கோவிட் -19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் விகிதம் மற்றும் உயிரிழந்தோர்களின் விகிதம் பற்றி பரிணாம உயிர் தகவலியல் (பயோ-இன்ஃபர்மேட்டிக்ஸில்) அடைப்படையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிற தொற்று நோய்களைப்போல இந்த தொற்று நோயும் 221 நாடுகளுடைய வெப்பநிலை மற்றும் அட்சரேகைகளுடன் தொர்புடைய ஒன்றாக உள்ளது என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆய்வறிக்கையின் முடிவில் 'மற்ற பருவ நோய் காய்ச்சல் போல, இதும் ஒரு பருவ கால நோயாக இருக்கலாம்' என்று மூத்த எழுத்தாளர் குஸ்டாவோ சீட்டானோ-அனோலஸ் தெரிவித்துள்ளதாக, இல்லினாய்ஸ் பல்கலைக்கழக வேளாண், நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சிகாக முதலில் 221 நாடுகளின் அட்சரேகை, தீர்க்கரேகை மற்றும் சராசரி வெப்பநிலை ஆகியவற்றுடன் தொடர்புடைய தொற்றுநோயியல் தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் பதிவிறக்கம் செய்தனர். அவற்றில் நோய் நிகழ்வு, இறப்பு, மீட்பு வழக்குகள், செயலில் உள்ள வழக்குகள், சோதனை விகிதம், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது போன்றவையும் அடங்கும். இந்த தரவுகள் அனைத்தும் ஏப்ரல் 15, 2020 முதல் உள்ளவையாகும்.
எடுக்கப்பட்ட தரவுகளுக்கும், 221 நாடுகளின் வெப்பநிலை, அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை ஆகியவற்றிற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து புள்ளிவிவர அடிப்படையில் கணக்கிடப்பட்டது. அதில் பூமத்திய ரேகைக்கு நெருக்கமாக உள்ள வெப்பமான நாடுகள் மிகக் குறைவாக பாதிக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
"உண்மையில், எங்கள் உலகளாவிய தொற்றுநோயியல் பகுப்பாய்வில், 221 நாடுகளின் வெப்பநிலை மற்றும் நிகழ்விற்கும், இறப்பு, மீட்பு வழக்குகள் மற்றும் செயலில் உள்ள நிகழ்வுகளுக்கும் இடையில் புள்ளிவிவர ரீதியாக குறிப்பிடத்தக்க தொடர்பைக் காட்டியது. அதே போன்ற தொடர்பு தான் அட்சரேகையுடன் காணப்பட்டது, ஆனால் தீர்க்கரேகையுடன் அந்த தொடர்பு காணப்படவில்லை" என்று சீட்டானோ-அனோலஸ் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil