அவர் நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். என்ன வழக்கு இந்த சூழ்நிலைக்கு வழிவகுத்தது?
கிரிமினல் அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஏப்ரல் மாதம், சூரத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம், அதற்கு முந்தைய மாதத்தில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய தண்டனை தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் தலைவரின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
அதாவது 2019-ம் ஆண்டு கேரளாவின் வயநாட்டில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல், நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய இப்போது உச்சநீதிமன்றம் செல்லலாம்.
ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு என்ன?
இந்த சம்பவம் ஏப்ரல் 13, 2019-ல் நடந்தது. மக்களவைத் தேர்தலுக்காக ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். மேலும், கர்நாடகாவின் கோலாரில் நடந்த தேர்தல் கூட்டத்தில் அவர் இந்தியில் கூறினார்: “எல்லா திருடர்களும் ஏன் நிரவ் மோடி, லலித் மோடி, அல்லது நரேந்திர மோடி, 'மோடி' என்ற பெயருடன் வருகிறார்கள்?” என்று கேட்டார். தப்பியோடிய நகைக்கடை வியாபாரி நிரவ் மோடி மற்றும் முன்னாள் கிரிக்கெட் நிர்வாகி லலித் மோடி ஆகியோரைக் குறிப்பிட்டார். இவர்கள் இருவரும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு அடுத்த நாள், உள்ளூர் பா.ஜ.க தலைவரும் குஜராத் மாநில முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் தனிப்பட்ட புகார் ஒன்றை தாக்கல் செய்தார்.
மார்ச் 23, 2023-ல் மாஜிஸ்திரேட் எச்.எச். வர்மா, ஐ.பி.சி பிரிவு 500-ன் கீழ் கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என்று கூறினார். மேலும், அந்த பிரிவின் கீழ் அவருக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 8(3)ஐ செயல்படுத்துகிறது: “எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபர், அத்தகைய குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். அவர் விடுவிக்கப்பட்டதிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.” என்ற் கூறுகிறது.
இதன் விளைவாக, மார்ச் 24-ல் மக்களவைச் செயலகம், ராகுல் காந்தியை குற்றம் சாட்டப்பட்ட மார்ச் 23 முதல் மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்து ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
தகுதி நீக்க உத்தரவுக்குப் பிறகு ராகுல் காந்தி என்ன செய்தார்?
இந்த ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி, ராகுல் காந்தி அடுத்து உயர் நீதிமன்றமான சூரத் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவர் 2 மனுக்களை தாக்கல் செய்தார், ஒன்று இரண்டு வருட சிறைத்தண்டனையை நிறுத்தி வைப்பதற்கும், மற்றொன்று தண்டனையை நிறுத்தி வைப்பதற்குமான மனுக்களை தாக்கல் செய்தார்.
தனக்கு அளிக்கப்பட்ட அதிகபட்ச தண்டனை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதிநீக்கம் செய்யும் தீர்ப்பு என்று வாதிட்டார் என்று ராகுல் காந்தி செஷன்ஸ் நீதிமன்றத்தில் முதல் மனுவில் சமர்பித்தார். இரண்டாவது மனுவில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவரது மக்களவை உறுப்பினர் பதவி மீட்டெடுக்கப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளார்.
ஏப்ரல் 13 அன்று, கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஆர்.பி. மொகேரா தனது உத்தரவை ஏப்ரல் 20-ம் தேதி அறிவிப்பதாகக் கூறினார். அன்று, நீதிமன்றம் இரண்டு மனுக்களையும் நிராகரித்தது.
இதையடுத்து ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது தண்டனைக்கு எதிரான மனுவை நீதிமன்றம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விசாரித்தது. மே 2-ம் தேதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், கோடை விடுமுறைக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
வெள்ளிக்கிழமை (ஜூலை 7) நீதிமன்றம் என்ன கூறியது?
நீதிபதி ஹேமந்த் பிரச்சக், தீர்ப்பின் செயல்பாட்டு பகுதியை உரக்க வாசித்தார், முன்னதாக ராகுல் காந்தியின் தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவு சரியானது மற்றும் சட்ட ரீதியானது என்று கூறினார்.
அத்தகைய தடையை வழங்குவது சட்ட விதிக்கு விதிவிலக்காக இருக்கும் என்று நீதிமன்றம் கூறியது. தண்டனை நிறுத்தப்படாவிட்டால் ராகுலுக்கு எந்த அநீதியும் ஏற்படாது. இருப்பினும், கிரிமினல் மேல்முறையீடு தகுதியின் அடிப்படையில் மற்றும் முடிந்தவரை விரைவாக முடிவு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
வி.டி. சாவர்க்கரின் பேரன் தொடுத்த கிரிமினல் அவதூறு வழக்கு உட்பட 10 கிரிமினல் வழக்குகளை ராகுல் காந்தி எதிர்கொண்டுள்ளதை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது.
இப்போது ராகுல் காந்தி என்ன செய்வார்?
காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடருவோம்” என்று கூறியுள்ளார். உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தை நாடுவார் என்பதே இதற்கு அர்த்தம்.
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தண்டனைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தாலோ அல்லது செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டை அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தாலோ ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டிருக்கும். 2018-ம் ஆண்டு 'லோக் பிரஹாரி வி யூனியன் ஆஃப் இந்தியா' என்ற தீர்ப்பில், தகுதி நீக்கம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்ட தேதியிலிருந்து செயல்படாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.