இருப்பினும், ரிசர்வ் வங்கி ஸ்டாண்டிங் டெபாசிட் வசதியை (எஸ்டிஎஃப்) அறிமுகப்படுத்தியது - 3.75 சதவீத வட்டி விகிதத்தில் - இது பணப்புழக்கத்தை ஈர்ப்பதற்கான கூடுதல் கருவி - மத்திய வங்கி அதன் இணக்கக் கொள்கை நிலைப்பாட்டை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆனால், பணவீக்க அளவு அதிகரிப்பை அடுத்து அதற்கு குறைவான இடமளிக்கப்படும் என்று சுட்டிக்காட்டியது.
நிதிக் கொள்கைக் குழு ஜி.டி.பி வளர்ச்சியை 7.2 சதவீதமாகக் குறைத்தும், 2022-23 நிதியாண்டில் பணவீக்க 5.7 சதவீதமாக அதிகரிக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் இவை.
ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லை
ரெப்போ வட்டி விகிதங்களை மாற்றாமல் 4 சதவீதமாக வைத்திருக்கும் ரிசர்வ் வங்கியின் முடிவு, வங்கிகள் நிதி அமைப்பில் வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க உதவும். இது பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உதவும். கடன் வாங்குபவர்கள் குறைந்தபட்சம் தற்போதைக்கு கூடுதலாக இ.எம்.ஐ மற்றும் கூடுதலாக கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை.
ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லை; எஸ்.டி.எஃப் அறிமுகம்
வங்கிகளில் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன் விகிதமான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை, 3.35 சதவீதமாக மாற்றாமல் வைத்திருக்கிறது.
ஒரு நிலையான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் மூலம் வங்கி அமைப்பில் பணத்தை அல்லது பணப்புழக்கத்தை தக்கவைத்துக்கொள்ள மத்திய வங்கி விரும்புகிறது. வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருந்தால் நிதிக் கொள்கை சுழற்சி தலைகீழாகி இருக்கும் அது இறுதியில் வட்டி விகிதங்களில் உயர்வுக்கு வழிவகுக்கும்.
“ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் ரிசர்வ் வங்கியின் கருவித்தொகுப்பின் ஒரு பகுதியாக இருக்கும். அதன் செயல்பாடு அவ்வப்போது குறிப்பிடப்படும் நோக்கங்களுக்காக ரிசர்வ் வங்கியின் விருப்பப்படி அமைந்திருக்கும்” என்று நிதிக் கொள்கைக் குழு கூறியது.
எஸ்.டி.எஃப் என்பது எந்தவிதமான பிணையும் இல்லாமல் பணப்புழக்கத்தை ஈர்ப்பதற்கான கூடுதல் கருவியாக இருக்கும். அதன்படி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 3.75 சதவீத வட்டி விகிதத்தில் எஸ்டிஎஃப்-ஐ நிறுவ ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எஸ்.டி.எஃப் 3.75 சதவீத வட்டி விகிதத்துடன், நிலையான விகித ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை எல்.ஏ.எஃப்-ன் கீழ் மாற்றும். எம்.எஸ்.எஃப் மற்றும் எஸ்.டி.எஃப் - இந்த இரண்டு நிலையான வசதிகளும் ஆண்டு முழுவதும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கிடைக்கும்.
இணக்கமான நிலைப்பாடு தொடரும்
“வளர்ச்சிக்குத் தேவையான- அத்தியாவசியம் - வளர்ச்சிக்கான புத்துயிர்ப்பு இடவசதிக் கொள்கை” என்ற தற்போதைய நிலைப்பாடு மறுஆய்வில் உள்ள நிலையில், பொருளாதார மீட்சி தொடர, ரிசர்வ் வங்கி இன்னும் சில காலம் காத்திருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். .
"வளர்ச்சியை ஆதரிக்கும் அதே நேரத்தில், பணவீக்கம் முன்னோக்கி செல்லும் இலக்கிற்குள் இருப்பதை உறுதி செய்வதற்காக, அதற்கான இடத்தை திரும்பப் பெறுவதில் கவனம் செலுத்துவதில் ஒருமனதாக நிதிக் கொள்கைக் குழு முடிவு செய்தது” என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
கச்சா எண்ணெய் மற்றும் பொருட்களின் விலை உயர்வு மற்றும் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் விளைவு ஆகியவற்றின் பின்னணியில், மத்திய வங்கி 2022-23 நிதியாண்டுக்கான வளர்ச்சி முன்னறிவிப்பை 7.8 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாகக் குறைத்துள்ளது. 2022-23ல் சில்லறை பணவீக்கத்தை 4.5 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
"அதிகரிக்கும் புவிசார் அரசியல் பதட்டங்கள் நமது பொருளாதாரக் கண்ணோட்டத்தில் சூழ்நிலையை மோசமாக்கியுள்ளன. பொருட்களின் விலை உயர்வு மற்றும் பதட்ட சூழ்நிலை உலக அளவில் பரவுவதன் மூலம் பொருளாதார மீட்சிக்கு போர் தடையாக இருக்கலாம்” என்று சக்திகாந்த தாஸ் கூறினார்.
ஐரோப்பாவில் சவாலாக இருக்கும் போர்; ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி தயார்
ஐரோப்பாவில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் ஒரு புதிய மற்றும் பெரும் சவாலாக உள்ளது. இது ஏற்கனவே நிச்சயமற்றதாக உள்ள உலகளாவிய கண்ணோட்டத்தை சிக்கலாக்குகிறது என்று சக்திகாந்த தாஸ் கூறினார்.
“புவிசார் அரசியல் சூழ்நிலையின் அச்சுறுத்தலான போக்கு நமக்கு சவாலாக இருப்பதால், இந்தியப் பொருளாதாரத்தை அனைத்து கருவிகளையும் கொண்டு பாதுகாக்க ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் நிரூபித்தபடி, நாங்கள் எந்த விதிகளுக்கும் பணயக்கைதிகள் அல்ல, பொருளாதாரத்தைப் பாதுகாப்பது காலத்தின் தேவையாக இருக்கும்போது எந்த நடவடிக்கையும் பொருட்படுத்தும்படியாக இல்லை” என்று சக்திகாந்த தாஸ் கூறினார்.
“நம்முடைய இலக்குகளான விலை நிலைத்தன்மை, நீடித்த வளர்ச்சி மற்றும் நிதி நிலைத்தன்மை ஆகியவை பரஸ்பரம் வலுவூட்டுகின்றன. மேலும், இந்த அணுகுமுறையால் நாங்கள் தொடர்ந்து வழிநடத்தப்படுகிறோம்” என்றூ சக்திகாந்த தாஸ் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.