Rajya Sabha MPs' incomes from directorships, professions: ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் புதிய தேர்தல் கண்காணிப்பகம் இணைந்து வெளியிட்ட ஒரு அறிக்கையில், தற்போது பதவியில் உள்ள 213 மாநிலங்களவை உறுப்பினர்களால் அறிவிக்கப்பட்ட நிதி வருவாய்களை ஆய்வு செய்துள்ளது. இதில் 17 எம்.பி-க்கள் தங்களுடைய பண வருவாய் விவரங்களை தாக்கல் செய்யவில்லை.
தங்கள் வருவாய் விவரங்களை சமர்ப்பித்த 213 எம்.பி-க்களின் அறிவிப்புகளில் 124 எம்.பி-க்கள் (அதாவது 58 சதவீதம்) கிடைக்கவில்லை அல்லது எம்.பி-க்கள் அளிக்க வேண்டிய அறிவிப்புகளில் ஐந்து வகையான வழிகளில் வருமானம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். அந்த ஐந்து வகைகள்; ஊதியம்பெறும் இயக்குநர்கள் பதவி, வழக்கமான ஊதியம் பெறும் செயல்பாடு, நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் பங்குதாரர்கள், கட்டண ஆலோசனை, தொழில்முறை ஈடுபாடு ஆகியவை ஆகும்.
ஊதியம்பெறும் இயக்குநர் பதவி: 24 எம்.பி.க்கள் இந்த படிவத்தில் தங்களுக்கு நிதி வருவாய் இருப்பதாக அறிவித்துள்ளனர். ஊதியம் பெறும் இயக்குநராக அதிகபட்ச தொகையை பெற்றுள்ளதாக கர்நாடகாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.பி டி.குபேந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். அவர் ஆண்டுக்கு ரூ.40.68 கோடி பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து, ராஜீவ் சந்திரசேகர்(பாஜக, கர்நாடகா) ஆண்டுக்கு ரூ.7.03 கோடி பெறுவதாக தெரிவித்துள்ளார். இவருக்கு அடுத்து, அப்துல் வஹாப் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரளா) ரூ.3.34 கோடி பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த பிரிவில் கோகுலகிருஷ்ணன்(அ.இ.அ.தி.மு.க, புதுச்சேரி) அதிகப்பட்சமாக 7 இயக்குநர் பதவிகளில் இருப்பதாக அறிவித்துள்ளார்.
வழக்கமான ஊதியம் பெறும் செயல்பாடு: இந்த படிவத்தில் 30 எம்.பி.க்கள் (அதாவது 14.1%) இந்த படிவத்தில் தங்களுக்கு நிதி வருவாய் இருப்பதாக அறிவித்துள்ளனர். வழக்கமான ஊதியம் பெறும் நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட மிக அதிகப்பட்ச தொகையை மகேஷ் பொட்டார் ( பாஜக, ஜார்க்கண்ட்) ஆண்டுக்கு ரூ.3.18 கோடி பெறுவதாக அறிவித்துள்ளார். இவரை அடுத்து, பாஜகவின் நியமன எம்.பி மேரி கோம் ஆண்டுக்கு ரூ.2.50 கோடியும் மற்றொரு நியமன எம்.பி ஸ்வப்பன் தாஸ்குப்தா ஆண்டுக்கு ரூ.66.60 லட்சம் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் பங்குதாரர்கள்: 44 எம்.பி-க்கள் (அதாவது 20.7%) இது போன்ற வருவாய் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதில் அதிகப்பட்ச தொகையை ரவிந்திர கிஷோர் சின்ஹா (பாஜக, பீகார்) ரூ.747 கோடி இருப்பதாக தெரிவித்துள்ளர். இவரைத் தொடர்ந்து, அபிஷேக் மனு சிங்வி (காங்கிரஸ், மேற்குவங்கம்) ரூ.386 கோடி என்று அறிவித்துள்ளார். அடுத்து, காக்டே சஞ்சய் தத்தாத்ரேயா(சுயேச்சை,மகாரஷ்டிரா) ரூ.262 கோடி என்று அறிவித்துள்ளார்.
கட்டண ஆலோசனை: இரண்டு எம்.பி-க்கள் மட்டுமே கட்டண ஆலோசனை படிவத்தில் தங்களுக்கு நிதி வருவாய் இருப்பதாக அறிவித்துள்ளனர். நியமன எம்.பி கே.டி.எஸ்.துளசி இந்த வகையில் ரூ.27.50 லட்சம் வருவாய் பெறுவதாக தெரிவித்துள்ளார். எம்.பி டாக்டர் விகாஸ் ஹரிபாவு மஹாத்மி (பாஜக, மகாராஷ்டிரா) ரூ.5.60 லட்சம் வருவாய் பெறுவதாக அறிவித்துள்ளார்.
தொழில்முறை ஈடுபாடுகள்: 40 (18.8%) எம்.பி.க்கள் தொழில்முறை ஈடுபாட்டு படிவத்தில் நிதி நலன்களை அறிவித்துள்ளனர். இது போன்ற தொழில்முறை ஈடுபாடுகள் மூலம் சிங்வி ரூ.177 கோடி பெறுவதாகவும் இவரைத் தொடர்ந்து ப.சிதம்பரம் (காங்கிரஸ், மகாராஷ்டிரா) ரூ.33 கோடியும் துளசி ரூ.27.67 கோடியும் வருவாய் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
பண வருவாய் இல்லை: மேற்கூறிய ஒவ்வொன்றின் கீழும் வருவாய் கிடைக்கவில்லை/ இல்லை என்று அறிவித்த 124 எம்.பி-க்களில், 104 எம்.பி-க்கள்(அதாவது 48.8%) பேர் தங்கள் தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் அறிவித்தபடி ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புள்ள மொத்த சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். அதில் முதல் 4 இடங்களைப் பிடித்தவர்கள்: டி.சுப்பரமணி ரெட்டி (காங்கிரஸ், ஆந்திரப் பிரதேசம்) ரூ.422.44 கோடியும் இவரைத் தொடர்ந்து சி.எம்.ரமேஷ் (தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திரப்பிரதேசம்) ரூ.258.20 கோடி, அம்பிகா சோனி (காங்கிரஸ், பஞ்சாப்) ரூ.105.82 கோடி சொத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.