முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி இரவு தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பெண் தற்கொலைப் படை குண்டுதாரியால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் யார், உச்ச நீதிமன்றம் எப்படி அவர்களை விடுவிக்க உத்தரவிட்டது என்பதைப் பார்ப்போம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி ஸ்ரீஹரன் உள்ளிட்ட 6 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 11) உத்தரவிட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளான ஆர்.பி.ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரையும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஏழாவது குற்றவாளியான ஏ.ஜி. பேரறிவாளன், மே மாதம் விடுவிக்கப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தனது உத்தரவில் கவனத்தில் எடுத்துக் கொண்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி இரவு, தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், தணு என்ற பெண் தற்கொலைப் படை குண்டுதாரியால் படுகொலை செய்யப்பட்டார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏ.ஜி.பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் 2022-ம் ஆண்டு மே மாதம் வழங்கிய தீர்ப்பு இங்கேயேயும் பொருந்தும் என்று கூறினர். அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் மே 18-ம் தேதி உத்தரவிட்டது.
விடுதலைக்கான காரணம் என்ன?
அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தடுப்பு சட்டமான தடா சட்டம் விசாரணை நீதிமன்றம் ஆரம்பத்தில் இந்த வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. 1999-ல், தடா சட்டம் ரத்து செய்ய அனுமதிக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் 7 பேரின் தண்டனையை உறுதிசெய்தது. மற்ற அனைவரையும் விடுவித்தது. தண்டனை பெற்றவர்கள் எவரும் படுகொலைக் கும்பலின் மையத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை உச்ச நீதிமன்றம் உத்தரவு கூறியது.
இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 7 குற்றவாளிகளில், 1999-ல், உச்ச நீதிமன்றம் 4 பேருக்கு மரண தண்டனையும், மற்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. 2000-ம் ஆண்டில், நளினியின் மரண தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
இந்த வழக்கில் குற்றவாளியான ஏ.ஜி.பேரறிவாளன் மனு மீதான தீர்ப்பை தாமதப்படுத்துவது குறித்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது மனு மீது முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு உரிமை இருப்பதாக 2018 செப்டம்பரில் தெரிவித்தது. சில நாட்களில், அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை, 7 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்தது. ஆனால், ஆளுநர் மாளிகை அதில் பதில் அளிக்காமல் தாமதப்படுத்தியது.
ஜனவரி 22, 2021-ம் தேதி விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநருக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. பின்னர், ஜனவரி 25-ம் தேடி ஆளுநர் அலுவலகம் இந்த குற்றவாளிகள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்குவது குறித்து முடிவெடுக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ஒப்படைத்தது. “மத்திய அரசிடம் பெறப்பட்ட முன்மொழிவு சட்டத்தின்படி செயல்படுத்தப்படும்” என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த ஆண்டு மே மாதம், பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். அது அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் முழுமையான நீதிக்காக அதன் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துகிறது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி யார்?
நளினி முருகன்: சென்னையில் ஒரு செவிலியராக பணி புரிந்தவர். காவல்துறை அதிகாரியின் மகளும், பிரபல சென்னை கல்லூரியில் பட்டம் பெற்றவருமான நளினி இப்போது ஐம்பதுகளின் நடுப்பகுதியில் இருக்கிறார். 7 குற்றவாளிகளில், காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூரில் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்தவர் இவர் மட்டுமே. பின்னர், ராஜீவ் காந்தி வருவதற்கு முன்பு கொலையாளிகள் என்று கூறப்படுபவர்கள் நளினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் காட்டுகிறது.
ராஜீவ்காந்தி கொலைக்குப் பிறகு, நளினியும் மற்றொரு குற்றவாளியான அவரது கணவர் முருகனும் சென்னையை விட்டு வெளியேறி ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்தனர். அப்போது நளினி கர்ப்பமாக இருந்தார். அவர்களின் மகள் பின்னர் பிறந்து ஐந்து வயது வரை சிறையில் வளர்ந்தார்.
நளினியும் முருகனும் தங்களுடைய மகள் சிறையிலிருந்து வெளியே சென்று வேறு குடும்பத்தால் வளர்க்கப்பட்ட பிறகு, மகளை சந்திக்கவே இல்லை என்று நளினியின் வழக்கறிஞர் எம். ராதாகிருஷ்ணன் கூறினார். 1999-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், நளினி ஒரு கீழ்ப்படிதலுள்ள பங்கேற்பாளர். அவர் இந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தார் என்பதை உறுதிப்படுத்த எந்த முக்கிய ஆதாரமும் இல்லை.”… நளினி போன்ற ஒரு பெண் தானாவே சாத்தியமில்லை. சதி வலையின் கூட்டத்திற்குள் சிக்கிக் கொண்டதால் அவர் அந்த இடத்திலிருந்து பின்வாங்கத் துணிந்திருக்க மாட்டார்” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மை உத்தரவில் அவருக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால், 2000-ம் ஆண்டு, ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியின் வேண்டுகோளைத் தொடர்ந்து மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட மற்ற குற்றவாளிகள் யார்?
ஆர்.பி.ரவிச்சந்திரன்: 1980களில் தமிழீழ இயக்கத்துடன் நெருக்கமாக இருந்த இந்தியாவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் உண்மையில் ஆயுதக் குழு உருவாவதற்கு முன்பே தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
1980களின் நடுப்பகுதியில் கடல் வழியாக ரவிச்சந்திரன் இலங்கைக்கு பலமுறை சென்றதாக வழக்குத் தொடரப்பட்டது. உண்மையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல முன்னணி அரசியல்வாதிகளும் அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களுக்குச் சென்றனர். இருப்பினும், ரவிச்சந்திரனுக்கு எதிரான சதி குற்றச்சாட்டுகள் 1999-ல் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் இருந்து தடா பிரிவுகளையும் நிறுத்தி வைத்தது.
- சாந்தன்: இவர் இலங்கை குடிமகன். நீதிமன்ற ஆவணங்களின்படி, சாந்தன் 1991-ல் அப்போதைய கலவரத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையிலிருந்து தப்பி படகு மூலம் சிவராசன் (கொலைக் கும்பலை வழிநடத்தியவர், இவர் உயிருடன் பிடிபடவில்லை) மற்றும் இன்னும் சிலருடன் இந்தியாவுக்குச் வந்ததாக நம்பப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கொலையில் அவரது பங்கு நேரடி மற்றும் செயலில் இருந்தது. பேரறிவாளன், நளினி மற்றும் முருகன் ஆகியோருடன் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.
- முருகன்: வெளிநாடு செல்லும் எண்ணத்தில் நாட்டை விட்டு ஓடி சென்னையை அடைந்த பல இலங்கை இளைஞர்களில் முருகனும் ஒருவர் என்பதை நளினி ஒருமுறை நினைவு கூர்ந்தார். அவர் நளினியின் சகோதரரின் நண்பன். இவர் சிறிது காலம் அவர்கள் வீட்டில் தங்கினார். சிவராசனுடன் நளினியின் முதல் சந்திப்பு முருகன் மூலமாகத்தான் நடந்தது.
- ராபர்ட் பயஸ்: இவரும் இலங்கை இலங்கை குடிமகன். தற்போது 55 வயதாகும் ராபர்ட் பயஸ், செப்டம்பர் 1990-ல் தனது மனைவி மற்றும் சகோதரிகளுடன் இந்தியாவுக்கு வந்திருந்தார். அவருக்கு புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருந்ததாக நம்பப்படுகிறது. சிவராசனுடன் பயஸ் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அவர் சதிச் செயலில் ஈடுபட்டதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டபோது, அவர் இலங்கையில் இந்திய அமைதிப் படையின் (ஐ.பி.கே.எஃப்) அட்டூழியங்களை எதிர்கொண்டவர் என்றும், அந்தக் காலகட்டத்தில் ஒரு குழந்தையை இழந்தவர் என்றும் குறிப்பிட்டது.
- ஜெயக்குமார்: ராபர்ட் பயஸின் மைத்துனர்தான் ஜெயக்குமார். இவர் ராபர்ட் பயஸ் உடன் இந்தியா வந்தடைந்தார். சிவராசனுடன் அவருக்கு இருந்த நெருங்கிய தொடர்பை காரணம் காட்டி கொலையில் அவருக்கு தீவிர தொடர்பு இருப்பதாக அரசு தரப்பு குற்றம் சாட்டியது. ஜெயக்குமார் இலங்கையில் ஐ.பி.கே.எஃப் நடவடிக்கையின் போது நடந்ததாகக் கூறப்படும் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டார்.
- பேரறிவாளன்: ஜூன் 1991-ல் கைது செய்யப்பட்டபோது அவருக்கு வயது 19. சிவராசனுக்கு இரண்டு பேட்டரி செல்கள் வாங்கி தந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். விசாரணையின் போது, 1991-ம் ஆண்டு மே 7-ம் தேதி, சிவராசன் இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய வானொலிச் செய்தியில்: “எங்கள் எண்ணம் எங்கள் மூவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது” என்பது ஒரு ஆதாரம்.
அரசியலமைப்பு பிரிவு 142 என்றால் என்ன?
அரசியலமைப்பு பிரிவு 142-ன் உட்பிரிவு 1 (“உச்ச நீதிமன்றத்தின் ஆணைகள் மற்றும் உத்தரவுகளை அமல்படுத்துதல் மற்றும் கண்டுபிடிப்பு போன்ற உத்தரவுகள் போன்றவை.”) என்று கூறுகிறது. பரிந்துரைக்கப்பட்ட உத்தரவின்படி, “உச்சநீதிமன்றம் அதன் அதிகார வரம்பைப் பயன்படுத்தி, எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது அதன் முன் நிலுவையில் உள்ள விஷயத்தில் முழுமையான நீதியை வழங்குவதற்குத் தேவையான ஆணையை அல்லது அத்தகைய உத்தரவை பிறப்பிக்கலாம். மேலும் அவ்வாறு நிறைவேற்றப்பட்ட எந்த ஆணையும் அல்லது அவ்வாறு செய்யப்பட்ட ஆணையும் இந்தியப் பகுதி முழுவதும் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தச் சட்டத்தின்படியும் அல்லது அதன் கீழ், குடியரசுத் தலைவர் செய்யக்கூடிய விதத்தில் அதற்கான ஏற்பாடு செய்யப்படும் வரையிலும் நடைமுறைப்படுத்தப்படும்”
அடிப்படையில், அரசியலமைப்பின் இந்த விதியானது, ஒரு வழக்கில் முழுமையான நீதியை வழங்க நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த அதிகாரங்களை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“