RBI Monetary Policy Review 2019:புதன்கிழமை தனது மானிடரி கொள்கை மதிப்பாய்வில், ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) குறைக்க முடிவு செய்தது. ரெப்போ விகிதம் என்பது ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் விகிதமாகும். 100 அடிப்படை புள்ளிகள் குறைந்தால் 1% ரெபோவில் மாற்றம் எனக் கருதப்படும் .கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தில் 110 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மானிடரி கொள்கை முக்கியத்துவம் என்ன?
மொத்த உள்நாட்டு உற்பத்தியால்(GDP) அளவிடப்படும் எந்தவொரு பொருளாதார செயல்பாடு நான்கு வழிகளில் நடக்கும் நடக்கும் .
- ஒன்று, தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் நுகர்வுக்காக பணத்தை செலவு செய்வார்கள்.
- இரண்டு, அரசாங்கம் தனது அரசியல் வாக்குறுதிகளுக்காக செலவுசெய்யும் .
- மூன்று, தனியார் துறை வணிகங்கள் அவற்றின் உற்பத்தித் திறனுக்காக “முதலீடு” செய்கின்றனர்.
- நான்கு, நிகர ஏற்றுமதிகளுக்கான ஒட்டு மொத்த செலவு (நிகர ஏற்றுமதிகள் என்பது ஒரு நாட்டின் மொத்த ஏற்றுமதியின் மதிப்பிலிருந்து அதன் மொத்த இறக்குமதியின் மதிப்பைக் கழித்தால் வரும் அளவு )
இந்த நான்கு பொருளாதார செயல்பாடுகளுக்கும் ஒரு அடிப்படையான கேள்வி ஒன்று உள்ளது... இவற்றிற்கு தேவை பணம். ஆனால் அந்த பணத்தின் விலை என்ன? என்பதே அந்த கேள்வி....
இந்திய ரிசர்வ் வங்கியின் மானிடரி கொள்கை இந்த கேள்விகளுக்கு தான் பதில் சொல்கின்றது. ஒரு பணத்திற்கான விலை அதன் தேவைகளுக்கு ஏற்ப மாறும். இந்த தேவைகளுக்குத் தான் வட்டி விகுதம் என்று ஒன்றுள்ளது. உதாரணத்திற்கு, பணத்தேவை அதிகம் இருந்தால் அதற்கான வட்டி விகுதமும் அதிகமாய் இருக்கும். இந்த வட்டி விகுதத்தை நிர்ணயிப்பது நமது ரிசர்வ் வங்கியின் மிக முக்கியமான கடமை. ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார செயல்பாட்டிற்கும் வட்டிவிகிதத்தை கண்டுபிடிப்பது கடினமே என்றாலும்,பொருளாதார தத்துவ அடிப்படையில் ஆர்பிஐ-யின் ரெப்போ விகிதம் மற்ற எல்லா வட்டி விகிதங்களையும் தீர்மானிக்கும் சக்தியாகவே உள்ளது. சுருக்கமாக சொன்னால் உங்கள் கார் அல்லது வீட்டிற்கான ஈ.எம்.ஐ-யை ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் ரெபோ அடிப்படையில் தான் முடிவாகிறது.
சரி,ரெப்போ விகிதம் என்றல் என்ன?
ரிசர்வ் வங்கிக்கும்,வணிக வங்கிகளுக்கு இடையிலான மறு கொள்முதல் ஒப்பந்தங்களுக்கு ரெப்போ மற்றும் தலைகீழ் ரெப்போ பயன்படுகின்றன. ரெப்போ விகிதம் என்பது கமர்சியல் வங்கியை ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்குவதற்கான வட்டி வீதமாகும். எனவே, ரெப்போ வீழ்ச்சியடைந்தால், பொருளாதாரத்தில் அனைத்து வட்டி விகிதங்களும் வீழ்ச்சியடைய வேண்டும். ஏனெனில், வங்கிகளுக்கு கம்மியான வட்டியில் தடையில்லாமல் பணம் வரத் தொடங்கும். நாட்டில் பணத் தட்டுப்பாடு இல்லாமல் போகும். இதனால்,நாம் வாங்கும் வீட்டுக்கடன்களில் கூட கம்மியான வட்டியில் இருக்கும். அதனால்தான் பொது மக்கள் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கையில் ஆர்வம் காட்ட வேண்டும்.
பிப்ரவரி மாதத்திலிருந்து 110 அடிப்படை புள்ளிகள் குறைந்தாலும் நமது கடன்களுக்கு வட்டி விகிதங்கள் குறைய வில்லையே ஏன்?
ரிசர்வ் வங்கி ரெப்போ-வைக் குறைக்கும் போதெல்லாம் உங்களது வங்கி லெண்டிங் விகிதத்தைக் குறைக்க வேண்டும். ஆனால் , நமது வங்கிகள் அவ்வாறு செய்வதில்லை என்பதே இயல்பான உண்மை.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/growth-3-300x262.jpg)
எதன் அடிப்படையில் ஆர்பிஐ வட்டிவிகிதத்தை தீர்மானிக்கிறது?
அன்றாட பொருட்களின் விலைகள் குறித்து கணிக்க முடியாவிட்டால் வாழ்க்கை எவ்வளவு குழப்பமானதாக இருக்கும். உதாரணமாக, ஒரு நாளைக்கு பெட்ரோலின் விலை 150,மறுநாளே 30 ரூபாய் இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தியுங்கள். எனவே,ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை விலை ஸ்திரத்தன்மையை மனதில் வைத்துதான் முடிவு செய்கிறது.
எனவே, பணவீக்கம் அதிகமாய் இருந்தால்(எ.கா - தக்காளி கிலோ 100) ஆர் பி ஐ பணத்திற்க்கான வட்டி விகுதத்தை அதிகரிக்க பார்க்கும் .ஆகையால்,ரெப்போ விகுத்தையும் அதிகரிக்கும் .பணவீக்கம் கம்மியாய் இருந்தால் (எ.கா- தக்காளி கிலோ 5 ) ஆர்பிஐ பணத்திற்கான வட்டி விகிதத்தை குறைக்கப் பார்க்கும். ஆகையால் ,ரெப்போ விகிதத்தையும் குறைக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/anemic-growth-300x122.jpg)
ரிசர்வ் வங்கியின் இன்னும் ஒரு முக்கிய கடமை பொருளாதார வளர்ச்சியைக் கவனிப்பதாகும். உதாரணமாக, பொருளாதார வளர்ச்சி தற்போது மந்தமாக உள்ளதால், பணவீக்க விகிதம் இப்போது பல மாதங்களாக 4% க்கும் குறைவாகவே உள்ளது. ஆகவே, ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைத்து மக்களை அதிகமாக நுகர்வதற்கும் மற்றும் வணிகங்களை அதிக முதலீடு செய்வதற்கும் ஊக்குவிக்கின்றது.
இந்த ரெப்போ குறைவால் நாட்டில் முதலீடு அதிகரிக்குமா?
முதலீடுகள் அடிப்படையில் “உண்மையான” வட்டி வீதத்தைப் பொறுத்தே இருக்கும் . உண்மையான வட்டி விகிதம் என்பது ரெப்போ வீதத்திற்கும் சில்லறை பணவீக்கத்திற்கும் உள்ள வித்தியாசம். முதலீட்டாளர் முடிவை எடுக்கும்போது, இந்த வட்டி வீதமே முக்கியமானது. நீங்கள், மூன்றாவது அட்டவணையில் காணக்கூடியது போல, இந்தியாவில் உண்மையான வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகின்றன, முதலீடுகள் நடக்காததற்கு இது மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும். புதன்கிழமை ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை உண்மையான வட்டி வீதத்தைக் குறைக்கும் மற்றும் அதிக முதலீட்டை ஈர்க்கும்.