Advertisment

மத்திய பிரேதேசம் வழியில் ராஜஸ்தான் செல்லுமா? காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி

காங்கிரஸ் கட்சியின்  தலைமைத்துவ கேள்விகள் இன்னும்  தீர்க்கப்படமால் உள்ளன. புத்துயிர் பெறுவதற்கான சிறிய அறிகுறிகளையும் அக்காட்சி வெளிப்படுத்தவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மத்திய பிரேதேசம் வழியில் ராஜஸ்தான் செல்லுமா? காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட், துணை முதல்வர் சச்சின் பைலட் இடையேயான ஆழமான கருத்து வேறுபாட்டை இதுவரை கண்டும் காணாமல் இருந்த காங்கிரஸ் உயர்மட்டக் குழு, தற்போது  ஜெய்ப்பூரில் வேகமாக மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளால் அதிரிச்சி அடைந்துள்ளது.

Advertisment

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என மூத்த தலைவர்கள் கூறி வந்தாலும், மூன்று மாதங்களுக்கு முன்பு காங்கிரசில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறியதால், கமல்நாத் அரசாங்கம் கவிழ்ந்ததை தற்போதைய நெருக்கடி நினைவூட்டுவதாக பல தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள பெரிய பிரச்சினையின் ஒரு பகுதியாக இந்த மோதல் உள்ளது என்று கட்சித் தலைவர்கள் சுட்டிக் காட்டுகின்றன. 'பொறுமையற்ற' இளம் தலைவர்கள் பலர் தங்களின் 'எதிர்காலம்' குறித்து கவலைப்படுகின்றனர். காங்கிரஸ் கட்சியின்  தலைமைத்துவ கேள்விகள் இன்னும்  தீர்க்கப்படமால் உள்ளன. புத்துயிர் பெறுவதற்கான சிறிய அறிகுறிகளையும் அக்காட்சி வெளிபடுத்தவில்லை.

2018 டிசம்பரில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, அசோக் கெலோட், சச்சின் பைலட்  இடையிலான மோதல் போக்கு தொடங்கியது. சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு, அனுபவம் வாய்ந்த அசோக் கெலோட்டை மூன்றாவது முறையாக மாநிலத்தின் முதல்வராக  காங்கிரஸ் உயர் மட்டக்குழு முடிவு செய்தபோது முற்றியது.

2013 வருட சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட  மோசமான தோல்விக்குப்  பின்னர், மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட சச்சின் பைலட், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவராவார். எனவே, மாநில முதல்வர் பதவிக்கு தன்னை நியமிக்காமல் போனது  குறித்து பைலட்  வருத்தமடைந்தார்.

அமைச்சரவை ஒதுக்கீடு தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட மோதல் போக்கை, அப்போதைய கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார். இருப்பினும், அசோக் கெலாட் நிதி, உள்துறை உள்ளிட்ட ஒன்பது துறைகளை கவனித்தி வந்தார்.

மக்களவை தேர்தலில் ஜோத்பூரிலிருந்து தனது மகன் வைபவைக் களமிறக்க அசோக் கெலோட் விரும்பியது மோதலுக்கான அடுத்த அத்தியாயத்தை தொடங்கியது. அசோக் கெலாட் தனது முழு கவனத்தை ஜோத்பூரில் மட்டும் செலுத்தியதாகவும், வேறு இடங்களில் பிரச்சாரம் செய்யவில்லை என்றும் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் படுதோல்விக்குப் பின் சச்சின் பைலட் தரப்பு குற்றம் சாட்டினார்.

அதிகாரப் போராட்டம் தொடர்ந்தது. அக்டோபர் 2019 இல், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாத ஒரு நபர் மேயர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவை சச்சின் பைலட் கேள்வி எழுப்பினார்.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

2019 டிசம்பர் மாதம், அசோக் கெலாட் தலைமையிலான அரசு ஒரு வருடம் நிறைவடைந்தபோது, "இந்த சிறப்பான மைல்கல்லை கொண்டாடும் தருவாயில், எனது அமைச்சகத்தின் கீழ் செய்யப்பட்ட சாதனைகள் என்று   வெளிப்படுத்த எதுவுமே இல்லை" என்று  சச்சின் பைலட் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு, ராஜஸ்தானின் கோட்டாவில் ஜே.கே லோன் தாய் சேய் மருத்துவனை மற்றும் மற்றும் புதிய மருத்துவக் கல்லூரி என்ற அரசு மருத்துவமனையில் அதிகளவில்  பச்சிளம் குழந்தைகள் இறந்தது தொடர்பாக  இருவரும் மீண்டும் வார்த்தை அரசியிலில் ஈடுபட தொடங்கினர். பச்சிளம் குழந்தை இறந்தது தொடர்பாக  கருத்து தெரிவித்த பைலட், "  அதிக கவனத்தோடும், இறக்கத்தொடும் அரசு இந்த விவகாரத்தை கையாண்டிருக்கலாம்" என்று கூறினார். முந்தைய ஆட்சியாளர்கள் மீது பலி போடுவதினால் எந்தவொரு நன்மையையும் நடக்காது என்று அவர் வாதிட்டார்.

​ சமீபத்திய மாநிலங்களவைத் தேர்தலின் போது , பாஜக தனது அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்ததாக அசோக் கெலாட் குற்றம் சாட்டியதை சச்சின் பைலட் வெளிப்படியாகவே எதிர்த்தார். மாநிலங்களவைத் தேர்தலில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் உட்பட கட்சியின் வேட்பாளர்களின் வெற்றியின் பின் செய்தியாளர்களிடம் பேசிய பைலட்  “எங்கள் வேட்பாளர்கள் இருவரும் வெற்றி பெறுவார்கள் என்று நாங்கள் கூறி வந்தோம். நாங்கள் கூறியது உண்மைதான். முன்னர்  எழுப்பட்ட அனைத்து  சந்தேகங்களும் ஆதாரமற்றவை " எனத் தெரிவித்தார்.

சனிக்கிழமையன்று, தி சண்டே எக்ஸ்பிரஸ் கேட்ட கேள்விகளுக்கு சச்சின் பைலட் பதிலளிக்கவில்லை.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெறும் மோதல் என்பதால், விசயங்களை நிதனாமாக கவனித்து வருவதாக பாஜக தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment