பேன்டமிக் காலங்களில் குளிர் காய்ச்சல் தாக்கம் ஏன் குறைகிறது?

இன்ஃப்ளூயன்சா (Influenza) எனப்படும் இந்த குளிர் காய்ச்சல் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய், இவ்விரண்டின் அறிகுறிகளும் பெரும்பாலும் ஒரேபோன்றவைதான்.

Influenza virus
Influenza virus, Flu virus

Influenza activity during Pandemic: அமெரிக்காவிலும், உலகின் பிற பகுதிகளிலும் இன்ஃப்ளூயன்ஸாவின் செயல்பாடு இந்த பேண்டமிக் காலகட்டத்தின் மத்தியில் குறைந்துவிட்டது என அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் (The US Centers for Disease Prevention and Control-CDC) சமீபத்தில் வெளியிட்ட நோயுற்ற தன்மை மற்றும் வாராந்திர இறப்பு அறிக்கையில் (Morbidity and Mortality Weekly Report MMWR) குறிப்பிட்டிருக்கிறது. SARS-CoV-2 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட தணிப்பு நடவடிக்கைகளின் விளைவாக, அமெரிக்காவில் இன்ஃப்ளூயன்ஸா பரிசோதனைக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட சுவாச அறிகுறிகளின் சதவிகிதம் 2.3%-ஆகக் குறைந்திருக்கிறது.

இன்ஃப்ளூயன்ஸா என்றால் என்ன?

‘ஃப்ளூ’ என்றும் அறியப்படும் இன்ஃப்ளூயன்ஸா நோய், மூக்கு, தொண்டை மற்றும் சில நேரங்களில் நுரையீரலைப் பாதிக்கும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் ஏற்படுகிறது. இந்த ஃப்ளூ, லேசான காய்ச்சல் முதல் கடுமையான நோய் சில சந்தர்ப்பங்களில் மரணத்திற்கும் காரணமாகிறது. இதனைத் தடுப்பதற்கான ஒரே சிறந்த வழி ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசி போடுவதுதான். நோய்த்தொற்றுடையவர்கள் இருமலின்போது, தும்மலின்போது அல்லது பேசும்போது வெளியாகும் நீர்த்துளிகள் மூலம் இந்த ஃப்ளூ வைரஸ்கள் பரவுகின்றன.

இன்ஃப்ளூயன்சா (Influenza) எனப்படும் இந்த குளிர் காய்ச்சல் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய், இவ்விரண்டின் அறிகுறிகளும் பெரும்பாலும் ஒரேபோன்றவைதான். அவற்றுள் காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், உடல் சோர்வு, தொண்டை வலி, மூக்கடைப்பு மற்றும் தசை வலி உள்ளிட்டவை அடங்கும்.

Clinical Infectious Diseases (CID) இதழில் வெளியிடப்பட்ட 2018-ம் ஆண்டின் ஆய்வின்படி, அமெரிக்காவில்  அனைத்து வயதினரையும் பாதிப்புக்குள்ளாக்கிய இந்த ஃப்ளூ காய்ச்சலின் பாதிப்பு விகிதம் 3-11.3%. அக்டோபர் 2019 மற்றும் ஏப்ரல் 2020-க்கும் இடையில், 39 மில்லியனிலிருந்து 56 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 410,000 முதல் 740,000 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 24,000 முதல் 62,000 பேர் வரை இறந்துள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பேண்டமிக் காலக்கட்டத்தின்போது இன்ஃப்ளூயன்ஸா செயல்பாடு குறைவதற்கான காரணம் என்ன?

SARS-CoV-2 பரவுதலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சில தலையீடுகள் அதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். மேலும், 2020-2021 வடக்கு அரைக்கோள பருவத்தில் ஃப்ளூ பாதிப்பைக் குறைக்கக் கூடிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி செலுத்தியதும் ஓர் காரணமாக இருக்கலாம். ஆரம்பத்தில், இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் செயல்பாட்டின் வீழ்ச்சி பற்றிய சோதனை குறைந்திருந்தாகக் கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த பேண்டமிக் காலகட்டத்தில் சுவாச நோய் அறிகுறிகளுடன் கூடிய நோயாளிகளுக்கு பொதுவாக கொரோனா வைரஸ் பரிசோதனைதான் முதலில் எடுக்கப்பட்டன.

தெற்கு அரைக்கோளத்தின் பொதுவான இன்ஃப்ளூயன்ஸா பருவமாகக் கருதப்படும் 2020-ம் ஆண்டின் ஜூன்-ஆகஸ்ட் மாதங்களில், ஆஸ்திரேலியா, சிலி மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் குறைந்த அளவிலான இன்ஃப்ளூயன்ஸா செயல்பாட்டைப் பதிவு செய்திருக்கின்றன. மொத்தத்தில் ஃப்ளூ பாதிப்பு, வரலாறு காணாத வகையில் மிகவும் குறைந்திருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Reason for decreased influenza activity during pandemic

Next Story
டிரம்ப் மீது பாலியல் புகார்: யார் இந்த எமி டோரிஸ்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com