குழந்தைகளுக்கு நகைச்சுவை உணர்வு எப்படி தோன்றுகிறது? ஆய்வில் கண்டுபிடிப்பு!

நகைச்சுவை வெளிப்படும் ஆரம்ப வயதையும், வாழ்க்கையின் முதல் வருடங்களில் அது எவ்வாறு உருவாகிறது என்பதையும் ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

சமீபத்தில் வெளிவந்த ஒரு புதிய ஆய்வு, சிறு குழந்தைகளின் வயதின் அடிப்படையில், சிரிக்கவும், கேலி செய்யும் திறனையும் வரைபடமாக்கியுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து, பிறந்தது முதல் 4 வயது வரையிலான கிட்டத்தட்ட 700 குழந்தைகளை உள்ளடக்கிய தரவுகளை பயன்படுத்தி, நகைச்சுவை வெளிப்படும் ஆரம்ப வயதை அடையாளம் காட்டுகிறது. இது பொதுவாக வாழ்க்கையின் முதல் ஆண்டுகளில் எவ்வாறு உருவாகிறது என்பதையும் விளக்கியுள்ளது.

பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான இந்த ஆய்வு, Behavior Research Methods இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி குழு 20-கேள்விகள் கொண்ட ஆரம்பகால நகைச்சுவை ஆய்வை (EHS) உருவாக்கி, பிரிட்டீஷ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடாவைச் சேர்ந்த 0 முதல் 47 மாத வயதுடைய 671 குழந்தைகளின் பெற்றோரிடம், தங்கள் குழந்தையின் நகைச்சுவை வளர்ச்சியைப் பற்றி ஐந்து நிமிடக் கணக்கெடுப்பை நடத்தியது.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் செய்திக்குறிப்பில் இந்த கண்டுபிடிப்புகள் விவரிக்கப்பட்டுள்ளன.

ஒரு மாதம்: சில குழந்தைகள் நகைச்சுவையைப் பாராட்டியதாகக் கூறப்படும் ஆரம்ப வயது. 2 மாதங்களுக்குள் 50% பேர் நகைச்சுவையைப் பாராட்டினர், 50% பேர் 11 மாதங்களில் நகைச்சுவையை உருவாக்கினர் என மதிப்பீடு தெரிவிக்கிறது. குழந்தைகள் நகைச்சுவையை உருவாக்கியவுடன், அதை அடிக்கடி செய்தார்கள், கடந்த 3 மணி நேரத்தில் பாதி குழந்தைகள் கேலி செய்தனர்.

21: கணக்கெடுக்கப்பட்ட குழந்தைகளில் பல்வேறு வகையான நகைச்சுவைகளின் எண்ணிக்கை அடையாளம் காணப்பட்டது. 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உடல், காட்சி மற்றும் செவிவழி நகைச்சுவை வடிவங்களைப் பாராட்டினர் – ஒளிந்து, பிடித்து விளையாடுவது, கூச்சம், வேடிக்கையான முகங்கள், உடல் நகைச்சுவை (எ.கா., உங்கள் தலையை கால்களுக்குள் வைப்பது) மற்றும் வேடிக்கையான குரல்கள் இதில் அடங்கும்.

ஒரு வயது: மற்றவர்களிடமிருந்து ரியாக்‌ஷன்கள் பெறுவதை உள்ளடக்கிய பல வகையான நகைச்சுவைகளை அவர்கள் பாராட்டினர். இதில் கிண்டல், மறைந்த உடல் பாகங்களைக் காட்டுதல் (எ.கா., ஆடைகளை கழற்றுவது), அடுத்தவர்களை பயமுறுத்துதல் மற்றும் தடைசெய்யப்பட்ட தலைப்புகளில் பேசுவது (Taboo Topics எ.கா. கழிவறை நகைச்சுவை) ஆகியவை அடங்கும்.

2 வயது: தவறாகப் பெயரிடுதல், கருத்துகளுடன் விளையாடுதல் (எ.கா., நாய்கள் மூ என்று சொல்கின்றன), மற்றும் உளறல் நிறைந்த வார்த்தைகள் என இவர்களின் நகைச்சுவையானது மொழி வளர்ச்சியை பிரதிபலித்தது. இந்த குழுவில் உள்ள குழந்தைகள் மற்றவர்களை கேலி செய்வதையும், ஆக்ரோஷமான நகைச்சுவை (எ.கா., ஒருவரைத் தள்ளுவது). பாராட்டுவது கண்டறியப்பட்டது.

3 வயது: அவர்கள் சமூக விதிகளுடன் விளையாடுவதைக் கண்டறிந்தனர் (எ.கா. குறும்பு வார்த்தைகளை வேடிக்கையாகச் சொல்வது), மற்றும் சூழ்ச்சி, சிலேடை வார்த்தைகளை புரிந்துகொள்வதற்கான தொடக்கத்தைக் காட்டியது.

பிரிஸ்டல் பல்கலைக்கழகம் முன்னணி எழுத்தாளர் டாக்டர் எலினா ஹொய்க்கா (Elena Hoicka)  கூறுவதை மேற்கோள் காட்டியது: நகைச்சுவை என்பது வாழ்க்கையின் முதல் நான்கு ஆண்டுகளில் ஒரு சிக்கலான, வளரும் செயல்முறை என்பதை எங்கள் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் வாழ்க்கையின் பல அம்சங்களில் அதன் உலகளாவிய தன்மை மற்றும் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நகைச்சுவை முதலில் எவ்வாறு உருவாகிறது என்பதை தீர்மானிக்க கருவிகளை உருவாக்குவது முக்கியம். அறிவாற்றல், சமூகம் மற்றும் மனநலம் ஆகியவற்றின் அடிப்படையில் நகைச்சுவையானது சிறு குழந்தைகள் செயல்பட உதவுகிறது.”

Source: University of Bristol  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Research study reveals the emergence of humour in children

Next Story
திருச்சூர் பூரம் திருவிழா : அறிந்ததும், அறியாததும்!!!thrissur pooram keralas largest temple festival - திருச்சூர் பூரம் திருவிழா : அறிந்ததும், அறியாததும்!!!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express