அபூர்வா விஸ்வநாத், கட்டுரையாளர்
ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பிரச்னையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னால், இந்த தொடரின் முதல் பகுதியில் பகவான் ராம்லல்லா விரஜ்மான், நிர்மோஹி அகாரா மற்றும் உத்தரப்பிரதேச சன்னி மத்திய வஃப் வாரியம் ஆகியோருக்கு இடையே சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பாகங்களாக பிரிக்க உத்தரவிட்ட 2010 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறது. அவ்வாறு தீர்ப்பளிக்கும்போது அலகாபாத் அமர்வு 30க்கும் மேற்பட்ட கேள்விகளை உள்ளடக்கிய எட்டு முக்கிய சிக்கல்களைக் கையாண்டது.
இரண்டாவது பகுதியில் இரு தரப்பினரும் இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு முன்பு அதே எட்டு சிக்கல்களை வாதிட்டனர்.
1989 ஆம் ஆண்டில் இந்து தரப்பினர், குறிப்பாக ராம் விரஜ்மான் உரிமை கோரியதில் காலக்கெடு இருந்ததா?
இந்து கட்சிகள்: பகவான் ராம்லல்லா விரஜ்மான் தரப்பில் உரிமை கோரி தாக்கல் செய்ததில் காலக்கெடு இல்லை என்பதை உயர் நீதிமன்றம் கண்டறிந்து ஆதரித்தது. அப்போது, அவர்கள், நிர்மோஹி அகாரா மற்றும் உத்தரப்பிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியம் தங்கள் கோரிக்கைகளை தாக்கல் செய்வதில் தாமதம் செய்ததாகவும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தாக்கல் செய்தால் உடைமையைப் பெற உரிமை இல்லை என்றும் உயர் நீதிமன்றம் கூறியது சரியானது என்றும் வாதிட்டனர்.
முஸ்லிம் கட்சிகள்: மையக் குவிமாடத்தின் கீழ் சிலைகள் காணப்பட்டபோது, உரிமை கோரி தாக்கல் செய்வதற்கு 12 ஆண்டு காலக்கெடு தொடங்கியது என்றும் உரிமை கோரி 1961 டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்டது என்றும் வாதிட்டனர். உயர் நீதிமன்றம் கூறியது ஆறு ஆண்டுகள் அல்ல என்றும் முஸ்லிம் தரப்பு வாதிட்டனர். 1950 ஆம் ஆண்டில் முதல் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டபோது கால வரையறை பொருந்தும் என்று உயர் நீதிமன்றம் முடிவு செய்தது.
1885 இல் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கு நிலப் பிரச்னை கேள்விக்கு தீர்வு காணுமா?
இந்து கட்சிகள்: அயோத்தியில் இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் நிலத்தில் மசூதி கட்டப்பட்டதாக ஃபைசாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் 1886-இல் சிவில் வழக்கில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அவர் கோயில் கட்ட அனுமதி வழங்கவில்லை என்றாலும் இது நிலம் வைத்திருப்பது என்ற கேள்வியை தீர்க்கிறது. இந்த கண்டுபிடிப்பு தவறானது என்பதை முஸ்லிம் தரப்பினர் காட்ட வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்.
முஸ்லிம் கட்சிகள்: 1885 ஆம் ஆண்டு வழக்கு இந்த பிரச்சினையில் தீர்வு காணப்பட்ட சட்டமாக ஒப்புக் கொள்ள முடியாது என்று வாதிட்டனர். ஏனெனில் இது ஒரு பகுதியை மட்டுமே கையாண்டுள்ளது. வெளி முற்றத்தில் உள்ள சபுத்ரா மற்றும் அடுத்தடுத்த உரிமை கோரல்கள் முழு சர்ச்சைக்குரிய இடத்தையும் உள்ளடக்கியது என்று அவர்கள் வாதிட்டனர்.
கட்டிடம் எப்போது யாரால் கட்டப்பட்டது? யார் நிலத்தை வைத்திருந்தனர்?
சர்ச்சைக்குரிய கட்டிடம் 1528 ஆம் ஆண்டில் பாபரால் கட்டப்பட்டது என்பதை இந்து தரப்பு ஏற்றுக்கொண்டது. இருப்பினும் ஜென்மபூமி தெய்வீகமானது. அங்கே ஒரு சிலைகூட இல்லை என்றாலும் அது தெய்வம்தான். அதனால், நிலம் எப்போதும் இந்துக்களுக்கு சொந்தமானது என்றும் வளாகத்தில் உள்ள ஒரு மசூதி அதனுடைய தெய்வீகத் தன்மையை மாற்றாது என்றும் அவர்கள் வாதிட்டனர்.
ஜென்மபூமியை சட்டப்பூர்வ இடமாக கருத முடியுமா என்பதை நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும். அகாரா தன்னிடம் நிலத்தை வைத்திருப்பதாகக் கூறியதோடு அதற்கு ஷெபைட் உரிமைகள் இருப்பதாகவும், சிலையையும் அதன் சொத்தையும் பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் கட்சிகள்: 1528 ஆம் ஆண்டு மசூதி கட்டப்பட்டது முதல் முஸ்லிம்கள் இப்பகுதியை வைத்திருந்தனர். 1989 வரை இந்துக்களால் இந்த நிலம் ஒருபோதும் உரிமை கோரப்படவில்லை. “நிலத்தை அவர்கள் வைதிருந்தார்களானால், 1934 ஆம் ஆண்டு கலவரத்தில் பாபர் மசூதியின் ஒரு குவிமாடம் ஏன் வீழ்த்தப்பட்டது? அவர்களுக்கு ஏற்கெனவே உரிமை இருந்திருந்தால் 1949 ஆம் ஆண்டு சிலைகளை நிறுவ ஏன் அத்துமீறப்பட்டது” என்று மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் கேட்டார்.
ஒரு பண்டைய இந்து கோயிலின் இடத்தில் மசூதி கட்டப்பட்டதா?
இந்து கட்சிகள்: பாபர் மசூதி நிலத்தில் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே ஒரு பெரிய கட்டமைப்பு இருந்தது. அது காலியான இடமோ அல்லது விவசாய நிலமோ அல்ல என்று இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை சமர்ப்பித்த அறிக்கையை ஆதாரமாக அவர்கள் நம்பியுள்ளனர்.
முஸ்லிம் கட்சிகள்: இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் (ஏ.எஸ்.ஐ) அறிக்கைகள் சிறந்த நிபுணர்களின் கருத்துக்கள் என்று இந்த வழக்கை தீர்மானிக்க ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் வாதிட்டனர். தொடர்ச்சியான அறிக்கைகள் மற்றும் ஏ.எஸ்.ஐ. அதிகாரிகளால் தொல்பொருள்கள் பற்றி அளிக்கப்பட்ட அறிக்கைகளில் உள்ள முரண்பாடுகளையும் எடுத்துரைத்தனர். அதனால், நீதிமன்றம் அதை ஆதாரமாக ஏற்கக் கூடாது என்று வாதிட்டனர். மேலும், இந்து தரப்பினரால் நம்பப்பட்ட நிலவியலையும் புத்தகங்களையும் சரிபார்க்கப்பட்ட வரலாற்றுக் நிகழ்வுகளாக கருத முடியாது என்றும் அவர்கள் வாதிட்டனர்.
சிலைகள், வழிபாட்டுப் பொருட்கள் 1949 டிசம்பர் 22-23 இரவில் வைக்கப்பட்டதா அல்லது அவை ஏற்கெனவே இருந்ததா?
இந்து கட்சிகள்: 1949 ஆம் ஆண்டில் சிலைகள் மத்திய குவிமாடத்தின் கீழ் வைக்கப்பட்டதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே நேரத்தில் அவை முன்பே இருந்தன என்று இந்து தரப்பு வாதிட்டது. வாதங்களின் போது, நீதிபதி பூஷண் 1935-க்கு முன்னரே சிலைகளும் கர்ப்ப கிரகமும் இருந்ததை குறிப்பிட்ட தனிநபர்களின் வாய்மொழி ஆதாரத்தைக் குறிப்பிட்டார்.
முஸ்லிம் கட்சிகள்: சிலைகளை மத்திய குவிமாடத்தின் கீழ் வைப்பது ஒரு திட்டமிட்ட மறைமுகமான தாக்குதல் மற்றும் அத்துமீறல் என்ற வாதத்தை அவர்கள் தொடர்ந்து வைத்தனர்.
வெளிப்புற முற்றத்தில் ராம் சபுத்ரா, பந்தர் மற்றும் சீதா ரசோய் சிலைகள் இருந்ததா?
இந்து கட்சிகள்: அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பில் மூன்று நீதிபதிகளும் 1855 க்கு முன்னர் ராம் சபுத்ரா, பந்தர் மற்றும் சீதா ரசோய் சிலைகள் இருந்ததாக ஒப்புக் கொண்டதால், இது உச்ச நீதிமன்றத்தின் முன் ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் அல்ல.
முஸ்லிம் கட்சிகள்: 1949 க்கு முன்னர் ராம் சபுத்ரா, இந்து தெய்வங்களின் சிலைகள் இருந்தன என்பதை முஸ்லிம் தரப்பு ஒப்புக்கொள்கிறது. ஆனால், இந்துக்கள் அந்த இடத்தின் மீது உரிமை கொண்டிருக்கவில்லை என்றும் பிரார்த்தனை செய்ய மட்டுமே உரிமை உண்டு என்றும் அவர்கள் வாதிட்டனர்.
நிலம் யாரிடம் இருந்தது சொத்துப் பத்திரம் யார் வைத்திருந்தார்கள்?
இந்து கட்சிகள்: சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மட்டுமல்லாமல், அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தையும் இந்து தரப்பு உரிமையை அறிவிக்க முயன்றனர். தெய்வத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் தெய்வத்திற்கு எதிர்மறையான உரிமைகோரல்களைத் தாக்கல் செய்வதிலிருந்து நிர்மோஹி அகாரா தானாகவே உரிமையைஇழந்துவிட்டது என்று வாதிட்டனர்.
முஸ்லிம் கட்சிகள்: உத்தரப்பிரதேச சன்னி மத்திய வஃப் வாரியம், 1989 ஆம் ஆண்டு ராம்லல்லா விரஜ்மான் தெய்வத்தின் சார்பாக 1989-இல் சிறப்பு உரிமையாளர்கள் உரிமை கோரப்படும் வரை, நிர்மோஹி அகாராவும் வஃப் வாரியமும்தான் அந்த இடத்தின் உண்மையான சட்டப்பூர்வ ஒரே உரிமையாளர்கள் என்று வாதிட்டது. எப்படியாயினும், ஷெர்மிட் உரிமைகள் பத்திரத்தை மாற்ற முடியாது என்ற அடிப்படையில் நிர்மோஹி அகாராவின் உரிமைப் பத்திரத்துக்கு எதிராக வஃப் வாரியம் வாதிட்டது. மேலும், அகாராவுக்கு கடமைகளும் உரிமைகளும் இல்லை என்றும் வாரியம் வாதிட்டது. முஸ்லிம் தரப்பு அவர்கள் பிரச்னை செய்த பகுதிக்கு மட்டுமே உரிமை கோரியது. ஆனால், நிலம் கையகப்படுத்தப்படவில்லை. மேலும், அது ராம் சபுத்ராவின் வெளி முற்றத்தில் இந்துக்களை வழிபட அனுமதிக்கும் என்றும் கூறியது. 1992 டிசம்பர் 6 ஆம் தேதி மசூதி இடிக்கப்படுவதற்கு முன்னர் அங்கே மசூதி இருந்ததால் அதை மீட்டெடுக்க தங்களுக்கு உரிமை உண்டு என்று அவர்கள் வாதிட்டனர்.
பாபர் மசூதி முறையான மசூதியாக இருக்கிறதா?
இந்து கட்சிகள்: மசூதியின் தூண்களில் தேவநாகரி எழுத்தில் கல்வெட்டுகள் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள ஏ.எஸ்.ஐ அறிக்கைகளை மேற்கோள் காட்டிய இந்து தரப்பு, இஸ்லாத்தின் கொள்கைகளின்படி இந்த அமைப்பு சரியான மசூதி அல்ல என்று வாதிட்டனர். தொழுகை நடத்தப்படும் எல்லா இடத்தையும் மசூதியாக கருத முடியாது என்றும் அவர்கள் வாதிட்டனர். மசூதியில் தொழுகை நடத்தப்பட்டதாக முஸ்லிம் தரப்பினர் கூறியுள்ளனர்.
முஸ்லிம் கட்சிகள்: சர்ச்சைக்குரிய கட்டிடம் கட்டப்பட்ட நாளிலிருந்து அது ஒரு மசூதியாக உள்ளது என்று முஸ்லிம் தரப்பு கூறியது. 1934 ஆம் ஆண்டு கலவரங்களுக்குப் பிறகும் நமாஸ் செய்யப்பட்டது என்றும் பாபர் மசூதி தொழுகைக்கு ஒரு இமாம் தலைமை தாங்கினார் என்றும் ஒரு முஸ்ஸின் அஸான் ஓதினார் என்றும் அவர்கள் வாதிட்டனர்.
இருப்பினும், மசூதியை நிர்மாணிப்பதை இறையியலின் அடிப்படையில் கேள்வி கேட்க முடியாது. ஆனால், வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் கேள்வி கேட்கலாம் என்று முஸ்லிம் கட்சிகள் ஒப்புக்கொண்டன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.