ராமர் பாலம் அல்லது ஆதம் பாலம் என்று அழைக்கப்டும் இந்த பாலம், ராமேஸ்வரத்தின் பாம்பன் பகுதிக்கும் இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கும் இடையில் கடலுக்கு அடியில் சுமார் 50 கி/மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பாலம் சுண்ணாம்புக் கற்களையும் பவளப்பாறைகளையும் கொண்ட மேடான பகுதியாக காட்சி அளிக்கின்றது. இந்த சுண்ணாம்புக் கற்களும், பவளப்பாறைகளும் எந்த காலத்தைச் சேர்ந்தவை என்பதை கணக்கிட விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஒன்று அங்கு செல்ல உள்ளது. இந்த பாலத்தைப் பற்றி ராமணத்தில் குறிப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
இந்த பாலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய கோவாவைச் சேர்ந்த சி.எஸ்.ஐ.ஆர் – தேசிய கடல்சார் நிறுவனம் திட்டம் ஒன்றை சமர்ப்பித்து இருந்தது. இந்த திட்டத்திற்கு இந்திய தொல்பொருள் ஆய்வின் கீழ் செயல்படும் தொல்பொருளியல் தொடர்பான மத்திய ஆலோசனைக் குழு ஒப்புதலும் அளித்துள்ளது. இந்த பாலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதோடு அங்குள்ள சுண்ணாம்புக் கற்கள் மற்றும் பவளப்பாறைகளின் உண்மையான வயதைக் கண்டுபிடிக்கும் பணியிலும் ஈடுபட உள்ளது.
கடலுக்கடியில் உள்ள ராமர் பாலத்தில் அப்படி என்ன தொல்பொருள் ஆராய்ச்சி நடக்கப் போகிறது?
சி.எஸ்.ஐ.ஆர் – தேசிய கடல்சார் நிறுவனத்தின் குழு 3 ஆண்டுகள் கடலுக்கடியில் உள்ள ராமர் பாலத்தைப் பற்றி விரிவான அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளனர்.
“ராமர் பாலத்தை கட்டியது மனிதர்களா? அல்லது வேறு யாருமா? என்பதைப் பற்றி விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ள இருக்கிறோம். அதோடு ரமணாயணத்தில் குறிப்பிட்டுள்ள பாலத்தின் வயதிற்கும், இந்த ஆராய்ச்சியின் மூலம் கிடைக்கும் தரவுகளின் வயதிற்கும் ஒற்றுமை உள்ளதா என்பதை கண்டறிய போகிறோம்” என்று சி.எஸ்.ஐ.ஆர் – தேசிய கடல்சார் நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் சுனில் குமார் சிங்.
கடலுக்கடியில் உள்ள கற்களில் ஆராய்ச்சி மேற்கொள்ள இருக்கும் விஞ்ஞானிகள் சமீபத்திய அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்த உள்ளனர். அதோடு கிடைக்கும் தரவுகளின் வயதை, கார்பன் டேட்டிங் நுட்பத்தின் மூலம் கண்டிப்பிக்க உள்ளனர்.
இந்த திட்டம் எவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது?
இந்த திட்டம் மார்ச் இறுதிக்குள் முறையாக தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில், முதலில் நீருக்கடியில் எடுக்கப்படும் புகைப்படங்களைப் பயன்படுத்தி ஏதேனும் வசிப்பிடங்கள் நீரில் மூழ்கியிருக்கிறதா என்று சோதிக்க உள்ளனர். பின்னர் பாலத்தின் கட்டமைப்பைப் புரிந்துகொள்ள அந்த இடத்தின் வரைபட (புவி இயற்பியல்) கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளனர்.
இது பற்று சி.எஸ்.ஐ.ஆர் – தேசிய கடல்சார் நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் சுனில் குமார் சிங் கூறியது: “இந்தப் பாலம் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகியுள்ளது. எனவே முதலில் பாலத்தை பற்றிய தெளிவான அமைப்பை கண்டறிய உள்ளோம். அதோடு அதன் துணை மேற்பரப்பு அமைப்பில் ஆக்கபூர்வமான சர்வே ஒன்று எடுக்க இருக்கிறோம். அப்படி எடுக்கும்போது பாறைகளை குடைய மாட்டோம். அதோடு இந்த பாலம் மர அடுக்குகளைக் கொண்டுள்ளது என்று சில புத்தகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றைச் சிதைக்காமல் உயர்நிலை நுட்பங்களைப் பயன்படுத்தி, தேட உள்ளோம். தேடிச் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை எங்களிடம் உள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தியோ அல்லது இந்தியாவில் உள்ள ஆய்வகங்களில் உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தியோ அதன் வயதை கணக்கிட உள்ளோம் ” என்று கூறியுள்ளார்.
என்னென்ன அறிவியல் சோதனைகள் செய்யப்பட உள்ளன? எந்த மாதிரியான சிறப்பு குழுக்கள் இந்த திட்டத்தில் அங்கம் வகிக்க போகிறார்கள்?
அனுபவமுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், டைவிங்கில் பயிற்சி பெற்றவர்கள், குளியல் அளவீடு, கடல் தளங்களின் ஆய்வு, மற்றும் நில அதிர்வு ஆய்வுகளில் அனுபவமுள்ள விஞ்ஞானிகள் உள்ளடக்கிய குழுக்களைச் சேர்ந்தவர்கள் இந்த திட்டத்தில் பணிபுரிய உள்ளனர்.
ராமர் பாலத்தில் காணப்படும் கற்கள் சிறு சிறு மணற் திட்டுகளாக காணப்படுவதோடு ஆழமற்ற பகுதியாகவும் உள்ளது. எனவே சிறிய படகுகள் மூலம் அங்கு சென்று ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளனர்.
இந்த ஆராய்ச்சியில் இரண்டு கடல்சார் இயந்திரங்களை பயன்படுத்த உள்ளனர். ஒன்று ஆர்.வி.சிந்து சங்கல்ப், இது கடலுக்கடியில் சுமார் 56 மீட்டர் ஆழம் செல்லக்கூடிய திறன் கொண்டது. இரண்டாவது ஆர்.வி.சிந்து சாதனா, இது கடலுக்கடியில் அதிகபட்சமாக 80 மீட்டர் ஆழம் செல்லக்கூடிய திறன் உடையது. இந்த திட்டத்தில் அதிக ஆழத்தில் உள்ள மாதிரிகளை சேகரிப்பதற்கும் குளியல் அளவீடு செய்யும் நோக்கங்களுக்காகவும் சிந்து சாதனா பயன்படுத்தப்பட உள்ளது.
திட்டமிட்ட சோதனைகளில் இரண்டு:
சைடு ஸ்கேன் சொனார் :
சைடு ஸ்கேன் சொனார் மூலம் அனுப்பப்படும் அலைவரிசைகள் பாலத்தில் உள்ள கடல் தளங்களை கண்டறிய உதவதோடு, பாலத்தின் வெளிப்புற தோற்றத்தை துல்லியமாக கணக்ககீடு செய்ய உதவும்.
சிலோ நில அதிர்வு ஆய்வு:
சிலோ நில அதிர்வு ஆய்வின் மூலம், பாலத்தின் மீது மெதுவான நில அதிர்வை ஏற்படுத்துவர். இந்த நில அதிர்வை பயன்படுத்தி பாலத்தினுள் அதிர்வலைகளை ஊடுருவ செய்வார்கள். இந்த அதிர்வலைகள் பிரதிபலித்த அல்லது ஒளிவிலகலுக்கு உள்ளாகிய சமிக்ஞைகளை(சிக்னல்ஸ்) தரும், அவற்றை கருவிகள் மூலம் கண்டறிந்து பாலத்தின் துணை மேற்பரப்பின் கட்டமைப்பை எளிதில் அறிய இது உதவுகின்றது.
கடலுக்கடியில் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்வது ஏன் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது?
இந்தியா 7,500 கிலோமீட்டருக்கும் அதிகமான பரந்து விரிந்த கடற்கரையை கொண்ட நாடக உள்ளது. கடல்கள் பழைய கால பதிவுகளை உள்ளடக்கிய பொக்கிஷமாக இருக்கிறது. இதன் மூலம் கடல்வாழ் விலங்கினங்களின் பரிமாற்றங்கள், கடலோர வாழ்வுகள், வாழ்விடங்கள், குடியேற்றங்கள் மற்றும் நாகரிகங்கள் என அனைத்தைப் பற்றியும் விரிவாக அறிய முடிகின்றது. கடலின் காலநிலைகளைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளும் போது கடல் மட்ட மாற்றங்கள் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.
கடல் வழி பயணம் மேற்கொண்டு தொலைந்து போனவர்கள், புதிய நில மற்றும் தீவு பகுதிகளை கண்டுபிடித்ததாக கடந்த கால வரலாறுகள் கூறுகின்றன. இவர்கள் ஜி.பி.எஸ் கண்டுபிடிப்பதற்கு முன்னரே பல வகை கடல் பயணத்தை மேற்கொண்டு இருந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடல் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபடும் போது உடைந்த கப்பல்களையும், அதன் பாகங்களையும் கண்டறிய முடிகின்றது. அதோடு கடலில் புதைந்து கிடைக்கும் பல்வேறு தகவல்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன என்று கடல் ஆராச்சியில் ஈடுபடுபவர்கள் கூறுகின்றனர்.
இந்தியா கடலுக்கடியில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதா?
தேசிய கடல்சார் நிறுவனத்தால் குஜராத்தின் கடற்கரை பகுதியிலும், துவாரகாவின் ஒரு பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட கடலுக்கடி தொல்பொருள் ஆய்வின் போது, சிதறடிப்பட்ட கற்களை 3 முதல் 5 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டன. இவை அந்த இடங்களில் பண்டைய துறைமுகம் இருந்ததற்கான சான்றுகளை அளிக்கின்றன. அதைப்போல தமிழகத்தின் மகாபலிபுரத்தில் தொலைந்து போன கடற்கரை கோவில்களை தேடும் பணியிலும் தேசிய கடல்சார் நிறுவனம் ஈடுபட்டது.
ஒரிசாவின் கடல் பரப்பில் கடல்சார் ஆய்வு மேற்கொண்டபோது உடைந்து போன கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு கோவாவில் தொலைந்து போன துறை முகம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.